Published:Updated:

#LiveUpdates: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் ஓ.பன்னீர் செல்வம்! #TNBudget2021

O. Panneerselvam
O. Panneerselvam

2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

23 Feb 2021 1 PM

பட்ஜெட்டை நிறைவு செய்தார் ஓ.பி.எஸ்

இறுதியாக நிதித் துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

23 Feb 2021 12 PM

முக்கிய அம்சங்கள் 

தற்போது அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் இலவச சீருடை, மடிக்கணினி வழங்குதல், பாடப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், கிரையான்கள், மிதிவண்டி வழங்குதல் போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் - ஓ.பி.எஸ்

23 Feb 2021 12 PM

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லுரிகள் கட்டுவதற்காக, 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 1,650 மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும். - ஓ.பி.எஸ்.

படிப்படியாக அமையவுள்ள `அம்மா மினி கிளினிக்' திட்டத்திற்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு - ஓ.பி.எஸ்

84,686.85 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டம் 

தற்போது இருக்கும் தமிழக அரசின் கடனான 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனானது, தமிழக அரசின் உற்பத்தி விகிதத்தில் 26.69 சதவிகிதமாக உள்ளது. இது 15-வது நிதிக்குழுவின் கணிப்பை விட குறைவாகவே இருக்கிறது. 2021-22-ம் நிதி ஆண்டில் 84,686.85 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது - ஓ.பி.எஸ்

23 Feb 2021 12 PM

இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 229.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - ஓ.பி.எஸ்

சென்னை நகரை மேம்படுத்த 3,140 கோடி ரூபாய் ஒதுக்கீடு

- 933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு உள்கட்டமைப்பு நிதியின் உதவியுடன் கீழ்பவானி பாசனப்பகுதிகளில் நீட்டித்தல், புரனமைத்தல் ஆகிய பணிகள் தொடங்கப்படும்.

- அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்காக 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- கொரோனா காரணமாக மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு 3,717.36 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது .

- 79,941 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 71,766 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் 62 முதலீடுகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்.

- கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- பழங்குடியினர் நலனுக்காக 1,276 கோடி ரூபாயும், ஆதி திராவிடர்களின் நலனுக்காக 13,967 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

- சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு 3,140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. - ஓ.பி.எஸ்

23 Feb 2021 11 AM

சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பெரும்பாலான விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. 2016-ல் 17,218-ஆக இருந்த சாலை விபத்துகள் 2020-ல் 8,123-ஆக குறைந்துள்ளன. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, அனைத்து துறைகளுடனும் இணைந்து செயல்பட்டு வருவதே இதற்கு காரணமாகும். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக `RIGHTS' என்கிற புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது - ஓ.பி.எஸ்

அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

23 Feb 2021 11 AM

ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைப் போல, கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கு உதவித்தொகை வழங்கப்படும். - ஓ.பி.எஸ்

இதுவரை இருந்த 1,36,481 உரிமை கோராத புறம்போக்கு நிலங்களில், 60,203 நிலங்களின் வீட்டு மனை பட்டாக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழக பேரிடர் காலங்களில் மாநில பொறுப்பு நிதியிலிருந்து 11,943.85 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் பேரிடர் நிதி எப்போதும் போதுமானதாக இருந்ததில்லை. தொடர்ந்து இந்த நிதியை அதிகரிக்க வலியுறுத்துவோம். - ஓ.பி.எஸ்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021

எல்.ஐ.சி மற்றும் யுனைடட் இந்தியா ஆகிய இரு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, மக்களுக்குக்காக காப்பீடு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் - ஓ.பி.எஸ்

பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

- காவல்துறைக்கு 9,567 ரூபாய் கோடி,

- தீயணைப்பு மீட்புத் துறைக்கு 4,436 கோடி ரூபாய்,

- ஊரக வளர்ச்சித் துறைக்கு 22,218 கோடி ரூபாய் மற்றும்

- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 6,88.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக 1,738.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

23 Feb 2021 11 AM

குடும்பத்தலைவர் விபத்தில் மரணமடைந்தால் காப்பீட்டுத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும்! - ஓ.பி.எஸ்

பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - ஓ.பி.எஸ்

6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் (Computer science) பாடம் அறிமுகப்படுத்தப்படும் - ஓ.பி.எஸ்

கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவச் செலவுகளை, மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஏற்கும் என எதிர்பார்க்கிறோம். - ஓ.பி.எஸ்.

வேளாண்மைத் துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு

- நீதித் துறைக்கு ரூ.1,417 கோடி,

- உயர்கல்வித் துறைக்கு ரூ.5,478 கோடி,

- சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி,

- மின்சாரத் துறைக்கு ரூ.7,217 கோடி,

- காவல்துறைக்கு ரூ. 9,657 கோடி ஒதுக்கீடு,

வேளாண்மைத் துறைக்கு ரூ.11,982 கோடி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

O. Panneer selvam
O. Panneer selvam

வரி வருவாய் பற்றாக்குறை

2020-21-ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வரி வருவாய் பற்றாக்குறை 41,417 கோடி ரூபாயாக இருக்கும். நடப்பு ஆண்டில் சந்தித்திருக்கும் நிதிப்பற்றாக்குறைய தவிர்க்க முடியாது. - ஓ.பி.எஸ்

23 Feb 2021 11 AM

கோவை மெட்ரோவுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு!

தமிழக மக்களின் போக்குவரத்து தேவைக்காக 2,000 மின்சார பேருந்துகள் உள்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். கோவை மாவட்டத்தில் மெட்ரோ பணிகள் தொடங்க, 6,683 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான குழுவும் அமைக்கப்படும். - ஓ.பி.எஸ்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021

தமிழக அரசின் கடன் உயர்வு!

தமிழக அரசின் கடன் சுமை 5.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. - ஓ.பி.எஸ்

23 Feb 2021 11 AM

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளி

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே பேச வாய்ப்பளிக்குமாறு தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், சபாநாயகர் தனபால் அதை நிராகரித்ததையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

துரைமுருகன்
துரைமுருகன்
23 Feb 2021 10 AM

65 ஆண்டுகளுக்குப் பிறகு...

Kalaivanar arangam
Kalaivanar arangam
Photo: Vikatan / Kalimuthu.P

கடந்த 1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை சட்டப்பேரவையாக திகழ்ந்த கலைவாணர் அரங்கத்தில், 65 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் நடக்கும். ஆனால் இந்த முறை கொரோனா அச்சம் காரணமாக, சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களும், பட்ஜெட் கூட்டத்தொடர் இங்குதான் நடக்கும்.

23 Feb 2021 10 AM

ஓ.பன்னீர் செல்வத்தின் 11-வது பட்ஜெட்

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் குறித்து, அமைச்சர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் சென்னை கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்டார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவர் இதுவரை தாக்கல் செய்த மொத்த பட்ஜெட்களின் எண்ணிக்கை 10. இது இவரின் 11-வது பட்ஜெட் ஆகும்.

23 Feb 2021 9 AM

இன்று தமிழக இடைக்கால பட்ஜெட் 

அ.தி.மு.க அரசின் பதவிக்காலம், வருகிற மே 24-ம் தேதியுடம் முடிவடையும் நிலையில், அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால் தற்போதைய அரசினால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அதன்படி, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (23.02.2021) காலை 11 மணிக்கு துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பொதுத் தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் என்பதால், முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு