Published:Updated:

மத்திய அரசின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன்; யார் இவர்?

V. Anantha Nageswaran ( Photo: Vikatan )

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்த இவர், அகமதாபாத்தில் உள்ள IIM-ல் MBA படித்தார். கிரெடிட் சூஸ், ஜூலியஸ் பேயர் பேங்க் போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

மதுரையில் பிறந்து வளர்ந்த டாக்டர் அனந்த நாகேஸ்வரன், தற்போது இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்தப் பதவியை வகித்துவரும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் விரைவில் பணிக்காலம் முடிந்து, கல்விப்பணிக்குத் திரும்புவதையடுத்து அனந்த நாகேஸ்வரன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

V. Anantha Nageswaran
V. Anantha Nageswaran
Photo: Vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்த இவர், அகமதாபாத்தில் உள்ள IIM-ல் MBA படித்தார். கிரெடிட் சூஸ், ஜூலியஸ் பேயர் பேங்க் போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்துவரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில், ஒரு ஆலோசகராக இடம்பிடித்தார். தற்போது, மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் பதவிக்குப் பலரும் போட்டியிட்ட நிலையில், அனந்தநாகேஸ்வரனுக்கு அது கிடைத்திருப்பது தமிழகத்துக்குப் பெருமை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவருக்கும் நாணயம் விகடனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சர்வதேச பொருளாதாரம் குறித்து நாணயம் விகடனில் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தவர். சர்வதேச நிலைமைகள் குறித்து நாணயம் விகடனில் பல பேட்டிகளைத் தந்துள்ளார்.

நாணயம் விகடன் நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாசகர்களுக்கு உலகப் பொருளாதார நிலை குறித்து விளக்கியிருக்கிறார். 2019-ம் ஆண்டு பொருளாதார நிலை பற்றி நாணயம் விகடனுக்கு அவர் அளித்த நேர்காணல்...