உலக அளவில் இ-காமர்ஸ் வணிகம் மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருந்தாலும், நம் நாட்டு உள்ளூர் வணிகர்கள் இதன் மூலம் பொருள்களை விற்பது சில ஆண்டுகள் வரை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தற்போது இந்த நிலைமை வேகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. சிறு நகரங்களிலிருந்துகூட சிறு வணிகர்கள் பலர் இணைய வணிகத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். இன்னும் சில வணிகர்களுக்கு இதில் ஈடுபட ஆர்வம் இருக்கிறது; ஆனால், எப்படிச் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

நாம் நினைக்கும் அளவுக்கு இ-காமர்ஸ் தளங்களில் வணிகம் செய்வது அவ்வளவு சிரமமான காரியம் கிடையாது. இந்தியாவில் உற்பத்தியாகும் எல்லாப் பொருள்களுக்கும், எல்லாப் பகுதிகளிலும் நிறைய தேவை இருக்கிறது. பல பொருள்களுக்கு நம் நாட்டைத் தாண்டி, பல உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பிருக்கிறது. இந்த வணிக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நம் வணிகர்களின் கைகளில்தான் இருக்கிறது.

நம் நாட்டு உள்ளூர் வணிகர்களின் வணிகத்தை மேம்படுத்த, நம் நாட்டிலிருக்கும் பல வணிக அமைப்புகளுடனும் பங்குதாரராக இணைந்திருக்கிறது அமேசான் நிறுவனம். திருப்பூர் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன், கரூர் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் தஞ்சாவூரில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜி ஆகியவை இவற்றில் அடங்கும். அமேசான் மூலம் இந்தியாவின் 36 முக்கியமான நகரங்களிலும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு வணிகர்களுக்கு இருக்கிறது.

2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை அமேசான் நிறுவனத்துக்கு இந்தியாவிலிருந்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் கீழே. தற்போது 5.5 லட்சம் விற்பனையாளர்களுக்கு மேல் அமேசானில் வணிகம் செய்கிறார்கள். அந்த அளவுக்கு விற்பனையாளர்கள் உயரக் காரணமாக இருந்தவர் கோபால் பிள்ளை. அமேசானின் இந்திய விற்பனையாளர் சேவைப் பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் அவர், கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். அமேசான் நிறுவனம் இந்திய விற்பனையாளர்களுக்காக எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், இணையத்தைப் பற்றி தெரியாதவர்கள்கூட மின்வணிகத்தில் எப்படி வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இனி நம் கேள்விகளும் அவர் பதில்களும்...

“கிராமங்களில் இருக்கும் வணிகர்களும் பயன்பெற வேண்டும் என்று, அவர்களை மனதில் வைத்துத்தான் திட்டங்களை உருவாக்குகிறோம்!”

வணிகர் ஒருவர் அமேசானில் பொருள்களை எப்படி விற்பது?

“அதற்கு குறிப்பிட்ட அளவு இடவசதி வேண்டும்; `குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்’ என்ற விதிமுறை எதுவும் இல்லை. ஒரே ஒரு பொருளைத் தயாரிப்பவர்கூட அமேசானில் விற்பனையாளர் ஆகலாம். அமேசானின் விற்பனையாளர் தளத்தில் உங்களுக்கென ஒரு சுயவிவரப் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, நீங்கள் விற்க விரும்பும் பொருள்களை புகைப்படம் எடுத்து அந்தத் தளத்தில் சேர்க்க வேண்டும். உங்கள் பொருள் நுகர்வோர் பார்வைக்கு அமேசான் பக்கத்தில் தோன்றும். நுகர்வோர் ஆர்டர் செய்ததும், நாங்களே உங்களிடம் வந்து பொருளைப் பெற்றுக் கொள்வோம். பொருளுக்கான பணம் இந்திய ரூபாய் மதிப்பில் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்.”

இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தாலும் ஆன்லைனில் தடங்கல் இல்லாமல் வணிகம் செய்ய முடியுமா?

“தற்போது நாங்கள் கிராமங்களில் இருக்கும் வணிகர்களும் பயன்பெற வேண்டும் என்று, அவர்களை மனதில் வைத்துத்தான் திட்டங்களை உருவாக்குகிறோம். உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த ராணி என்பவர் அமேசானில் பொம்மைகளை சிறிய அளவில் விற்கத் தொடங்கினார். தற்போது அவருக்கு மாதத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்தியா முழுவதுமிருந்து வருகின்றன.

இணையத்தில் வணிகம் செய்வதன் மூலம் உலகம் முழுவதும் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த முடியும். இந்தியாவில் 60,000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, இந்தூர் மற்றும் சூரத் ஆகிய நகரங்களிலிருந்துதான் அதிக அளவில் பொருள்கள் வெளிநாடுகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூரு, செகந்தராபாத், சென்னை, கடப்பா மற்றும் நம்பல்லி ஆகிய நகரங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாகப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஊதுவத்தி விற்பனையில் தொடங்கி எலெக்ட்ரானிக் பொருள்கள் விற்பனை வரை இந்தியாவைச் சேர்ந்த பல சிறு மற்றும் குறு வணிகர்கள் இணைய வணிகத்தின் மூலம் நல்ல வருமானம் ஈட்டிவருகிறார்கள். கொஞ்சம் நேரத்தைச் செலவு செய்து யோசித்தால் போதும்; நாளை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் ஓர் உதாரணம் ஆகலாம்.”

இந்தியாவில் மின்வணிகத்தை அதிகரிப்பதில் உங்களுக்கிருந்த பெரிய சவால் எது?

“இணைய வணிகத்தை வணிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் சவாலான காரியமாக இருக்கிறது. ஒரு ஊரில், ஒரு வணிகர் வெற்றி பெற்றால்கூட மற்றவர்கள் ஆர்வமாக முன்வருவார்கள். அந்த ஒரு வணிகரை ஈர்த்து, இந்த வணிகத்தில் ஈடுபடவைத்து, அவரின் நம்பிக்கையைப் பெறுவதுதான் சவாலானது. இந்தியா முழுவதுமுள்ள வணிகர்களுக்காகவே நிறைய திட்டங்களை அமேசான் கொண்டுவந்திருக்கிறது. முக்கியமாக, பெண்கள் வீட்டிலிருந்தே யாருடைய உதவியும் இல்லாமல் தொழிலை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறோம்’’ என்று பேசி முடித்தார் கோபால் பிள்ளை.

நீங்களும் இணைய வணிகத்தில் ஈடுபட்டு பலன் அடையலாமே!