தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வேல் டெக் இன்குபேட்டர்!

வேல் டெக் இன்குபேட்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
வேல் டெக் இன்குபேட்டர்

ஸ்டார்ட்அப்

இன்றைய இளைஞர்களுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்துக் கான ஐடியாவை வளர்த் தெடுப்பது எப்படி, இதற்கு எந்த நிறுவனம் உதவியாக இருக்கும் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

ஸ்டார்ட்அப் தொழில் நிறுவனங்களுக்கான ஐடியாவை வளர்த்தெடுக்க உதவும் மையங்கள் இன்குபேட்டர்கள் என அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு நகரங்களின் கல்வி மையங் களில் இன்குபேட்டர்கள் உள்ளன. அவற்றில் முக்கிய மானதாக இருக்கிறது, சென்னை ஆவடிக்கு அருகில் உள்ள வேல்டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் (VEL TECH TBI). இந்த இன்குபேட்டரின் பணிகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் இதன் தலைவர் டாக்டர் ராஜாராமன் வெங்கட்ராமன்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 
வழிகாட்டும் வேல் டெக் இன்குபேட்டர்!

‘‘இது ஸ்டார்ட்அப் யுகம். கல்லூரியில் படித்து முடித்த நிறைய மாணவர்கள் ஐடியாக்களுடன் இருக் கிறார்கள். முன்பெல்லாம் இந்த ஐடியாக்களை எப்படி செயல்படுத்துவது எனத் தெரியாமல் இருந்தது. இப்போது ‘டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர்’ என்கிற கான்செப்ட்டில் பல்கலைக்கழகம் மூலமாக இந்தியா முழுக்க இன்கு பேட்டர் அமைப்புகள் உருவாகியிருக்கிறது. மத்திய அரசாங்கம் பல்கலைக் கழகங்களைத் தேர்வு செய்து, அவற்றில் இன்குபேட்டர் களை அமைத்திருக்கிறது.

நிதி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (NIDHI Centre of excellence) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் ஐந்து இன்கு பேட்டர்களுக்கு மட்டும் நிதியுதவி செய்து உள்ளது. அதில் எங்களுடைய இன்கு பேட்டரும் ஒன்று.

வேல் டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் 2010-ல் உருவாக்கப்பட்டது. 2010-ல் ஸ்டார்ட்அப் என்பது மிகக் குறைவு. அதுவும் சில இடங்களில் மட்டும்தான் இருந்தது. ஆனால், அப்போதே இ-வேஸ்ட் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (e-waste centre of excellence) ஆரம்பிச்சோம். அப்போது இ-வேஸ்ட் என்ற ஒரு கான்செப்ட் கிடையாது. இ-வேஸ்ட் எனப்படும் எலெக்ட்ரானிக் வேஸ்ட் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினோம்.

2022-ம் ஆண்டில் 275-க்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எங்களிடம் பதிவு செய் துள்ளன. இது தவிர, 50 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இன்குபேஷனில் சேர்வதற்கான பரிசீலனையில் உள்ளன. ஃபிசிக்கல் இன்குபேஷன் மட்டுமல்லாமல், விர்ச்சுவல் இன்குபேஷனையும் வைத்திருக்கிறோம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஸ்டார்ட்அப் எங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்.

இன்றைக்கு நிறைய இளைஞர்கள் ஐடியாக்களுடன் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு டெக்னாலஜி பற்றித் தெரிவதில்லை. ஐடியாவை எப்படி ஒரு புராடக்ட்டாக மாற்றுவது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இந்தப் பிரச்னையை சமாளிக்க நாங்கள் நிபுணர்கள் மூலம் வழிகாட்டுகிறோம்.

டாக்டர் ராஜாராமன் வெங்கட்ராமன்.
டாக்டர் ராஜாராமன் வெங்கட்ராமன்.

எங்களுடைய இரண்டாவது கட்டப் பணி, பிசினஸ் மென்டார்களின் உதவியை ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு ஏற்படுத்தித் தருவதாகும். ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கும் நிலைக்கு வந்தபின், அதை வாடிக்கையாளர்களிடம் எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது என்பது குறித்து மென்டார்கள் விளக்கு வார்கள். சிலிக்கான் வேலியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், கூகுளின் ஸ்டார்ட்அப் நிபுணர்கள், ஏ.ஐ தொடர்பாக ஜெர்மனியில் உள்ள நிபுணர்கள், இன்னோவேஷன் துறையில் சிறந்து விளங்கும் ஆஸ்திரேலிய நிபுணர்கள், மலேசியாவின் பயோடெக் நிபுணர்கள் எனப் பல விதமான மென்டார்கள் எங்கள் இன்குபேட்டரில் இருக்கும் உறுப்பினர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குபவர்கள் எங்கள் இன்குபேட்டரில் சேர்வதற்கு சில விதி முறைகள் உள்ளன. அவர்கள் தொடங்கும் தொழில் ஐடியா, இன்னோவேஷன் டெக்னாலஜியை வைத்து பிரச்னைகளைத் தீர்ப்பதுபோல இருக்க வேண்டும். அதைப் பெரிய அளவில் தொழிலாக உயர்த்தி, நிறைய வாடிக்கையாளர்களைச் சென்று சேர்கிற மாதிரி இருக்க வேண்டும். இது மாதிரி சிந்திக்கக்கூடிய இளைஞர்கள் எங்களுக்கு மெயில் அனுப்பினால், அவர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்புவோம். அதில் தங்களைப் பற்றிய தகவல்களை நிரப்பித் தந்தால், எங்களுடைய நிபுணர் குழு ஐடியாவை ஆய்வு செய்து, இந்த இன்குபேஷன் சென்டரில் சேர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

எங்கள் இன்குபேட்டர் சென்டரில் ஒருவர் சேர்ந்துfundவிட்டால், அவருடைய ஐடியாவை பெரிய தொழிலாக மாற்றத் தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுத் தந்துவிடுவோம்.

ஒரு ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு ஃபண்டிங் மிகவும் அவசியம். முன்பு ஒரு தொழிலுக்கான முதலீடு முதலில் குடும்பம், நண்பர்கள் என்று ஆரம்பிக்கும். ஏனென்றால், ஒரு பிசினஸ் தொடங்க முதல் முதலீடு அவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். இதை வைத்துதான் முதலில் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். அதனால் சிலரால் மட்டுமே ஸ்டார்ட்அப் பிசினஸ் தொடங்க முடிந்தது. ஆனால், இப்போது குடும்பத்தின் உதவி தேவை இல்லை. ஆரம்பகட்டத்தில் அரசே உதவி செய்கிறது. அதற்குப் பிறகு, பிசினஸை வளர்த் தெடுக்க ‘ஏஞ்சல் இன்வெஸ்ட்டார்’கள், ‘வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்டு’கள் போன்றவர்கள் இருக்கின்றனர். சில லட்சங்கள் வரையிலான ஃபண்டிங்கை ஏஞ்சல் இன்வெஸ்ட்டார்களும், கோடிகளைத் தாண்டிய தொகையை வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்டுகளும் தருவார்கள். ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனியை உலக அளவில் பெரிதாகக் கொண்டு வருவதற் காக அவர்கள் உதவி செய்வார்கள்.

எங்களிடம் ஸ்டார்ட்அப்பாக இருக்கும் ரெஜினோ வென்ச்சர்ஸ் என்கிற நிறுவனம் பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களுக்கு துபாயில் நடந்த எக்ஸ்போவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இது போன்று எங்களிடம் உறுப்பினராக இருந்த ஒரு ஃபுட் ரோபோடிக் புராசஸ் ஆட்டோ மேட்டிக் சொல்யூஷன்ஸ் கம்பெனி உலக அளவில் முதல் 75 நிறுவனங்களுக்குள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டுமல்ல, இன்னும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன

எங்கள் இன்குபேட்டர் லாப நோக்கத்துடன் செயல்படுவ தல்ல. ஸ்டார்ட்அப் நிறுவனங் களைப் பெரிய நிறுவனங்களாக வளர்த்தெடுப்பது ஒன்றே எங்கள் நோக்கம். எங்கள் இன்கு பேட்டரின் மார்க்கெட் மதிப்பு தற்போது ரூ.4,500 - ரூ.5,000 கோடியைத் தாண்டிவிட்டது. இது இன்னும் ஒரு வருடத்தில் ஒரு பில்லியனைத் (ரூ.8,000 கோடி) தாண்டிவிடும்.

எங்களுடைய முக்கியமான நோக்கம் என்னவெனில், எந்த ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும், அது நிலைத்து நிற்கிற மாதிரி வளர்க்க வேண்டும் என்பதே. ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 90% தோற்றுவிடுகின்றன என்று சிலர் சொல் கிறார்கள். ஆனால், எங்கள் இன்குபேட்டர் வழிகாட்டு தலுடன் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் 90% வெற்றி கண்டுள்ளன. காரணம், ஒவ்வொரு ஐடியாவையும் தோற்றுவிடக் கூடாது என்று கவனமாக வளர்த் தெடுக்கிறோம். இதற்காக 2018-ம் ஆண்டு சிறந்த இன்குபேட்டர் என்னும் விருதை அண்ணா பல்கலைக்கழகம் எங்களுக்கு வழங்கியது’’ என்று இந்த இன்குபேட்டரின் பாசிட்டிவ் அம்சங்களைச் சொல்லிக் கொண்டே போன ராஜாராமன்வெங்கட்ராமன், ‘‘அடுத்த சில ஆண்டுகளில் இந்த இன்குபேட்டர் மூலம் சுமார் 1000 ஸ்டார்ட்அப்கள் உருவாகும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

இன்றைக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வளர்த்தெடுக்க விரும்புகிறவர்கள் தங்கள் ஐடியாவைத் தனிப்பட்ட முறையில் செயல்படுத்த நினைத்து, தங்களுக்குத் தெரிந்த அளவில் செய்கிறார்கள். இப்படிச் செய்து ஓரளவு வெற்றி அல்லது தோல்வியைக் காண்பதைவிட இது மாதிரியான இன்குபேட்டர்களை அணுகி, அவர்களின் உதவியைப் பெறுவது மூலம் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.

ஸ்டார்ட்அப் தொடங்கி நடத்த நினைக்கும் இளைஞர்கள் வேல் டெக் பிசினஸ் இன்குபேட்டரை அணுகலாமே!

படங்கள்: லீன் பினேடிக்ட்

சந்திரகுமார்
சந்திரகுமார்

‘‘98 ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்திருக்கிறோம்..!’’

வேல் டெக் பிசினஸ் டெக்னாலஜி இன்குபேட்டரின் டீன் டாக்டர் சந்திரகுமாருடன் பேசினோம்.

‘‘வேல் டெக் பிசினஸ் டெக்னாலஜி இன்குபேட்டர் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உதவியுடன் இயங்கி வருகிறது. முதன்முதலில் 2010-ம் ஆண்டு அரசின் உதவி எங்களுக்குக் கிடைத்தது. 5 கோடி ரூபாய் எங்களது இ-வேஸ்ட் புரொகிராமுக்காக ஒதுக்கப்பட்டது. வெறும் 13 ஸ்டார்ட்அப்களுடன் ஆரம்பித்தோம்.

இன்குபேட்டர் ஆரம்பித்த சில ஆண்டுகளில் மூன்று ஸ்டார்ட்அப்கள் சிறப்பாகச் செயல்பட்டது. அதில் ஒன்று, கோவையைச் சார்ந்தது; மற்ற இரண்டு சென்னையைச் சார்ந்தது. பின்னர், நிதி பிராயஸ் திட்டத்தின் உதவியும் கிடைத்தது. தற்போது அந்தத் திட்டத்தின் மூலம் பல கோடி ஃபண்டிங் கிடைக்கிறது. 56-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களுக்கு துணையாக இருக்கின்றன. 2017-ம் ஆண்டு முதல் நிதி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸின் உதவியும் எங்களுக்குக் கிடைத்தது. அதன் மூலமாக நாங்கள் நிறைய ஸ்டார்ட்அப்களுக்கு உதவி செய்துவருகிறோம்.

இந்திய பிரதமரால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்டிங் புரொகிராம் மூலமாகவும் நிறைய ஸ்டார்ட்அப்கள் இயங்கி வருகின்றன. 2022 வரை நாங்கள் 98 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளோம். ஒவ்வொரு ஸ்டார்ட்அப்பிலும் ரூ.5 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை முதலீடு செய்துள்ளோம்.

யார் வேண்டுமானாலும் எங்களிடம் ஸ்டார்ட்அப்பாக சேர்ந்துகொள்ளலாம். ஸ்டார்ட்அப்கள் எங்களுடன் எப்போது வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம். எங்களுடைய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கும் நாங்களே முதல் தொழில் வாய்ப்பைத் தருகிறோம். உதாரணமாக, எங்களுடைய ஸ்டார்ட்அப் ஒன்று கோவிட் நேரத்தில் ஆட்டோமேட்டிக் சானிடைசர் மெஷினை உருவாக்கியது. அந்த இயந்திரத்தை நாங்களே முதலில் வாங்கி, அதை மாணவர்கள் பயன் படுத்துமாறு வைத்தோம். இது போன்று நாங்கள் செய்யும் உதவிகள் எங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உற்சாகமாகச் செயல்பட உதவுகிறது’’ என்றார் சந்திரகுமார்.