Published:Updated:

`பேருந்துகளில் சிசிடிவி முதல் முத்திரைத்தாள் வரி குறைப்பு வரை!'- தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #TNBudget2020

பட்ஜெட்
பட்ஜெட்

தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

14 Feb 2020 12 PM

தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்!

தமிழக பட்ஜெட் குறித்து பேசிய தினகரன், ``தமிழகத்தில் நிதிநிலை சிக்கலாக இருப்பதாக நிதிநிலை அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டாக இது உள்ளது.

டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்துள்ளார்கள். ஆனால், அதற்கு அடுத்தகட்ட திட்டப் பணிகள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் இடம் பெறவில்லை" என்றார்.

14 Feb 2020 11 AM

கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்!

ராமநாதபுரம், விழுப்புரத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,041 கோடி மதிப்பில் இந்தத் திட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் 60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக இருக்கும்!

14 Feb 2020 11 AM

கோயில் நிலங்கள் மீட்பு! 

  • 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

  • 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

14 Feb 2020 11 AM

சிறப்பு போக்ஸோ நீதிமன்றக் கட்டடம்!

  • விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

  • சிறப்பு போக்ஸோ நீதிமன்றங்கள் உட்பட நீதிமன்றக் கட்டடங்களுக்காக ரூ.1,317 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க உழவர்- அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

  • உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டானில், மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

14 Feb 2020 11 AM

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்!

  • 2018-19 -ம் நிதியாண்டில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவிகிதமாக இருந்தது. 2019-20 -ம் நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருந்தது.

  • இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் அதிகமாக இருந்தது. வரும் நிதியாண்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் பன்னீர் செலவம்!

14 Feb 2020 11 AM

வருவாய் - செலவு விவரம்!

தமிழகத்தின் மொத்த வருவாய்: 2,19,375 கோடி ரூபாய்

மொத்தச் செலவு: 2,41,601 கோடி ரூபாய்

வருவாய் பற்றாக்குறை - 22,225 கோடி

14 Feb 2020 11 AM

அத்திக்கடவு - அவினாசி திட்டம்!

  • அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • சேலம் மாவட்டம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக `சிப்காட் தொழிற்பேட்டைகள்' அமைக்கப்பட உள்ளன.

  • இணைப்புக் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த மற்றும் பணிகள் மேற்கொள்ள ரூ.700 கோடியும், பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ.5,439 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

  • காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்புக் கால்வாய் அமைக்கப்படும்!

14 Feb 2020 11 AM

முத்திரை தாள் வரி குறைப்பு!

  • 2020-21 -ம் நிதியாண்டில் முத்திரை தாள் வரியானது 1 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.5,000 மிகாமல் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 Feb 2020 11 AM

மதிய உணவு திட்டம்!

`பேருந்துகளில் சிசிடிவி முதல் முத்திரைத்தாள் வரி குறைப்பு வரை!'- தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #TNBudget2020
  • மதிய உணவு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.5,935 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காக ரூ.4,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 Feb 2020 10 AM

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள்!

`பேருந்துகளில் சிசிடிவி முதல் முத்திரைத்தாள் வரி குறைப்பு வரை!'- தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #TNBudget2020

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவதற்கு ரூ. 1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ரூபாயும் தொழில்துறைக்கு ரூ.2,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருப்பவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் தொடங்கும்!

14 Feb 2020 10 AM

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி!

  • 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

  • நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

  • பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்குத் தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு. சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ.12,301 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.5,500 கோடி

14 Feb 2020 10 AM

பசுமை வீடு திட்டம்: கட்டுமானச் செலவு ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது!

  • முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்குக் கட்டுமானச் செலவு ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படும்.

  • பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். உள்ளாட்சிகளுக்கு ரூ.6,754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 Feb 2020 10 AM

வேளாண்துறைக்கு ரூபாய்.11,894 கோடி நிதி ஒதுக்கீடு!

  • போக்குவரத்து மானியங்களுக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும். கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 1,364 நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் பயிர்க் கடனாக ரூ.11,000 கோடி வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக வேளாண்துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 Feb 2020 10 AM

நிதி நிர்வாகத்துக்கு ரூ.1,403 கோடி!

பட்ஜெட் 2020-21
பட்ஜெட் 2020-21

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்குப் பெருந்திட்ட வளாகம் அமைக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் உருவாக்கப்படும். சாலைப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நிதி நிர்வாகத்துக்கு ரூ.1,403 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 Feb 2020 10 AM

கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு!

கீழடி
கீழடி

கீழடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்க தமிழக பட்ஜெட்டில் ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

14 Feb 2020 10 AM

சென்னை வெள்ளப் பாதிப்புக்கு 100 கோடி ருபாய்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
  • பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, சென்னையில் வெள்ளபாதிப்பைக் குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழகக் காவல்துறைக்கு ரூ.8876 கோடியும் தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 Feb 2020 10 AM

2020-21 -ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன்

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
  • தமிழக பட்ஜெட்டில் உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திருத்திய நெல் சாகுபடி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

  • 2020-21 -ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்.

14 Feb 2020 9 AM

தமிழக பட்ஜெட் 2020-21!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது வீட்டிலிருந்து கிளம்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுநீள பட்ஜெட் இதுவாகும். இதனால், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. 2019-20 நிதியாண்டில் ரூ.3,97,495 கோடியாக இருக்கிறது.

அதேபோல், வேலைவாய்ப்பின்மை அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது. வேலைவாய்ப்பின்மையின் தேசிய சராசரி 6.1 சதவிகிதமாக இருக்கும் நிலையில், அது தமிழகத்தில் 7.6ஆக இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின் செல்ல