திருச்சியிலுள்ள புகழ்பெற்ற காந்தி மார்க்கெட், 150 ஆண்டுக் கால வரலாறு கொண்டது. இந்தியா விலேயே மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே மார்க்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு. இதன் கட்டுமானப் பணிகள் 1867-ம் ஆண்டு தொடங்கி ஓராண்டில் முடிந்தது. மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப 1927-ம் ஆண்டு மார்க்கெட் விரிவுபடுத்தப்பட்டது. 1934-ல் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மார்க்கெட்டுகளில் மிக முக்கியமான மார்க்கெட்டாகத் திருச்சி காந்தி மார்க்கெட் இருந்து வருகிறது.

5,000 கடைகளுக்கு மேல்...

6.25 ஏக்கர் பரப்பளவிலான இந்த மார்க்கெட் பற்றித் தமிழ்நாடு வர்த்தகக் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் முரளிதரனிடம் காந்தி மார்க்கெட் பற்றிக் கேட்டோம்.

“இந்தச் சந்தையில் மொத்த வியாபாரம், தரைக்கடை, தள்ளு வண்டிக்கடை என மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து அதிகப்படியான காய்கறி வந்துகொண்டிருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அடுத்தபடியாகத் திருச்சி காந்தி மார்க்கெட்தான் இருக்கிறது. ஊட்டியிலிருந்து கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள், பெல்லாரியில் இருந்து வெங்காயம், சிம்லாவிலிருந்து ஆப்பிள், நாக்பூரிலிருந்து கமலா ஆரஞ்சு என அனைத்துப் பகுதி களிலிருந்தும் காய்கறி லோடுகள் அன்றாடம் இறக்குமதி செய்யப் படுகிறது.

காய்கறிகள், பழங்கள், இலை, பூ, அரிசி, பாத்திரங்கள், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், பலசரக்கு மளிகைப் பொருள்கள், மீன், கருவாடு, இறைச்சி வகைகள், உணவுத் தானியங்கள், பழைய இரும்புப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், ஜவுளிகள், செல்லப் பிராணிகள், பேக்கரி, புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஃபர்னிச்சர்ஸ், நாட்டு மருந்துப் பொருள்கள் என இங்கு கிடைக்காத பொருள்களே கிடையாது. காந்தி மார்க்கெட்டிலிருந்து என்.எஸ்.பி சாலையில் சென்று வந்தால் அத்தனை பொருளையும் ஒரே இடத்தில் வாங்கி விடலாம்.

அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் காய்கறி, பழங்கள் அனுப்பி வைக்கப் படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தினமும் 2,000 முதல் 5,000 பேருக்கும் மேல் மொத்தமாகவும் சில்லைறையாகவும் சாமான்கள் வாங்க வருகிறார்கள். இதனால், லிஸ்ட்டில் குறிப்பிட மறந்த பொருளைச் சந்தையைச் சுற்றி வரும் போதே நினைவுக்கு வந்துவிடும்.

காலை முதல் இரவு வரை செயல் படுகிறது. நல்ல காரியங்கள், கெட்ட காரியங்கள் வரை எல்லாவற்றுக்கும் தேவையான அனைத்துப் பொருள்களையும் இங்கு முடிச்சிடலாம்னு சொல் வாங்க. காய்கறி மொத்த வியாபாரத்தில் இந்த காந்தி மார்க்கெட்தான் முதலிடத்தில் இருக்கிறது” என்றார்.

மணப்பாறை மாட்டுச் சந்தை...

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெறும் மாட்டுச் சந்தை, உலகப் புகழ்பெற்றது. இது குறித்து கால்நடை வாரச் சந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி என்கிற சின்னாகவுண்டரிடம் பேசினோம்.

‘‘ ‘மணப்பாறை மாடுகட்டி... மாயவரம் ஏறுபூட்டி..!’ என்று பட்டுக்கோட்டையார் பாடும் அளவுக்குப் பிரசித்திபெற்றது இந்தச் சந்தை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இந்தச் சந்தையில் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து மாடு மற்றும் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள்.

உழவு மாடுகள், கறவை மாடுகள், நாட்டுப் பசுக்கள், காங்கேயம் வகை பசு மற்றும் காளைகள், ஏராளமான ஜல்லிக் கட்டுக் காளைகள் மாடுகள் விற்பனைக்கு வரும். இந்தச் சந்தை யில் ஒரு மாடு வாங்குவதாக இருந்தாலும் அதன் விலையைக் கையில் துண்டைப் போட்டுத் தான் பேசுவார்கள். அந்த நடைமுறை இன்றுவரையிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. இது மட்டு மன்றி, செவ்வாய்க் கிழமை மாலை தொடங்கி புதன் கிழமை மதியம் வரை சுமார் ரூ.6 கோடி - ரூ.7 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.

ஆனால், தற்போது கால்நடை சந்தைகளுக்குப் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டதுடன் மட்டுமன்றி, மாட்டு இறைச்சிக்கும் கால்நடைகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் தடை உத்தரவால் எப்போதும் பரபரப்பாகக் களைகட்டி காணப்படும் மணப்பாறை மாட்டுச் சந்தை, வியாபாரிகள் மற்றும் விவசாயி களின் குறைந்த அளவிலான வருகையால் வெறிச்சோடி கிடக்கிறது. பொங்கல் மற்றும் விழாக்காலங்களில் கூடுதலாக விற்பனை நடக்கும்’’ என்றார்.

ஆயத்த ஆடைகளின் உலகம் புத்தாநத்தம்...

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் கூட தெரியாத ஊர் புத்தாநத்தம். ஆனால், ஆண்டுக்கு சுமார் ரூ.70 கோடி அளவுக்கு ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் ஊர். திருச்சி மாவட்டம் மணப் பாறையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந் துள்ளது இந்த ஊர்.

புத்தாநத்தத்தில் ரயான் கார்மெட்ன்ஸ் உரிமையாளர் முகமது அலி ஜின்னாவிடம் பேசினோம். “புத்தாநத்தம் கிராமத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தது. 1970 காலகட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் நீர்வரத்து குறைந்து போனதாலும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தோம். அந்தச் சமயத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணியில் இறங்கினோம். முதலில் பெண் களுக்கான நைட்டி மற்றும் அண்டர்வேர் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். வாரம்தோறும் இங்கு சந்தை கூடும். அந்தச் சந்தையில் எங்களது உற்பத்திப் பொருள் களை விற்பனை செய்ய மதுரைக்குச் சென்று விற்பனை யைத் தொடங்கினோம்.

அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை அடுத்து சட்டை, பேன்ட், லெக்கின்ஸ், சுடிதார், டாப்ஸ், நைட்டி உள்ளிட்ட ரெடிமேடு ரகங்களைத் தயாரிக்கிறோம். அதற்கான மூலப்பொருள்களைப் பாம்பே, அகமதாபாத், சூரத் போன்ற நகரங்களிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.

பெரும் முன்னேற்றம் கண்ட இந்தத் தொழில் தற்போது 200-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களையும், 3000-க்கும் மேற்பட்ட வியாபாரிகளையும் கொண்ட வர்த்தகக் களமாக மாறியுள்ளது.

ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் வீட்டிலேயே தயாரிக்கும் முக்கிய குடிசைத் தொழிலாக மாறியுள்ளது இந்தத் தொழில். கேரளாவில் புத்தாநத்தம் ஆடைக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆரம்பத்தில் பல்வேறு மாடல்களில் பெண்கள் ஆடைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது அதற்கு இணையாக ஆண்கள் ஆடைகள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பெரிய ஜவுளிக் கடைகளில் விற்கப்படும் பிராண்டட் சட்டைகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. ஆனால், இந்த ஊருக்கு முழுமையான பஸ் வசதிகள் எதுவும் கிடையாது. பஸ் வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தப் புண்ணியமும் இல்லை” என்றார்.

ஆக மொத்தத்தில் திருச்சியிலும் திருச்சியைச் சுற்றியுள்ள சந்தைகளும் பரபரப்புக்குக் குறையில்லாமல் சுறுசுறுப்பாகவே செயல்படுகின்றன!

மின் மோட்டார்களின் சங்கமம் சிங்காரத்தோப்பு!

தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சி வணிகத்தின் முக்கியப் பகுதியாக விளங்குகிறது சிங்காரத்தோப்பு. இதன் இருபுறமும் துணிக்கடைகள், நகை மற்றும் மளிகைகள் ஆதிக்கம் செலுத்தினாலும், செல்போன், ஃபிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், மிக்சி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. திருச்சியைச் சுற்றி விவசாயக் கிராமங்கள் அதிகம் என்பதால், விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் மின் மோட்டார் கடைகள் அதிகமாக இருக்கின்றன.

மணப்பாறை முறுக்கு!

மணப்பாறை மாட்டுச்சந்தை மட்டுமல்ல, முறுக்கும் ஃபேமஸ். 1930-களில் இந்த முறுக்கு தயாரிக்கும் தொழிலானது அறிமுகமானது. இன்றும் பல குடும்பங்கள் இதைக் குடிசைத் தொழிலாக இங்கு செய்து வருகிறார்கள். மணப்பாறை நீர், இயற்கையாக உப்புத்தன்மையைக் கொண்டது. இந்த உப்புத்தன்மை கொண்ட நீர் கொண்டு இங்கு முறுக்குத் தயாரிக்கப்படுவதால், இது மிகவும் ருசியாக இருப்பதாகவே பலர் சொல்கிறார்கள். இந்த ஊரில் மட்டும் முறுக்கை இரண்டு முறை எண்ணெய்யில் பொரித்து எடுக்கிறார்கள். இதுவும் இதன் ருசிக்கு ஒரு காரணம். இந்த முறுக்கு தயாரிக்க, இதற்காகத் தனியாக இங்கு அரிசி விளைவித்து, அதைப் பயன்படுத்துகிறார்கள். அதன் காரணமாகவும் மணப்பாறை முறுக்கு ருசியாகவும் அதிக மணமாகவும் இருக்கிறது. மணப்பாறையில் தயாராகும் முறுக்கை, உலக அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். வெளிநாடுகளில் மணப்பாறை முறுக்குக்கு தனி மவுசும் உண்டு என்கிறார்கள் வணிகர்கள்.