Published:Updated:

ஷாப்பிங்: கிரெடிட் கார்டில் வட்டியில்லாத் தவணை; `இம்பல்ஸ் பையிங்' அலர்ட்!

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை, எப்போதுமே நம் பட்ஜெட்டுக்குள்தான் செலவுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் மாதாந்தர பில் தொகையை வட்டியில்லா காலத்துக்குள் நம்மால் செலுத்த முடியும்.

கிரெடிட் கார்டு மூலம் பொருள் வாங்குவதில் இருக்கும் முக்கியமான பலன், பெரிய தொகையை வட்டியில்லாத தவணைகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதாகும். எனவே, இந்த வசதி உங்களுடைய கிரெடிட் கார்டுக்கு உண்டா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அதே நேரம், இந்த வசதியைப் பயன்படுத்துவதால், உங்களுடைய மாதாந்தர கிரெடிட் கார்டு பில் பட்ஜெட்டைவிட அதிகமாகிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி மாதாந்தர பில் உங்களுக்கு அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்பட்சத்தில், எளிய தவணைகளாக மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது என்பதற்காகப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை, எப்போதுமே நம் பட்ஜெட்டுக்குள்தான் செலவுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் மாதாந்தர பில் தொகையை வட்டியில்லா காலத்துக்குள் நம்மால் செலுத்த முடியும். குறைந்தபட்ச பில் தொகை செலுத்தினாலோ, தாமதமாக பில் தொகையைச் செலுத்தினாலோ 3-4% வட்டி மற்றும் அபராதக் கட்டணமும் செலுத்த வேண்டிவரும். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும். எதிர்காலத்தில் ஏதேனும் அவசரக் கடன் தேவைப்படும்போது கடன் மறுக்கப்படும் நிலை உண்டாகும்.

- பண்டிகைக் கால ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதைப் பார்க்கும் விரிவான கைடன்ஸ் கட்டுரையை வாசிக்க > கிரெடிட் கார்டில் ஸ்மார்ட் பர்ச்சேஸ்! - சூப்பர் டிப்ஸ்! https://bit.ly/3kuwCQp

அதென்ன `இம்பல்ஸ் பையிங்'?

ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்திருக்கும் காலகட்டம் இது. தேவையுள்ள, தேவையற்ற பொருள்களுக்கான அனைத்து விளம்பரங்களையும் இணையம் நம் கண்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது. அதனால் ஈர்க்கப்பட்டு, `விலை குறைவாக இருக்கிறதே!' என்பதற்காகக்கூட தேவையில்லாத பொருள்களை வாங்க நேரிடலாம். இதைத்தான் `இம்பல்ஸ் பையிங்' எனக் குறிப்பிடுகிறார்கள்.

அதேபோல, ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைவோம். வாங்க நினைத்த பொருளோடு, வாங்க நினைக்காத நான்கைந்துப் பொருள்களை வாங்குவோம். கடையைவிட்டு வெளியே வந்த பிறகு, `ஏன் இத்தனை பொருள்களை வாங்கினோம்' என்று தெரியாமல் முழிப்போம். இதுவும் `இம்பல்ஸ் பையிங்'தான்.

இம்பல்ஸ் பையிங்
இம்பல்ஸ் பையிங்

அதாவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கிற மனநிலை. இந்த மனநிலையைத் தூண்டி, குவித்து வைத்திருக்கிற பொருள்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரிய மால்களும், சூப்பர் மார்க்கெட்களும் பக்காவாகச் செய்கின்றன.

இந்த வலையில் சிக்காமல் தேவையான பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்கு 10 வழிகளை நாணயம் விகடன் இதழில் அறிய > `இம்பல்ஸ் பையிங்...' சிக்காமல் இருக்க 10 உஷார் டிப்ஸ்! - வீண்செலவைத் தவிர்க்க வழிகள்! https://bit.ly/3dYH00o

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு