நடப்பு
பங்குச் சந்தை
இன்ஷூரன்ஸ்
Published:Updated:

41.3% லாபம் பார்க்கும் தடுப்பூசி நிறுவனம்..! வியக்க வைக்கும் சீரம்

சீரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
சீரம்...

CORPORATE

இன்றைக்கும் நாம் கேட்கும் முக்கியமான கேள்வி, ‘தடுப்பூசி போட்டாச்சா...’ என்பதாகவே இருக்கிறது. இந்தத் தடுப்பூசித் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

41.3% லாபம் பார்க்கும் தடுப்பூசி நிறுவனம்..! வியக்க வைக்கும் சீரம்

இந்த நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியா முழுக்க மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2020-ம் ஆண்டில் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய நிறுவனங்களில் அதிக லாப வரம்பு உள்ள நிறுவனமாக சீரம் திகழ்கிறது.

2020-ம் நிதி ஆண்டில் 418 நிறுவனங்கள் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளன. இதில் அதிகபட்சமாக சீரம் நிறுவனத்தின் லாப விகிதம் 41.3 சதவிகிதமாகும். அதாவது, 5,446 கோடி ரூபாய் வருமானத்தில் 2,251 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டியிருக்கிறது.

ஆனால், ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் பார்மா நிறுவனங்களின் நிகர லாபம் குறைவாகவே இருக்கிறது. அதிகபட்ச லாப விகிதம் 28% மட்டுமே.

ஆனால், இப்போதும் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் முன்பணம் தந்து தடுப்பூசியை வாங்கி வருவதால், இதன் லாபம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்!