Published:Updated:

`மொத்த சொத்து மதிப்பில் 28 சதவிகிதம்!' - ஒரு பில்லியன் டாலர் நிதியளித்த ட்விட்டர் சி.இ.ஓ. #Corona

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
1 பில்லியன் டாலர் வழங்கிய பிரபலம் - கொரோனா
1 பில்லியன் டாலர் வழங்கிய பிரபலம் - கொரோனா

ஸ்கொயர் குரூப்பில் (square group) உள்ள தனது பங்குகளை, அவரின் ஸ்டார்ட் ஸ்மால் எல்.எல்.சிக்கு மாற்றி, கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இது கடும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளைத் தாக்கியுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி (Jack dorsey) கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து 1 பில்லியன் டாலர் வழங்கி இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவில், ஸ்கொயர் குரூப்பில் (square group) உள்ள தனது பங்குகளை, அவரின் ஸ்டார்ட் ஸ்மால் எல்.எல்.சிக்கு மாற்றி, கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளதாகவும், அது தனது மொத்த செல்வமதிப்பீட்டில் 28 சதவிகிதம். ட்விட்டரை விட ஸ்கொயர் குரூப்பில் அதிக பங்குகள் உள்ளதால், ஸ்கொயர் குரூப்பிலிருந்து நிதியளித்திருப்பதாகவும் ஜாக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்டார்ட் ஸ்மால் பவுண்டேஷன் அல்லது எல்.எல்.சியிலிருந்து நேரடியாகப் பயனாளிகளின் அடிப்படையில் மானியங்கள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு டாக்குமென்ட் லிங்க்கையும் (document link) இணைத்துள்ளார். இதன் மூலம் அனைத்து இடமாற்றங்கள், விற்பனை மற்றும் மானியங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

“ஹோம் டைம், மாம் டைம்”  - வைரலாகும் நடிகர் சிரஞ்சீவியின் முதல் ட்விட்டர் போஸ்ட்!

``இந்தத் தொற்றுநோயின் தாக்கம் முடிந்த பிறகு, இந்த நிதி சிறுமிகளுக்கான சுகாதாரம், கல்வி மற்றும் உலகளாவிய அடிப்படை வருமான (UBI) முயற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இப்போது தேவைகள் பெருகிகொண்டே வருகிறது. என்னுடைய இந்த உதவி, மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே இப்போது மக்களுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றும் அவருடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தொற்று நோய்களின் போது உணவு நிவாரண முயற்சிகளுக்கு உதவ அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 100 மில்லியன் டாலர் நிதியளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் ஆராய்ச்சிக்கு உதவ மார்க் சக்கர்பெர்க் 25 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு