Published:Updated:

ரூ.1,000 முதலீடு... பல ஆயிரங்கள் வருமானம்! - வீட்டிலேயே மீன் வளர்ப்பில் ஈடுபடுவது எப்படி?

பிரபாகர் - பிரமிளா தம்பதி
பிரபாகர் - பிரமிளா தம்பதி

1,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி னாலே, மாதம் சில ஆயிரங்கள் லாபம் ஈட்டலாம். அனுபவம் கூடக்கூட தொழிலை விரிவுபடுத்தினால் வருமானம் அதிகரிக்கும்.

வீட்டிலிருந்தபடியே மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு பிரபாகர் - பிரமிளா தம்பதி கூறும் ஆலோசனைகள்...

* ஆரம்பகட்டத்தில் மீன் வளர்க்க பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்களே போதும். 50 பாட்டில்களைச் சிறிய இடத்தில் நெருக்கமாக அடுக்கிவைத்து மீன்களை வளர்க்கலாம்.

* தரமான ஆண், பெண் மீன்களை வாங்குவது முக்கியம். இனச்சேர்க்கை நேரம் தவிர, மற்ற நேரங்களில் அனைத்து மீன்களையும் தனித்தனி பாட்டில்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்.

* வீட்டில் வளர்த்து விற்க கப்பீஸ் ஃபிஷ் (Guppies Fish), ஃபைட்டர் ஃபிஷ் (Betta Fish) மீன்கள் சிறந்தவை.

* மீன் வளர்ப்புக்குச் சுத்தமான நிலத்தடி நீர் முக்கியம். அவ்வப்போது தண்ணீர் மாற்றுவது, உணவு தவிர வேறு செலவுகள் இல்லை. பிறந்து மூன்று மாதத்திலிருந்து மீன்களை விற்கலாம்.

மீன்
மீன்

* மீன்களின் நிறத்தைப் பொறுத்து அவற்றின் மதிப்பு அதிகரிக்கும். நீண்டகால அனுபவத்தின் மூலம், இனக்கலப்பு முறையில் மீன்களின் நிறத்தை மாற்றி விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம்.

* இந்தத் தொழிலைச் சிறப்பாக செய்துவரும் சிலரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று, முதலில் சோதனை முயற்சியில் ஈடுபட்டு சாதகமான சூழல் ஏற்பட்டால் பிறகு, தொழிலை படிப்படியாக விரிவுபடுத்தலாம்.

* 1,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி னாலே, மாதம் சில ஆயிரங்கள் லாபம் ஈட்டலாம். அனுபவம் கூடக்கூட தொழிலை விரிவுபடுத்தினால் வருமானம் அதிகரிக்கும்.

- இந்த ஆலோசனைகளை வழங்கும் பிரபாகர் - பிரமிளா தம்பதி, "பிசினஸ்ல ஏற்கெனவே பிரபலமான தொழில்ல இறங்கி வெற்றி பெறுவது ஒரு ரகம். புது சந்தை வாய்ப்பை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுவது மற்றொரு ரகம். நாங்க இரண்டாவது ரகம். போட்டியாளர்கள் அதிகமிருந்தால் ஆட்டக்களம் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்'' என்கின்றனர்.

25 ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாடுகளில் இருந்துதான் வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுகள் இந்தியாவுக்கு இறக்குமதியாகின. இந்தத் தொழிலுக்கான எதிர்கால வரவேற்பை முன்கூட்டியே கணித்த பிரமிளா - பிரபாகர் தம்பதி, 'Taiyo' (உதிக்கும் சூரியன்) என்ற பெயரில் மீன் உணவுக்கான உற்பத்தி நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கினர்.

தற்போது மீன்கள் மட்டுமல்லாமல் நாய், பூனை, ஆமை, ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உள்ளிட்ட பல வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

சென்னை, கொளத்தூரில் உள்ள ஷோரூமில் தங்கள் வெற்றிக்கதையை பகிர்ந்தனர். அதை முழுமையாக அவள் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/32O5OTC

பத்தாவது ஃபெயில்... வாழ்க்கையில பாஸ்! - பெட்ஸ் உணவு பிசினஸில் கோடிகள் பார்க்கும் தம்பதி https://bit.ly/32O5OTC

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
அடுத்த கட்டுரைக்கு