Published:Updated:

தமிழக CII அமைப்புக்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் நியமனம்!

சி.ஐ.ஐ

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தமிழக தலைவராக இருந்துவந்த, காவேரி மருத்துவமனை நிறுவனர் சந்திரகுமாரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் நிறுவன நிர்வாக இயக்குனர் சத்யகம் ஆர்யா, 2022 - -23-ம் ஆண்டுக்கான தமிழகதலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக CII அமைப்புக்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் நியமனம்!

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தமிழக தலைவராக இருந்துவந்த, காவேரி மருத்துவமனை நிறுவனர் சந்திரகுமாரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் நிறுவன நிர்வாக இயக்குனர் சத்யகம் ஆர்யா, 2022 - -23-ம் ஆண்டுக்கான தமிழகதலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
சி.ஐ.ஐ

இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவராக, டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கல்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் மேலாண்மை இயக்குனர் சத்யகம் ஆர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவராக இருந்து வந்த, காவேரி மருத்துவமனை நிறுவனர் சந்திரகுமாரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் நிறுவன நிர்வாக இயக்குநர் சத்யகம் ஆர்யா, 2022 - -23-ம் ஆண்டுக்கான தமிழக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சத்யகம் ஆர்யா
சத்யகம் ஆர்யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர் சி.ஐ.ஐ உடன் நெருக்கமாக தொடர்புடையவர் மற்றும் 2021-22-ம் ஆண்டில் சி.ஐ.ஐ தமிழ்நாடு மாநில கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். 2020-21-ல் சி.ஐ.ஐ தெற்கு பிராந்தியத்தின் உற்பத்தி துணைக் குழுவின் இணைத் தலைவராகவும், 2020-21-ல் தமிழ்நாடு சி.இ.ஓ மன்றத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். எஸ்.ஐ.எம்.ஏ நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்யகம் ஆர்யா 2018-ம் ஆண்டின் இறுதியில் இருந்து இந்தியாவில் டெய்ம்லர் ட்ரக்குகளின் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இவருடைய தலைமையின் கீழ் இந்நிறுவனமானது Made-for-India CV பிராண்டான ‘BharatBenz’ உடன் உள்நாட்டு சந்தையில் வலுவான போட்டியாளராக தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இதே போல, ஏ.பி.டி.இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சங்கர் வானவராயர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2011-2012-ல் இருந்து சி.ஐ.ஐ-யின் `யங் இந்தியன்ஸ்' பிரிவின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார்.

சங்கர் வானவராயர்
சங்கர் வானவராயர்

அவர் உயர்கல்விக்கான சி.ஐ.ஐ தேசியக் குழுவின் இணைத் தலைவராகவும், சி.ஐ.ஐ குடும்ப வணிக நெட்வொர்க் நெக்ஸ்ட் ஜென் கமிட்டியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். மேலும் இந்தியா@75 டாஸ்க் ஃபோர்ஸின், சி.ஐ.ஐ தெற்கு பிராந்தியத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism