Published:Updated:

பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சென்னையில் சிறப்பான கருத்தரங்கம்!

கருத்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கம்

கருத்தரங்கம்

பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சென்னையில் சிறப்பான கருத்தரங்கம்!

கருத்தரங்கம்

Published:Updated:
கருத்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கம்

நீங்கள் ஒரு பிசினஸ்மேனா..? உங்கள் பிசினஸை இன்னும் பெரிய அளவில் வளர்க்க நினைக்கிறீர்களா? இதற்கான வழிமுறைகள் பற்றித் தெரியாமல் இருக்கிறீர் களா? உங்களுக்கே உங்களுக்கென சென்னை யில் வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை மிகப்பெரிய அளவில் நடத்தப்போகிறது டை சென்னை (TiE Chennai) அமைப்பு. மே மாதம் 14-ம் தேதி அன்று நடத்தப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஸ்வர் நமக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

அகிலா ராஜேஸ்வர்
அகிலா ராஜேஸ்வர்

‘‘2019-ன் பிற்பகுதியில் டை சென்னை அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன். வளர்ந்துவரும் தொழில்முனை வோர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலை சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருக்கிறவர் களுக்கும் தர வேண்டும் என்கிற திட்டத்தை முன்வைத்தார் சி.கே.ஆர்.

இதற்கு ‘பர்சனல் டிரான்ஸ்ஃபர்மேஷன்’, ‘பர்சனல் போர்டு’ என்கிற இரு கருத்தாக்கத்தை முன்வைத்தார். உங்கள் பிசினஸ் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காண வேண்டும் எனில், முதலில் நீங்கள் மாற வேண்டும். அதாவது, உங்களுக்குள் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே உங்கள் பிசினஸ் மிகப் பெரிய வளர்ச்சிபெறும். இந்த மாற்றம் ஒவ்வொரு பிசினஸ் மேனுக்குள் ஏற்பட வழிசெய்வதுதான் ‘பர்சனல் போர்டு.’ அதாவது, வெவ்வேறு பிசினஸ் செய்பவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து, மாதத்துக்கு இரு முறை சந்தித்து, தாங்கள் சந்திக்கும் தொழில் பிரச்னைகள் மட்டுமன்றி, எந்த விதமான சவால்களாக இருந்தாலும், அவற்றைப் பற்றி மனம் விட்டுப் பேச பெரிய வாய்ப்பு இது. இப்படிப் பேசும்போது, குழு உறுப்பினர்கள் யாரும் இப்படிச் செய்யுங்கள், அப்படிச் செய்யுங்கள் என்றெல்லாம் அறிவுரை அளிக்க மாட்டார்கள். எந்த பிரச்னையானாலும் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் தான் பேசுவார்கள். இதனால் சிறப்பான தீர்வுகள் பிசினஸ்மேன்களுக்குக் கிடைக்கும்.

கோவிட்-19 தொற்று உச்சத்தில் இருக்கும்போது அதாவது, ஜூன் 2020-ல்தான் முதல் இரண்டு பர்சனல் போர்டுகள் ஆன்லைனில் தொடங்கப் பட்டன. இன்றைக்குத் தமிழகம் முழுவதும் இருக்கும் தொழில்முனைவோர் களுக்காக 28 ‘பர்சனல் போர்டு’கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டுக் காலத்தில் இந்த போர்டில் உள்ள பிசினஸ் மேன்கள் செய்துவரும் பிசினஸ் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறது. இத்தனை நாளும் பிசினஸ், பிசினஸ் என்று குடும்பத்தைக் கவனிக்கக்கூட நேரம் ஒதுக் காமல் திணறியவர்கள், இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக் கிறார்கள்.

இந்த பர்சனல் போர்டுகளில் மேலும் பல தொழில்முனை வோர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்; இந்த வியக்கத்தக்க மாற்றத்தைத் தமிழகத்தின் வளர்ந்துவரும் தொழில்முனைவோர்கள் அனைவருக்கும் தர வேண்டும் என்பதற்காகத்தான் வருகிற மே 14-ம் தேதி சென்னை ஐ.ஐ.டி ரிசர்ச் பார்க் அரங்கில் ஒரு நாள் வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சென்னையில் சிறப்பான கருத்தரங்கம்!

இந்த நிகழ்ச்சியில் ஜி.ஆர்.டி-யின் எம்.டி அனந்த பத்ம நாபன், விகடன் குழுமத்தின் எம்.டி பா.சீனிவாசன் என ஒன்பது பிசினஸ்மேன்கள் வளர்ந்து வரும் பிசினஸ் மேன்களுக்கு வழிகாட்டப் போகிறார்கள். சி.கே.ரங்க நாதன் தலைமையில் நடந்துவரும் ‘பெளன்சிங் போர்டி’ல் இவர்களில் பலரும், அவரால் ஈரோட்டில் தொடங்கப்பட்ட இன்னொரு பௌன்சிங் போர்டில் சிலரும் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதுடன், இவர்கள் அனைவரும் தங்கள் பிசினஸில் ஜாம்பவான்களாக இருக்கிறார்கள் என்பதால், பிசினஸைப் பெரிய அளவில் வளர்க்க நினைக்கும் தொழில்முனைவோர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதல் இந்த நிகழ்ச்சியின்மூலம் கிடைக்கும்.

இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டை சென்னை உறுப்பினர்களுக்கும், டை சென்னையின் பர்சனல் போர்டு உறுப்பினர்களுக்கும் 750 ரூபாயும் (GST தனி). டை சென்னையில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு 1,500 ரூபாயும் (GST தனி) கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாள் நேரத்தை ஒதுக்கி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், தங்கள் பிசினஸை பல மடங்கு வளர்க்கத் தேவையானதை உணர்வார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்த லிங்க்கை https://hub.tie.org/e/shift-2022 க்ளிக் செய்யுங்கள்’’ என்று பேசி முடித்தார் அகிலா ராஜேஸ்வர். பிசினஸை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க நினைக்கும் பிசினஸ்மேன்கள் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ளலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism