Published:Updated:

`இதனால்தான் சமையல் எண்ணெய் விலையும் அதிகரிக்கிறது!' - வியாபாரி கூறும் காரணம் என்ன?

சமையல் எண்ணெய்

``செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் லிட்டர் 200 ரூபாய்க்கு வித்தது, இப்போ 210 ரூபாயா உயர்ந்திருக்கு. நல்லெண்ணெய் லிட்டர் 280 ரூபாய்க்கு விக்கிறோம். தேங்காய் எண்ணெய் லிட்டருக்கு 240 ரூபாயிலிருந்து 260 ரூபாய் உயர்ந்திருக்கு."

`இதனால்தான் சமையல் எண்ணெய் விலையும் அதிகரிக்கிறது!' - வியாபாரி கூறும் காரணம் என்ன?

``செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் லிட்டர் 200 ரூபாய்க்கு வித்தது, இப்போ 210 ரூபாயா உயர்ந்திருக்கு. நல்லெண்ணெய் லிட்டர் 280 ரூபாய்க்கு விக்கிறோம். தேங்காய் எண்ணெய் லிட்டருக்கு 240 ரூபாயிலிருந்து 260 ரூபாய் உயர்ந்திருக்கு."

Published:Updated:
சமையல் எண்ணெய்

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரால் இந்தியாவில் நேரடியாக பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்கம் அன்றாடத் தேவைகளில் மீது பாய்ந்துள்ளதால், தினசரி அத்தியாவசியத்தேவை பொருளின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.150 என விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்வின் காரணமாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ‌190-ஆக அதிகரித்துள்ளது. இதுபோலவே, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகளின் விலையும் எகிறி இருக்கிறது.

செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்
செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து தமிழகத்தின் எண்ணெய் உற்பத்திக் கேந்திரமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில் பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ராம் பிரகாஷிடம் பேசினோம்.

``எங்களது நிறுவனத்தில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துறோம். இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ராஜபாளையம், கோவில்பட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செஞ்சிட்டு வர்றோம். இப்போ மூலப்பொருள்கள் விலை மற்றும் கொள்முதல் விலையேற்றத்தால மார்க்கெட்டுல எண்ணெய் விலை அதிகரிச்சிருக்கு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் லிட்டர் 200 ரூபாய்க்கு வித்தது, இப்போ 210 ரூபாயா உயர்ந்திருக்கு. நல்லெண்ணெய் லிட்டர் 280 ரூபாய்க்கு விக்கிறோம். தேங்காய் எண்ணெய் லிட்டருக்கு 240 ரூபாயிலிருந்து 260 ரூபாய் உயர்ந்திருக்கு. இதுல நல்லெண்ணெய் தயாரிப்பதற்கான மூலப்பொருள் 75 கிலோ எள்ளு மூட்டை 8,500 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதுக்கு முன்னாடி 75 கிலோ எள்ளு மூட்டை அதிகபட்சம் 7,800 ரூபாய் வரைக்கும்தான் வித்திட்டு இருந்திச்சி.

சுத்தப்படுத்தும் முறை
சுத்தப்படுத்தும் முறை

அதன்படி இப்ப விக்கிற விலைக்கு கணக்கு பார்த்தா, ஒரு கிலோ எள்ளு 115 ரூபாய் விலை ஆகுது. எங்களுக்கான தேங்காய் காங்கேயத்தில் இருந்து கொள்முதல் செஞ்சிட்டு வர்றோம். கொள்முதல் விலை 95 ரூபாயிலிருந்து 105 ரூபாய் வரைக்கும் கூடிருக்கு. பாக்கெட் பண்ணி சந்தையில் விற்பனை ஆகுற எண்ணெய் தவிர, பெட் பாட்டிலையும் எண்ணெய்ய சந்தைக்கு கொடுக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வகையில், பெட் பாட்டில் ஒரு ரூபாய் விலை கூடிருக்கு. இதுக்கு முன்னாடி 8 ரூபாயாக இருந்த பெட் பாட்டில், இப்போ 9 ரூபாயாயிருக்கு. எனவே மூலப்பொருள் விலை கூடினதுனால, பொருளோட மொத்த அடக்கத்தை கணக்கு பண்ணி அதுக்கு ஏத்த மாதிரி விலையை உயர்த்தி நிர்ணயித்திருக்கோம்'' என்றார்.

பெட் பாட்டிலில் அடைக்கப்படும் எண்ணெய்
பெட் பாட்டிலில் அடைக்கப்படும் எண்ணெய்

பெட்ரோல்-டீசல்,சமையல் எரிவாயு உள்ளிட்ட கச்சாப் பொருள்களின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது சமையல் எண்ணெய் விலையும் இணைந்திருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக மாறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism