Published:Updated:

மம்முட்டி, மோகன்லால் பெற்ற UAE கோல்டன் விசா என்றால் என்ன? அதை யாரெல்லாம் பெறலாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோல்டன் விசா பெற்ற நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி
கோல்டன் விசா பெற்ற நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி

ஐக்கிய அரபு நாடுகளின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டின் குடிமக்கள் போலவே அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கெளரவிக்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) அரசு தொடங்கியது.

ஏற்கெனவே பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். கடந்த ஜூலை மாதம் துபாயில் வசித்து வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கோல்டன் விசா பெற்றார். சமீபத்தில் முன்னணி மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோருக்கும் கோல்டன் விசா கிடைத்தது. இந்த நிலையில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோருக்கும் தற்போது கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

 துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

கோல்டன் விசா திட்டத்தை அறிமுகம் செய்தபோது, ``டாக்டர்கள், இன்ஜினீயர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்களில் திறமை மிக்கவர்களுடன் இணைந்து நாங்கள் செயல்பட விரும்புகிறோம். இதற்காகவே, இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எங்கள் பயணத்தில் அவர்கள் மிக முக்கியமானவர்கள். எங்கள் நாட்டைவிட்டு பிரிந்து செல்ல முடியாத மனநிலையை அவர்களிடத்தில் உருவாக்கவே இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அறிவும் திறமையுமுள்ளவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என ஐக்கிய அரபு நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

கோல்டன் விசா என்றால் என்ன?

நீண்டகால குடியுரிமை அடிப்படையில், ஒவ்வொரு 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையில் வழங்கப்படுவதுதான் இந்தக் கோல்டன் விசா. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், நல்ல திறமை படைத்த மாணவர்கள், அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை. இனம், நாடு, மொழி எந்த வேறுபாடும் பார்க்கப்படாமல் திறமையாளர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Pasport (Representational Image)
Pasport (Representational Image)
Image by Rudy and Peter Skitterians from Pixabay

கோல்டன் விசா வைத்திருந்தால்...

ஐக்கிய அரபு நாடுகளின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டின் குடிமக்கள் போலவே அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். அதே வேளையில், முதலீட்டாளர்களின் வர்த்தக நிறுவனம் தோல்வியைச் சந்தித்தால் அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறைந்தால் விசாவின் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் மருத்துவர்கள் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்ததையடுத்து, மருத்துவர்களும் தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தின் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகமுக்கு முதன்முதலாக கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு பெருமைப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் பெண் மருத்துவர் இவர் ஆவார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகத் துபாயில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பமும் விதிமுறையும்!

Business (Representational Image)
Business (Representational Image)
Image by Free-Photos from Pixabay
`மிகப்பெரிய பரிசு!'- யு.ஏ.இ அரசின் கோல்டன் விசா பெற்ற மோகன்லாலும், மம்முட்டியும்!

தொழில்முனைவோர்கள்: சுமார் ரூ.20.06 கோடியை அந்நாட்டிலுள்ள தங்களுடைய நிறுவனத்தின் மீது முதலீடு செய்திருக்கும் தொழில் முனைவோர் யாராக இருந்தாலும் 10 ஆண்டுக்கால கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது சுமார் 20 கோடி ரூபாயை பார்ட்னர்ஷிப் அடிப்படையிலும் அந்நாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவராக இருக்க வேண்டும்.

5 ஆண்டுக்கால கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சுமார் 10 கோடி ரூபாயை மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் முதலீடு செய்திருக்க வேண்டும். இதற்கு குறைவான முதலீடுகளைச் செய்திருக்கும் தொழில்முனைவோர்களால் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது. முதலீட்டைக் குறைந்தபட்சம் 3 வருடங்களுக்காவது அந்நாடில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

சிறப்பு திறன் கொண்டவர்கள்: இந்த பிரிவில் மருத்துவர், விஞ்ஞானிகள் மற்றும் சிறப்புவாய்ந்த திறன் படைத்தவர்கள் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். இவர்கள் எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், அவர்களின் திறன் சார்ந்த ஐக்கிய அரபு நாடுகளின் துறையின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்துக்கு, விஞ்ஞானிகள் `எமிரேட்ஸ் விஞ்ஞானிகள் கவுன்சில்' அல்லது அறிவியல் சிறப்புக்காக `முகமது பின் ரஷித் பதக்கம்' பெற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Passport 
(Representational Image)
Passport (Representational Image)
Image by Joshua Woroniecki from Pixabay

கலாசாரம் மற்றும் கலையில் ஆக்கபூர்வமான நபர்கள் கலாசார மற்றும் இளைஞர் அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதே போல மருத்துவர்களுக்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தனித்திறமைகளை அடிப்படையாகக் கொண்டு கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போதைய நிலையில் அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோல்டன் விசாவை பெற்றிருப்பதாக அமீரக அரசு தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு