Published:Updated:

`ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31' - தொழிலாளர் நலத்துறை சொல்வது என்ன?

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களின் 2021-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையை ஜனவரி 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

`ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31' - தொழிலாளர் நலத்துறை சொல்வது என்ன?

உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களின் 2021-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையை ஜனவரி 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Published:Updated:
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
தொழில் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆண்டறிக்கையை மாவட்டத் தொழிலாளர் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இது தமிழகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து மாவட்டத் தொழில் அமைப்புகளும் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் ஆண்டறிக்கையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக சமர்ப்பித்து வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Documents (Representational Image)
Documents (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்துள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களின் 2021-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையை ஜனவரி 31-ம் தேதிக்குள் http://labour.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும். நேரடியாக அச்சு நகல்களைக் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது" என்று அந்த அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், அனைத்துத் தொழில் நிறுவனங்களும் தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்யவும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட உரிமங்களைப் புதுப்பிக்கவும், உரிமக் கட்டணங்களைச் செலுத்தவும் அதே இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Industry (Representational Image)
Industry (Representational Image)
AP Photo/Rafiq Maqbool

ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், மேலே குறிப்பிட்ட விஷயங்களுக்காக நேரடியாக அலுவலகத்தை நாடாமல், ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது நல்லது. இப்படி ஒவ்வொரு மாவட்ட மக்களும், இதே முறையைக் கடைப்பிடித்து தங்களின் ஆண்டறிக்கையை, கொடுக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism