Published:Updated:

இந்தியா யுனிகார்ன்களின் நாடு!

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

இந்தியா யுனிகார்ன்களின் நாடு!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி, அதை ஒரு பில்லியன் டாலர் மதிப்பி லான நிறுவனமாக மாற்றுபவர்களை யுனிகார்ன்கள் என்று அழைக்கிறோம். 2021-ல் மட்டும் இந்தியாவில் 42 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனி கார்ன் அந்தஸ்த்தைப் பெற்றுள்ளன. இதன்மூலம் மொத்த யுனிகார்ன்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

யுனிகார்ன்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. 2020-ல் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே யுனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஆனால், 2021-ல் 42 நிறுவ னங்கள் யுனிகார்ன் அந்தஸ்த்தை எட்டியிருப்பதன் மூலம் உலக அரங்கில் யுனிகார்ன்களின் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.

இந்தியா யுனிகார்ன்களின் நாடு!

குறிப்பாக, உணவு டெலிவரி நிறுவனங்கள், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், மனிதவள மேலாண்மை சார்ந்த நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அதிக அளவில் நிதி உதவிகள் கிடைத்துள்ளன.

இந்த நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடானது பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிகபட்ச முதலீடுகள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும், நிதி சார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மீடியா, பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கும் கிடைத்துள்ளன. இவை மட்டுமே மொத்த முதலீடுகளில் 50% பங்கைப் பெற்றுள்ளன. இந்திய இன்டர்நெட் சார்ந்த நிறுவனங் களில் முதலீடானது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீட்டு ஒப்பந்தங்கள் 58% உயர்ந்துள்ளது. முதலீட்டு ஒப்பந்தங் களின் மதிப்பும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்தப் போக்கில் வளர்ச்சி அடையும் பட்சத்தில் இந்தியா அதற்கு முன் உள்ள இரண்டு இடங்களையும் எட்டுவதற்கான சாத்தியங்கள் உருவாகும் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism