Published:Updated:

லண்டன் பங்களாவைக் காலி செய்வாரா மல்லையா?

விஜய் மல்லையா
பிரீமியம் ஸ்டோரி
விஜய் மல்லையா

சிக்கல்

லண்டன் பங்களாவைக் காலி செய்வாரா மல்லையா?

சிக்கல்

Published:Updated:
விஜய் மல்லையா
பிரீமியம் ஸ்டோரி
விஜய் மல்லையா

ராம் முத்தையா. லெ

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) அன்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கு லண்டனில் இருக்கும் ஒரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், விஜய் மல்லையா தன் குடும்பத்தோடு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சுவிஸ் வங்கியான யு.பி.எஸ் (UBS) மல்லையாவிற்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கு இது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

விஜய் மல்லையாவுக்கு உலகம் முழுவதும் பல விலையுயர்ந்த சொத்துகள் உண்டு. அதில் சொகுசு பங்களாக்கள் பல. அப்படிப்பட்ட சொகுசு பங்களாக்களில் ஒன்றுதான் இங்கி லாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் கார்ன்வால் டெர்ரஸில். பல மில்லியன் பவுண்டு மதிப்புள்ள இந்த பங்களாவில்தான் விஜய் மல்லையா, இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தப்பிச் சென்றது முதல் தனது 95 வயது தாயார் லலிதா மல்லையா மற்றும் மகன் சித்தார்த் மல்லையாவுடன் வசித்து வருகிறார்.

இந்த பங்களாவை ரோஸ் கேப்பிடல் நிறுவனம்மூலம் அடகு வைத்து ஸ்விஸ் வங்கி யான யு.பி.எஸ் வங்கியிடம் கடன் வாங்கியிருந் தார் மல்லையா. அந்த வங்கிக்கு 20.4 மில்லியன் பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 185.4 கோடி ரூபாய்) கடன்பட்டிருக்கும் அவர், அதை அடைக்கத் தவறியதால், யு.பி.எஸ் வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மல்லையா குடும்பத்தோடு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் இந்த தீர்ப்புக்குக் கோரிய தற்காலிக தடையையும் நிராகரித்து உள்ளார் நீதிபதி.

இனி யு.பி.எஸ் வங்கி அந்த பங்களாவைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் வழிவகை செய்து வருகிறது.

மல்லையா இன்னும் நீண்ட காலத்துக்கு இங்கிலாந்தில் இருக்க முடியாது என்பது மட்டும் நன்கு தெரிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism