Published:Updated:

யுனிகார்னாக மாறிய ஸ்டார்ட்அப்கள்... உற்சாகத்தில் புதிய தொழில்முனைவோர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிர்மித் பரேக், அபய் ஹன்ஜூரா, விவேக் குப்தா
நிர்மித் பரேக், அபய் ஹன்ஜூரா, விவேக் குப்தா

ஸ்டார்ட்அப்கள்

பிரீமியம் ஸ்டோரி

ஓர் ஆண்டுக்கு முன்பு யுனிகார்ன் (ரூ.7,500 கோடி மதிப்பு கொண்ட நிறுவனங்களைக் குறிப்பது) என்பது பெரும் கொண்டாட்ட மாகவே இருந்தது. ஆனால், தற்போது வழக்கமான நிகழ்வாக மாறியிருக்கிறது. 2011 முதல் இதுவரை 69 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கின்றன. நடப்பு 2021-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 31 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கின்றன. இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களுக்குமேல் இருப்பதால், நடப்பு ஆண்டில் 40 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் யுனிகார்ன் நிலையை அடைந்த நான்கு நிறுவனங்களின் சுருக்கமான பின்னணியைப் பார்ப்போம்.

அப்னா

‘அப்னா டைம் ஆகயா’ (எங்களுக்கு நல்ல காலம் பிறந்துடுச்சு’) என்னும் பிரபல இந்தி பாடலில் இருந்து நிறுவனத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள். இந்தியாவில் விரைவாக யுனிகார்ன் நிலையை அடைந்த நிறுவனம் இது. 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 21 மாதங்களில் யுனிகார்ன் நிலையை அடைந்திருக் கிறது. நிர்மித் பரேக் இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

புளூகாலர் மற்றும் கிரே காலர் பணியாளர் களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கும் நிறுவனம் இது. பிக்பாஸ்கட், ஸ்விக்கி, அமேசான், பைஜூஸ், டெலிவரி உள்ளிட்ட நிறுவனங் களுக்குத் தேவையான பணியாளர்களை இந்த நிறுவனம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது.

நிர்மித் பரேக்
நிர்மித் பரேக்

வேலை தேடுபவர்களுக்கு எந்தச் செலவும் இல்லை. இந்தச் செயலியில் இணைவதன் மூலம் பயோடேட்டா உருவாக்கப்பட்டு, தேவையான நிறுவனங்களுக்குச் செல்லும். இந்தத் தளத்தை 1.6 கோடி நபர்கள் பயன்படுத்து கிறார்கள். 50 லட்சம் வேலைவாய்ப்புகள் இந்தத் தளத்தில் உள்ளன.

கடந்த 2020 ஆகஸ்டில் சீரியஸ் ஏ முதலீடு (80 லட்சம் டாலர்), 2021-ம் ஜூனில் சீரியஸ் பி முதலீடு (7 கோடி டாலர்) மற்றும் செப்டம்பரில் சீரியஸ் சி முதலீடான 10 கோடி டாலரைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 110 கோடி டாலரைத் தொட்டிருக்கிறது.

இப்போதைக்கு 28 நகரங்களில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. விரைவில் பல நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் தொடங்கும் திட்டம் இருக்கிறது. இந்த நிறுவனம் இதுவரை வருமானம் ஈட்டத் தொடங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இதுவரை பல செலவுகளைச் செய்து வந்தோம். இனி வருமானம் ஈட்டும் பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபடுவோம் என அப்னா தெரிவித் திருக்கிறது.

காயின் ஸ்விட்ச் குபேர்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி தொடர்பான நிச்சயமற்ற சூழல் இருந்தாலும், இந்தப் பிரிவில் இரண்டு நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டியுள்ளன. முன்னதாக, காயின் டி.சி.எக்ஸ் என்னும் நிறுவனம் முதலில் யுனிகார்ன் நிலையை எட்டியது.

தற்போது காயின் ஸ்விட்ச் நிறுவனம் எட்டியிருக்கிறது. 26 கோடி டாலரரைத் திரட்டியதன் மூலம் காயின் ஸ்விட்ஸ் குபேர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 190 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. (காயின் டி.சி.எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 110 டாலர் மட்டுமே). ஆறு மாதங்களில் நான்கு மடங்குக்குமேல் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது.

2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சர்வதேச கிரிப்டோ அக்ரிகேட்டர் நிறுவனமாகச் செயல்பட்டது. 160 நாடுகளுக்கு மேல் செயல்படுகிறது. இந்தியாவில் கடந்த 14 மாதங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனம் செயல்பாட்டைத் தொடங்கியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் வைத்துள்ளது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி என்பது சட்ட விரோதம் அல்ல என்றாலும், இதுகுறித்தும் இன்னும் முறைப்படுத்தப் படாமல் இருக்கிறது. வளர்ந்துவரும் இந்தத் துறையில் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க காத்திருப்போம்.

ரிபெல் ஃபுட்ஸ்

கிளவுட் கிச்சன் பிரிவில் செயல்படும் ரிபெல் ஃபுட்ஸ் இந்தியாவின் சமீபத்திய யுனிகார்ன். இந்த நிறுவனம் சமீபத்திய சீரியஸ் எஃப் முதலீட்டைப் பெற்றிருக்கிறது. கத்தார் இன்வெஸ்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம்,17.5 கோடி டாலர் முதலீட்டைச் செய்தது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 140 கோடி டாலராக உள்ளது.

இந்த நிறுவனம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ரெஸ்டாரன்டாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆன்லைன் பிரிவில் மட்டுமே செயல்படுகிறது. பிரியாணி முதல் பீட்சா வரை 12-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை நடத்துகிறது இந்த நிறுவனம்.

இந்தியா மட்டுமல்லாமல் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் (இந்தோனேசியா, இங்கிலாந்து, யு.ஏ.இ, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், வங்கதேசம்) இந்த நிறுவனம் செயல்படுகிறது. தற்போது கிடைத்திருக்கும் இந்த நிதி மூலம் சர்வதேச செயல்பாட்டில் கவனம் செலுத்த இந்த நிறுவனம் திட்ட மிட்டிருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் அமெரிக்காவில் ஐ.பி.ஓ வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறது.

லிசியஸ் (Licious)

இந்த நிறுவனத்தை சுருக்கமாக, ஆன்லைன் கறிக்கடை என்று சொல்லாம். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இறைச்சிக் கடைகளுக்குச் சென்றுதான் மாமிசம் வாங்கிச் சாப்பிடுகின்றனர். வென்ச்சர் கேப்பிடல் துறையில் பணியாற்றிய விவேக் குப்தா மற்றும் அவரின் நண்பர் அபய் ஹன்ஜூரா ஆகியோர் இணைந்து 2015-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

அபய் ஹன்ஜூரா, விவேக் குப்தா
அபய் ஹன்ஜூரா, விவேக் குப்தா

டைரக்ட் டு கஸ்டமர் பிரிவில் யுனிகார்ன் நிலையை அடைந்த முதல் நிறுவனம் இதுதான். இந்தியாவில் இறைச்சியைத் தவிர, சாப்பிடும் பெரும்பாலான பொருள்களுக்கு பிராண்ட் இருக்கிறது. ஆனால், இறைச் சியை மட்டும் கறுப்பு கலர் பிளாஸ்டிக் கவரில் கொண்டு செல்கிறோம். இதை மாற்ற வேண்டும் என நினைத்ததால்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கியதாக இதன் நிறுவனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னை, கோவை உள்ளிட்ட 14 இந்திய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. சீரியஸ் ஜி முதலீட்டை ஐ.ஐ.எஃப்.எல் நிறுவனத்திடம் இருந்து பெற்றது. இதன் மூலம் யுனிகார்ன் நிலையை எட்டியது. 3,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இதில் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது கிடைத்திருக்கும் நிதியை வைத்து ஆப்லைப் ஸ்டோர் மற்றும் ரெடி டு குக் பிரிவில் கவனம் செலுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் தொடங்க பணம் கிடைப்பது கடினமாக இருந்தது. தற்போது முதலீடு இருக்கிறது. ஆனால், முதலீடு செய்ய போதுமான நிறுவனங்கள் இல்லாமல் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு