பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ட்விட்டர் அதிரடிகள்... என்ன திட்டம் வைத்துள்ளார் எலான் மஸ்க்..?

எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
News
எலான் மஸ்க்

நிர்வாகம்

ட்விட்டருக்குள் நடந்த அக்கப்போர், தற்போது ட்விட்டருக்காக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் சொன்னார். பிற்பாடு, வாங்கவில்லை என்று பின்வாங்கினார். மீண்டும் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கினார். (இந்திய ரூபாய் மதிப்பில் 3.36 லட்சம் கோடி).

ட்விட்டரை வாங்கிய கையோடு பல ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கி யிருக்கிறார் எலான். ட்விட்டரின் சி.இ.ஓ-வாக இருந்த இந்தியரான பராக் அகர்வாலையும் நீக்கியிருக் கிறார். சி.இ.ஓ-வை நீக்கிய துடன் ஒட்டுமொத்த ட்விட்டர் இயக்குநர் குழு வையும் நீக்கி, இந்த நிறுவனத் தின் ஒரே இயக்குநராகத் தன்னை அறிவித்துக்கொண் டார். அதற்கு முன்பாக ட்விட்டர் நிறுவனத்தில் 9 இயக்குநர்கள் இருந்தார்கள்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

13 பில்லியன் டாலர் கடன்...

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்குவதாக அறிவித்தார் எலான். இந்த டீலை ட்விட்டர் நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. பிற்பாடு இந்த டீலில் இருந்து பின் வாங்கினாலும், கடந்த அக்டோபர் 27-ம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்.

ட்விட்டரை வாங்க 44 பில்லியன் டாலரில் கிட்டத் தட்ட 13 பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் பெற்றிக் கிறார் எலான். தவிர, ட்விட் டர் லாபமீட்டும் நிறுவனமும் அல்ல என்பதால், நிறுவனத்தை மீட்கும் அதிரடி நடவடிக்கையில் இருக்கிறார்.

காரணம், ட்விட்டர் நிறுவனம் தினமும் 4 மில்லி யன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட ஆரம்பித்தது. கடன் மற்றும் இழப்புகளை சரி செய்யக்கூடிய நடவடிக்கை களை எடுக்கத் திட்டமிட்டார். நிறுவனத்தில் மொத்தமுள்ள 7,500 பணியாளர்களில் சுமார் 3,700 பணியாளர்கள் நீக்கப் பட்டனர். இந்தியாவிலும் வேலை இழப்பு இருந்தது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்திருக்கிறார் எலான்.

ட்விட்டரை வாங்கியது ‘எவரிதிங்’ என்கிற செயலியை உருவாக்குவதற்காகதான் என்றும் ட்வீட் செய்திருந் தார் எலான். சீனாவில் மொபைல் பேமென்ட், சமூக வலைதளம், கருத்துப் பரிமாற்றம் என அனைத்தும் ஒரே செயலியில் இருக்கும். அதுபோல, ட்விட்டரைக் கொண்டுவர திட்டமிட் டிருப்பதாகவும் எலான் தெரிவித்தார். ஆனால், இது குறித்து மேலும் தகவல்களை அவர் வெளியிடவில்லை.

புளூடிக் சர்ச்சை...

தற்போதுள்ள வருமானத்தைவிட 2028-ம் ஆண்டு ஐந்து மடங்கு வருமானத்தை எட்ட இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார் எலான். அதனால் செலவுகளைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமல்லாமல், பயனாளர்கள் மூலமும் வருமானம் ஈட்டத் திட்டமிட்டார். ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் என்னும் புளூடிக் அடையாளம் வேண்டும் எனில், 8 டாலர் கட்டணம் என ட்விட்டர் அறிவித்தது. இதற்கு இந்தியா மட்டு மல்லாமல், சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை எல்லாம் எலான் கண்டு கொள்ளவே இல்லை.

இந்தக் கட்டணம் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். 20 டாலர் கட்டினால்தான் ட்விட்டர் சேவை பெற முடியும் எனில், ட்விட்டரே வேண்டாம் என்று பலரும் சொல்ல ஆரம்பித்த பிறகு இந்தக் கட்டணத்தை 8 டாலராகக் குறைத்தார். இந்தக் கட்டணம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இதர நாடுகளில் அமல்படுத்தப்படும் எனத்தெரிகிறது. இப்போதைக்கு ஏற்கெனவே புளூடிக் வைத்திருப்பவர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு பிரச்னை இருக்காது. அதைத் தொடர்ந்து புதிய விதிகள் வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் டெக் டோர்சே, ‘‘பணியாளர்கள் என்மீது கோபமாக இருப்பார்கள். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார்.

பாகுபலி படத்தில் போர் காட்சியில் ஒரு வாகனம் வரும். அதன் அருகேகூட யாரும் செல்ல முடியாத அளவுக்கு வருபவர்களை வெட்டி வீசித் தள்ளும். கிட்டத்தட்ட அந்த மனநிலையில் இருக்கிறார் எலான். ட்விட்டரை லாபப் பாதைக்குக் கொண்டு வரும் வரையில் அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்!