Published:Updated:

சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம்... 40 காசுகள் மட்டுமே குறைந்த வெள்ளி! #ChennaiGoldprice

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு!
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு!

தங்கம் விலை உயரும் போது கிராமப்புற முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்வார்கள்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் குறைந்தது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், இந்தியாவிலும் விலை குறையும் எனத் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்மாறாக கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. திடீரென இன்று தங்கம் விலை சரிவைச் சந்தித்திருக்கிறது.

`மொத்தமே 50 கிலோதான்!’ - ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதியில் வரலாறு காணாத வீழ்ச்சி

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஜூன் 15) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 4,532 ரூபாயாக உள்ளது. நேற்று இதன் விலை 4,552 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 36,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 160 ரூபாய் குறைந்து 36,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று 4,780 ரூபாயிலிருந்து இன்று 4,759 ரூபாயாக குறைந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 38,240 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 152 ரூபாய் உயர்ந்து 38,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்
தங்கம்

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேசச் சந்தைகளில் தங்கம் விலைக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரே விலையாக இருந்தாலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி என விலை நிலவரங்கள் சற்றே வித்தியாசப்படும்.

'ரூ.4,747'
ஜூன் 15-ல் டெல்லியில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் 4,602 ரூபாயாகவும், தூய தங்கத்தின் விலை 4,702 ரூபாயாகவும் இருக்கிறது. பெங்களூருவில் ஆபரணத் தங்கம் 4,487 ரூபாயாகவும், தூயதங்கம் 4,897 ரூபாயாகவும் இருக்கிறது. டெல்லியில் ஆபரணத்தங்கம் 4,747 ரூபாயாகவும் இருக்கிறது. அகமதாபாத்தில் ஆபரணத் தங்கம் 4,608 ரூபாயாகவும், தூய தங்கம் 4,747 ரூபாயாகவும் இருக்கிறது.

பங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்?   #DoubtOfCommonMan

வெள்ளியின் விலை!

சென்னையில் வெள்ளியின் விலை பல காரணிகளைச் சார்ந்தது. உதாரணமாக, சமீபத்தில் அரசாங்கம் தங்கம் மீதான சுங்க வரியை உயர்த்தியது. இது வெள்ளி விலையையும் உயர்த்தியது. தங்கம் விலை உயரும் போது கிராமப்புற முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்வார்கள். சர்வதேசச் சந்தைகளில் வெள்ளி விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 15 டாலர்களை நெருங்கியதற்கு, அதன் தேவை அதிகரித்து வருவதே காரணமாகும். அதனால் வெள்ளி விலை இன்று 40 காசுகள் மட்டுமே குறைந்துள்ளது. நேற்று 53 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி இன்று 52.60 ரூபாய்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி நேற்று 53,000 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று 52,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு