Published:Updated:

நிலையான வருமானம் தரும் தக்காளி கெட்ச்அப்!

தக்காளி கெட்ச்அப்
பிரீமியம் ஸ்டோரி
தக்காளி கெட்ச்அப்

தொழில் பழகுவோம் வாங்க! 19

நிலையான வருமானம் தரும் தக்காளி கெட்ச்அப்!

தொழில் பழகுவோம் வாங்க! 19

Published:Updated:
தக்காளி கெட்ச்அப்
பிரீமியம் ஸ்டோரி
தக்காளி கெட்ச்அப்

தக்காளி, இந்தியர்களின் முக்கியமான உணவுப் பொருள். இதிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட கெட்ச்அப்புக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு இருக்கிறது. கெட்ச்அப் தயாரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய்.

நிலையான வருமானம் தரும்
தக்காளி கெட்ச்அப்!

தக்காளி கெட்ச்அப் எங்கெல்லாம் பயன் படுகிறது?

தக்காளியுடன், சர்க்கரை, வினிகர், வெங்காயம், கொத்தமல்லி, கிராம்பு, சீரகம், பூண்டு, கடுகு, இலவங்கப்பட்டை போன்ற பல்வேறு மசாலாப் பொருள்கள் மற்றும் சில சுவையூட்டிகள் சேர்த்து இனிப்பு, புளிப்பு, காரம் உள்ளிட்ட விருப்பமான சுவையில் தயாரிக்கப் படுவதே தக்காளி கெட்ச்அப். அசைவ உணவுகள், பர்கர், சாண்ட்விச், உருளைக் கிழங்கு சிப்ஸ், சமோசா, கட்லட், பப்ஸ், பீட்சா போன்ற துரித உணவுகளுடன் சுவையூட்டியாக இதைப் பயன்படுத்து கின்றனர்.

நிலையான ஒப்பந்த முறை அவசியம்...

தக்காளி சில சமயங்களில் விலை அதிகரித்தும், சில சமயங்களில் மிகவும் விலை குறைந்தும் விற்பனையாகும். இதனால், தக்காளியைச் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில், இரண்டு தரப்பினருக்கும் கட்டுப்படியாகும் விலையை நிர்ணயித்து, ஆண்டு முழுவதும் ஒரே விலைக்குத் தக்காளியைக் கொள்முதல் செய்வது நல்லது. கவர்ச்சிகரமான பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கையடக்க அளவிலான சிறிய பாக்கெட்டில் கெட்ச்அப்பை நிரப்பி தேவைக்கேற்ப விற்பனை செய்யலாம்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

கெட்ச்அப் தயாரிப்பில் இறங்குவோரின் கவனத்துக்கு...

ஆண்டுக்கு 250 - 300 தினங்களுக்கும் குறையாமல் உற்பத்தி நடைபெறும் வகையில் உற்பத்திக்கூடத்தை அமைக்க வேண்டும். மூலப்பொருள்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதிசெய்துகொள்வது முக்கியம். மூலப்பொருள் வாங்கும் திறன் மற்றும் விற்பனை செய்யும் திறனுக்கு ஏதுவாக உற்பத்தி யூனிட்டை அமைக்க வேண்டும். தினமும் சராசரியாக 500 கிலோ தக்காளியைக் கையாளும் வகையில் உற்பத்திக்கூடத்தில் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தக்காளியின் விலை மிகவும் குறையும்போது, பிற விவசாயிகளிடம் கூடுதலான ஆர்டர் எடுத்து, உற்பத்தியை அதிகப்படுத்தலாம்.

நிலையான வருமானம் தரும்
தக்காளி கெட்ச்அப்!

விற்பனை வாய்ப்பு...

துரித உணவுப் பிரியர்கள், நகரப் பகுதியினர், இளைஞர்கள் பலரும் கெட்ச்அப்பை அதிகம் விரும்புகின்றனர். அதனால், இந்தத் தொழிலுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறது.

தக்காளியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இதனால், கெட்ச்அப் உட்பட தக்காளி சார்ந்த பிற தயாரிப்புகள் நம் நாட்டிலிருந்து பல நாடு களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தக்காளி சாஸ் மற்றும் கெட்ச்அப்புக்கு ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த விற்பனையானது ஆண்டுக்கு 20% உயர்ந்துவருவது குறிப்பிடத் தக்கது. உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத் தினால், நிலையான மற்றும் கூடுதலான வருமானம் கிடைப் பதை உறுதிசெய்யலாம்.

தயாரிப்பு முறை...

நல்ல தரமான தக்காளியைப் பிரித்தெடுத்து, நீரில் நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிறகு, சதையைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்தால், விதைகள், தோல், தண்டுப் பகுதி ஆகியவை தனித்தனியே பிரித் தெடுக்கப்படும். பிரித்தெடுக்கப் பட்ட சதைப் பகுதியை, பெரிய ட்ரம் அல்லது பாத்திரத்தில் சேர்த்து வேகவிட வேண்டும். பின்னர், மசாலாப் பொருள்கள் உள்ளிட்ட இதர சேர்மானங் களைச் சேர்த்து கலவையைக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, கெட்ச்அப் கலவையைப் பதப் படுத்தும் இயந்திரத்தில் சேர்த்தால், சரியான பதத்துக்கு மாற்றப்படும்.

கெட்ச்அப்பை நீண்ட காலம் வைத்திருந்துப் பயன்படுத்த ஏதுவாக, 190 டிகிரி ஃபாரன்ஹீட் (88 டிகிரி செல்சியஸ்) வெப்ப நிலையில் கலவையைச் சூடுபடுத்த வேண்டும். பின்னர், Sterilization முறையில் சுத்திகரிக்கப்பட்ட பாட்டிலில் கெட்ச்அப்பை நிரப்பி, காற்று புகாத வகையில் மூடி பேக்கேஜிங் செய்ய வேண்டும்.

சிறப்பம்சங்கள்...

எல்லா பகுதிகளிலும் வரவேற்பு உள்ள, விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ள லாபம் தரக்கூடிய தொழில் இது. ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தத் தொழிலுக்கு எல்லா மூலப் பொருள்களும் தடையின்றி கிடைக்கின்றன.

வங்கிக் கடனுதவி...

பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் 22.80 லட்சம் ரூபாய் கடனுடன் (Term Loan), 25% (6 லட்சம் ரூபாய்) மானியம் பெறலாம்.

நிலையான வருமானம் தரும்
தக்காளி கெட்ச்அப்!

மாதம் ரூ.7.31 லட்சம் டேர்ன் ஓவர்...

இந்த புராஜெக்ட் அடிப்படை யில் தினமும் 325 கிலோ தக்காளி கெட்ச்அப் தயாரிக்கலாம். மொத்த விலைக்கு விற்கும்போது ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை யில் கிலோவுக்கு 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யலாம். மொத்த விலைக்கு நாம் விற்பனை செய்யும் பட்சத்தில், 325 கிலோ விற்பனை யில் ரூ.29,250 கிடைக்கும். ஒரு மாதத்தில் 25 தினங்களுக்கு உற்பத்தி நடைபெற்றால், ரூ.7,31,250 வருமானம் கிடைக்கும்.

எந்தத் தொழிலில் ஈடுபடுவதாக இருந்தாலும், அந்தத் தொழில் குறித்த அனுபவங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர், நிலையான வர்த்தக வாய்ப்பையும் ஓரளவுக்கு உறுதி செய்தபிறகே, தொழிலைத் தொடங்க வேண்டும்.

எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், உணவுத் துறைக்கு எப்போதும் வரவேற்பு குறையாது. அந்த வகையில், முறையான அனுபவத்துடன் தக்காளி கெட்சப் தயாரிப்பில் வெற்றி பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை!

(தொழில் பழகுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism