எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலாகி, அது குறித்து பலரும் அலசி ஆராய்ந்துவருகிறார்கள். இந்த நிலையில், ‘யுனைடட் வே சென்னை’ என்ற அமைப்பு கடந்த 8-ம் தேதி அன்று பட்ஜெட் விவாதத்தை நடத்தியது. `இந்தியப் பொருளாதாரம் மீட்புப் பாதையில் செல்கிறதா?’ என்ற தலைப்பில் நடந்த இந்த விவாதத்தில், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவுத்துறைச் செயலாளர் டி.வி.சோமநாதன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரும் சர்வதேசப் பொருளாதார நிபுணருமான டாக்டர் அனந்த நாகேஸ்வரன், சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் சேஷசாயி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினார்கள்.

இந்தக் கலந்துரையாடலில் டி.வி சோமநாதன் சொன்னதாவது... ‘‘பொருளாதாரத்தின் அடிப்படையிலும் ஸ்திரத்தன்மையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் விவேகமான சலுகைகளை வழங்கும் வகையில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாயம், உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அணுகுமுறையை மாற்றி லாபத்தைப் பெருக்கலாம்.

இந்த பட்ஜெட்டின் நோக்கம் விவசாய உற்பத்தியை இரட்டிப்பு ஆக்குவதல்ல; விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ஆக்குவது. நடப்பு நிதியாண்டில்திருத்தப்பட்ட செலவினம் முந்தைய ஆண்டைவிட 16% அதிகம். பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தச் செலவினம் செய்யப்பட்டிருக்கிறது. உள்நாட்டு முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் காண்பதற்கு மிகவும் உதவும். குறிப்பாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக யுத்தம், பிரெக்ஸிட் காரணமாக நிச்சயமற்றதன்மை, வாகனத் துறையில் மந்தநிலை ஆகிய காரணங்கள் மற்ற தெற்காசிய நாடுகளின் பொருளாதாரங்களை விட இந்தியாவுக்கு சாதகமாக உள்ளன.”

‘‘சூப்பர் வளர்ச்சி என எட்டவியலாத எண்களைச் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். எனவே, வரும் ஆண்டில் 6 முதல் 6.5% வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கலாம்’’ என்றார் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.

உள்நாட்டு முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது, பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும்!

இந்தக் கருத்தரங்கின் இன்னொரு பகுதியாக தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான முதலீடு பற்றிப் பேசப்பட்டது. இந்தக் கலந்துரையாடலுக்கு ஹெச்.டி.எஃப்.சி-யின் ராகேஷ் சிங் தலைமை தாங்கினார். கோட்டக் ஏ.எம்.சி-யின் கடன் பிரிவின் சி.ஐ.ஓ லட்சுமி ஐயர், ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் ஏ.எம்.சியின் நிதி மேலாளர் மற்றும் ஆராய்ச்சித் தலைவர் அனிஷ் தவாக்லி, இன்வெஸ்கோவின் நிதி மேலாளர் அமித் கணத்ரா எனப் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை விளக்கமாக ஆராய்வதாக இருந்தது இந்தக் கருத்தரங்கு என்று சொன்னால் அது மிகையில்லை!