Published:Updated:

‘ஆப்’ மூலம் காய்கறி விற்பனை... மாதம் ரூ.30,000 லாபம்!

காய்கறி 
விற்பனை
பிரீமியம் ஸ்டோரி
News
காய்கறி விற்பனை

“கரூர் நகரம் மட்டுமன்றி, கரூர் மாவட்டம் முழுக்க இப்படி ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனையைச் செய்ய முயன்று வருகிறேன்.”

‘பெரிய கம்பெனியில் வேலை’ என்ற எல்லையை உடைத்து, சொந்தத் தொழில் செய்து சாதிக்கும் இளைஞர்கள் இப்போது பெருகிவருகிறார்கள். கரூரைச் சேர்ந்த மகேஸ்வரன் இதற்கு ஓர் உதாரணம்.

இன்ஃபோசிஸில் கிடைத்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, கரூர் மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரம் செய்துவருகிறார் மகேஸ்வரன். கரூர் நகரத்துக்குள் உணவு டெலிவரி செய்யும் மூன்று ஸ்டார்ட்அப் கம்பெனிகள் மூலம் காய்கறிகளை டோர் டெலிவரி செய்து, மாதம் ரூ.30,000 வரை சம்பாதித்து கலக்கிவருகிறார்.

காய்கறி
காய்கறி

பூர்வீகமாகவே மகேஸ்வரனின் தாத்தா காளியப்பன், தந்தை ஜெகதீஷ் என காய்கறி மொத்த வியாபாரம் செய்த குடும்பம்தான். ஆனால், மகேஸ்வரனைப் பெரிய படிப்பு படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, கைநிறைய சம்பாதிக்கவைக்க வேண்டும் என்று பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவைத்தார்கள் அவர் குடும்பத்தினர். தொடர்ந்து நடந்தவை பற்றி, காய்கறி விற்பனைக்கு இடையில் கிடைத்த நேரத்தில் நம்மிடம் விவரித்தார் மகேஸ்வரன்.

“கடந்த வருடம்தான் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்தேன். கேம்பஸ் இன்டர்வியூவில் இன்ஃபோசிஸ் கம்பெனியில் ரூ.16,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்ததும் வீட்டில் உள்ளவர்களுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், என் நண்பர்கள் சிலர் பெரிய கம்பெனிகளில் கிடைத்த வேலையை உதறிவிட்டு, சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து எனக்கும் மனமாற்றம் ஏற்பட்டது. சொந்தத் தொழில் செய்ய முடிவெடுத்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கரூர் நகரம் மட்டுமன்றி, கரூர் மாவட்டம் முழுக்க இப்படி ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனையைச் செய்ய முயன்று வருகிறேன்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`தாத்தா, அப்பா செய்யும் காய்கறி வியாபாரத்தையே ஸ்மார்ட்டாகச் செய்வோம்’ என்று முடிவெடுத்தேன். படிக்கும் காலத்திலேயே விடுமுறை நாள்களில் அப்பாவுடன் மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அனுபவம் இருந்தது; இந்தத் தொழில் பற்றி ஓரளவு ஐடியாவும் இருந்தது. ஊட்டி, மேட்டுப்பாளையம், பாலக்கோடு, ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கரூர், பெங்களூரு ஆகிய இடங்களில் காய்கறிகள் வாங்கி வந்து, மொத்த வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.

காய்கறி 
விற்பனை
காய்கறி விற்பனை

முதலில் தொழில் கொஞ்சம் புரிபடாமல் போக்குக் காட்டியது. நான் அசரவில்லை. நிதானமாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். மெள்ள மெள்ள வியாபார சூட்சுமம் புரிபட ஆரம்பித்தது.

கரூரில் மட்டும் இயங்கிவரும் ஃப்ளையர் ஈட்ஸ், டெலிவரி ஸ்டார், ஏட்ராம்ஸ் ஆகிய உணவு டெலிவரி ஸ்டார்ட்அப் கம்பெனிகளை அணுகினேன். அவர்களின் ஆப் மூலமாக தரமான காய்கறிகளையும் டோர் டெலிவரி செய்யலாம் என்பதைச் சொன்னேன். கரூரில் அதுவரை இப்படி ஆப் மூலமாக காய்கறி விற்பனை செய்யப்படவில்லை. புதிய முயற்சியாக இருந்தாலும் நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்டார்கள். ஆப்களில் காய்கறி வியாபாரத்துக்கு என தனி டிசைன்களை டெவலப் செய்து தந்தார்கள்.

உணவுப் பொருள்கள் தொடர்பான விலைப்பட்டியல் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரே அளவில் இருக்கும். ஆனால், காய்கறி விலைப்பட்டியல் நாளுக்கு நாள் மாறும் என்பதால், வாடிக்கையாளர்கள் இதற்கு ஆதரவு தருவார்களா என்ற சந்தேகம் வரவே, முதலில் வெறுமனே ட்ரையல் மட்டுமே பண்ணினோம். அதற்கு வாடிக்கையாளர்களிடம் கிரீன் சிக்னல் கிடைத்தது. முழுவீச்சுடன் ஆப் மூலமாக காய்கறி விற்பனையைத் தொடங்கினோம்.

முதல்தரமான காய்கறிகளை மட்டுமே ஆப் மூலம் விற்பனை பண்ணத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தினமும் அதிகபட்சம் 20 கிலோ வரை காய்கறிகளை விற்பனை செய்ய முடிந்தது. தரமான காய்கறிகளைத் தந்ததால், மெள்ள மெள்ள வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். இப்போது தினமும் 150 ஆர்டர்கள் வரை கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. தினமும் 100 கிலோ வரை காய்களை ஆப் மூலமாக விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த டிசம்பர் மாதம் வெங்காயம் ரூ.160-க்கு விற்றபோது, நான் ஒரு கிலோ வெங்காயத்தை 139 ரூபாய்க்குக் கொடுத்தேன். அதேபோல், என்னிடம் ஆப் மூலமாக வாடிக்கையாளர்கள் கேட்கும் காய்கறி தரம் குறைந்ததாக இருக்கும் பட்சத்தில், போனில் ‘நீங்க கேட்கும் காய்கறி வதங்கிப் போய்விட்டது. அதற்கு பதிலாக ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வேறு காய்கறியை வாங்கிக் கொள்கிறீர்களா...’ என்று கேட்பேன். என்னுடைய இந்த அணுகுமுறை வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

காய்கறி 
விற்பனை
காய்கறி விற்பனை

தினமும் 22 ஹோட்டல்களுக்கு நேரடியாக காய்கறி சப்ளை செய்துவருகிறேன். தவிர, கரூரில் யாரும் கொடுக்காத செல்லரி லீக்ஸ், உரித்த பூண்டு, ஐஸ்பெர்க், ஸ்ப்ரிங் ஆனியன், பாஸ்லி, லெட்டியூஸ் என சைனீஸ் காய்கறிகளை ஊட்டி, பெங்களூரிலிருந்து வாங்கி வந்து குறைந்த விலைக்குத் தருகிறேன்.

காய்கறிகளை மார்க்கெட் விலையைவிட கிலோவுக்கு இரண்டு ரூபாய் குறைவாக ஆப்கள் மூலம் விற்பனை செய்கிறேன். அதனாலும், எனக்கு கஸ்டமர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறார்கள். எல்லாச் செலவுகளும் போக மாதம் ரூ.30,000 வரை லாபம் கிடைக்கிறது. இது குறைவாகத் தெரிந்தாலும், குறுகியகாலத்திலேயே நான் இந்த லாபத்தை எட்டியதால் பலரும் பாராட்டுகிறார்கள்.

கரூர் நகரம் மட்டுமன்றி, கரூர் மாவட்டம் முழுக்க இப்படி ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனையைச் செய்ய முயன்று வருகிறேன். அதேபோல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, கீரைகளையும் ஆப் மூலமாக விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய இலக்குகள் வைத்திருக்கிறேன். ஸ்மார்ட் வழியில் கடின உழைப்பைச் செலுத்தினால், அத்தனை இலக்குகளையும் இலகுவாக அடைய முடியும்” என்கிறார் மகேஸ்வரன்.

வழக்கமாக நாம் செய்யும் தொழிலில் டெக்னாலஜியைப் புகுத்தினால், அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்று நிரூபித்திருக்கும் இந்த இளைஞரைப் பாராட்டுவோம்!