Published:Updated:

வெற்றியாளர்கள் சொன்ன பிசினஸ் பாடங்கள்... நம்பிக்கை தந்த ‘டை சென்னை’ கருத்தரங்கு!

கருத்தரங்கு
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கு

கருத்தரங்கு

வெற்றியாளர்கள் சொன்ன பிசினஸ் பாடங்கள்... நம்பிக்கை தந்த ‘டை சென்னை’ கருத்தரங்கு!

கருத்தரங்கு

Published:Updated:
கருத்தரங்கு
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கு

கடந்த மே 14-ம் தேதி, சென்னையில் ‘டை சென்னை’ அமைப்பு ‘ஷிஃப்டு 2022’ என்கிற தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்துக்குக் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை பல்வேறு நகரங்களில் இருந்து 750-க்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் வந்திருந்தார்கள். வேறுவேறு தொழில்களைச் செய்யும் தொழில்முனைவோர்கள் ஒரு குழு வாகக் கூடி, தாங்கள் சந்திக்கும் பிரச்னை களுக்கான தீர்வைக் கண்டறிவது எப்படி என்பதையும், தாங்கள் பின்பற்றும் நல்ல விஷயங்களையும் பிற பிசினஸ்மேன்களுடன் பகிர வெளிநாடுகளில் அமைப்புகள் உண்டு. நம் நாட்டில் இப்படிப்பட்ட ஒரு முயற்சியை கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் ‘பவுன்சிங் போர்டு’ என்கிற பெயரில் 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர் கள் தங்கள் அனுபவங்களை இந்தக் கருத் தரங்கில் பகிர்ந்துகொள்ளும்படி அமைத் திருந்தார் டை சென்னை அமைப்பின் நிர்வாக இயக்குநர் அகிலா ராஜேஸ்வர்.

இந்தக் கருத்தரங்கில் முதலில் பேசிய கவின்கேர் குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்க நாதன், “நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் புத்தகங்களைத் தொடவே மாட்டேன், ஆனால் தொழில் தொடங்கியவுடன் அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கிறேன். நல்ல முறையில் பிசினஸ் செய்ய வேண்டும் எனில், நம்முடைய அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் சனிக்கிழமை முழுக்க நான் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள செலவழிக்கிறேன். இப்போது ஈரோடு, கரூர், திருப்பூர் எனச் சில நகரங்களில் மட்டும் நடக்கும் ‘பர்சனல் போர்டு’ என்கிற குழுவை எல்லா நகரங்களிலும் செயல்படுத்தவிருக் கிறோம். தொழில்முனைவோர்கள் அனைவரும் இந்தக் குழுவில் சேர்ந்து, அவர்களை வளர்த்துக் கொள்வதுடன், அவர்களின் பிசினஸையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று பேசினார்.

வெற்றியாளர்கள் சொன்ன பிசினஸ் பாடங்கள்... நம்பிக்கை தந்த ‘டை சென்னை’ கருத்தரங்கு!

அடுத்து பேசிய விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ‘கற்றதும் பெற்றதும்’ என்ற தலைப்பில் பேசினார். ‘‘பவுன்சிங் போர்டில் நுழைந்த பின்பு, நான் இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தது. அதில் இணைந்த பிறகு, கற்ற முதல் பாடம், நமக்குத் தெரியாது என்பதைத் தெரியாது என ஒப்புக் கொள்வதுதான். அப்படித் திறந்த மனதுடன் பிரச்னைகளை அணுகும்போது நமக்கு சரியான தீர்வு கிடைக்கிறது’’ என்றார்.

அடுத்து பேச வந்த இன்டெக்ரா நிறுவனத் தின் சி.இ.ஓ-வான ராம் சுப்பிரமண்யா, கடந்த 10 ஆண்டுகளில் பவுன்சிங் போர்டு தன்னை எப்படியெல்லாம் செழுமைப்படுத்தி இருக்கிறது என்பது குறித்துப் பேசினார். ‘‘எங்கள் நிறுவனத்தின் லாபத்தில் 3 சதவிகிதத் தையும், என் தனிப்பட்ட லாபத்தில் 3 சத விகிதத்தையும் பொதுக் காரியங்களுக்கு அளிக்கிறோம். எங்கள் நிறுவனத்தைச் சுற்றுச் சூழலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக் காத, சுற்றுச்சுழலுக்கு நன்மை செய்யும் வகையில் நடத்தி வருகிறோம்” எனக் குறிப்பிட்டார். இவரது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களில் சரிபாதிக்கும் மேலானவர்கள் பெண்கள். தவிர, விழுப்புரத்துக்கு அருகே உள்ள இவருடைய பண்ணையில் 10,000 மரங்களை நட்டு, வளர்த்து வருவதாகவும் அவர் சொன்னார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, முதலில் பேச வந்தார் வென்ப்ரோ பாலிமர் நிறுவனத்தின் வெங்கடேஸ்வரன். ‘‘ஈரோட்டில் ‘பர்சனல் போர்டு’ குழுவில் சேருவதற்கு முன்பு என் உடல் எடையைக் குறைக்க எத்தனையோ முறை முயற்சி செய்து தோல்வி கண்டிருக்கிறேன். ஆனால், இதில் சேர்ந்த பிறகு, ஒவ்வொரு வாரமும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால், என் உடல் எடையை நன்கு குறைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல, எங்கள் குடும்ப பிசினஸ் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய தேவையான ஆலோசனைகள் அனைத்தும் ‘பர்சனல் போர்டு’ மூலமே தனக்குக் கிடைத்தது. என் உடல் ஆரோக்கியம் அதிகரித்திருப்பதுடன், என் மனநலமும் அதிகரித்து, என் பிசினஸும் நன்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த நன்மை எல்லாத் தொழில்முனைவர்களுக்கும் கிடைக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்து பேசிய, பொன்ப்யூர் நிறுவனத்தின் பொன்னு சுவாமி, ‘‘நான் 60 வயதுக்குப் பிறகு, சி.ஐ.ஐ அமைப்புக்கு வந்து பொதுத் தொண்டு ஆற்ற முக்கியமான காரணம், ‘பவுன்சிங் போர்டு’ நண்பர்கள் தந்த உற்சாக ஊக்குவிப்புதான். ‘பவுன்சிங் போர்டு’ மூலம் நான் பெற்ற நன்மைகள் பட்டியல் போட முடியாது. நாணயமாக, நேர்மையாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்த பிசினஸ்மேன்களை நட்பாகப் பெற்றது நான் செய்த பெரும் பக்கியம்’’ என்றார்.

வெற்றியாளர்கள் சொன்ன பிசினஸ் பாடங்கள்... நம்பிக்கை தந்த ‘டை சென்னை’ கருத்தரங்கு!

கருத்தரங்குக்கு வந்திருந்தவர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் அனந்த பத்மநாபன். ‘‘நல்லவர்கள் சம்பாதிக்கத் தயங்கக் கூடாது. நல்லவர்களிடம் அதிக பணம் சேர்ந்தால்தான் அவர்கள் ஊருக்கு பல நன்மை களைச் செய்வார்கள். ஒரு மனிதர் ஐந்து கார் வைத்திருந் தாலும் ஒரு காரைத்தான் பயன் படுத்த முடியும். 50 சட்டை வைத்திருந்தாலும் ஒரு சட்டை யைத்தான் போட முடியும். எனவே தான், எங்களுக்கு லாப மாகக் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை ஊருக்கே தந்துவிடுகிறோம்’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய யு.ஆர்.சி நிறுவனத்தின் எம்.டி. தேவராஜன், ஈரோட்டில் பல பர்சனல் போர்டுகளை அமைத் ததைப் பற்றியும், இன்னும் பல பர்சனல் போர்டுகள் அமைக்க இருப்பது குறித்தும் பேசினார்.

மதியம் தேநீர் இடை வேளைக்குப் பிறகு, பேசிய காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், ‘‘நான் ஒரு டாக்டர். தலைமைப் பண்பு எதுவும் இல்லாமல் இருந்த நான் ‘பவுன்சிங் போர்டில்’ சேர்ந்தபிறகு தான் பல ஊர்களில் மருத்துவ மனை அமைத்தேன் என்றார்.

பாரத் மேட்ரிமணி நிறுவனத்தின் சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன், ‘‘பவுன்சிங் போர்டு குழு உறுப்பினர்களுடன் பேசும் போது புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும். அப்படிக் கிடைத்தது, எங்களுடைய சமீபத்திய ஐடியா, ஜோடி என்கிற ஆப்’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டால் சிலபல நல்ல விஷயங்களை ‘டேக் அவே’யாக எடுத்துச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்த தொழில்முனைவோர்கள் அனைவரும் ஏகப்பட்ட நல்ல ‘டேக் அவே’கள் கிடைத்தது கண்டு அதிசயித்துப்போனார்கள். கருத்தரங்கில் பேசியவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பாடுபட்டு கற்றுக்கொண்ட பல பிசினஸ் பாடங்களைச் சொல்ல, கலந்துகொண்ட தொழில்முனைவோர்கள் புதிய நம்பிக்கை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். இந்தக் கருத்தரங்கம் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தொழில்முனைவோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வெற்றியாளர்கள் சொன்ன பிசினஸ் பாடங்கள்... நம்பிக்கை தந்த ‘டை சென்னை’ கருத்தரங்கு!

‘‘எங்கள் வாழ்க்கை அடியோடு மாறியிருக்கிறது..!’’

இந்தக் கருத்தரங்கில் ஒரு பகுதியாக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பர்ப்பிள்பாண்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரி நிறுவனத்தின் இயக்குநர் சுந்தர ஈஸ்வர் இந்தக் கலந்துரையாடலை வழிநடத்த, நான்கு இளம்தொழில் அதிபர்கள், ‘பர்சனல் போர்டு’ மூலம் தங்களுக்குக் கிடைத்த நன்மைகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

‘‘பர்சனல் போர்டில் நாங்கள் சேருவதற்கு முன்பு நாங்கள் எப்போதும் பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக்கொண்டு இருப்போம். எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தினோம். நாங்கள் பிசினஸ் செய்வதற்காக எல்லா நேரத்தையும் செலவிடுவதால், அவர்கள் அடையும் வேதனையை முதல்முதலாகத் தெரிந்துகொண்டோம். எங்கள் குழந்தைகள் எங்கள் அருகில் இருப்பதை வேண்டி நிற்பதையும் புரிந்துகொண்டோம். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும்போது, எங்கள் முகத்தில் அறைகிற மாதிரி இருந்தது. நாங்கள் செய்த தவற்றை அவர்கள் எங்களுக்கு சரியாக உணர்த்தினார்கள். இதன் பிறகு, மாதம் ஒருமுறை குடும்ப உறுப்பினர்களை வெளியில் அழைத்துச் செல்வது என அவர்களுடன் குறிப்பிடத்தகுந்த அளவு நேரம் செலவழிக்கிறோம். இதனால் எங்கள் வாழ்க்கை அடியோடு மாறியிருப்பதுடன், நாங்கள் மகிழ்ச்சி யாகவும், உடல்நலத்துடனும் இருக்கிற அதே நேரத்தில், எங்கள் பிசினஸும் நன்கு முன்னேற்றம் காணத் தொடங்கியிருக்கிறது’’ என்றார்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள். பிசினஸ் செய்யும் அனைவருக்கும் உள்ள பிரச்னை இது. இது மாதிரியான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் எனில், தமிழகம் முழுக்க உள்ள பிசினஸ்மேன்கள் பர்சனல் போர்டில் சேருவதுதான் ஒரே வழி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism