Published:Updated:

விற்பனையாகாத பி.எஸ் 4 வாகனங்கள்! - எதிர்காலம் என்ன?

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை மீதமிருக்கும் பி.எஸ்-4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத சூழலே நிலவுகிறது.

விற்பனையாகாத பி.எஸ் 4 வாகனங்கள்! - எதிர்காலம் என்ன?

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை மீதமிருக்கும் பி.எஸ்-4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத சூழலே நிலவுகிறது.

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்
ப்ரல் 1, 2020 முதல் நாடெங்கும் பி.எஸ்-6 (BS-6) மாசு விதிகள் அமலுக்கு வருகின்றன.

இந்தியா முழுவதுமிருக்கும் தனது 28,000-க்கும் அதிகமான பெட்ரோல் பங்க்குகளில் பி.எஸ்-6 பெட்ரோல்/டீசல் கிடைப்பதற்கு ஏதுவாக, 17,000 கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC). பி.எஸ்-6 இன்ஜின்களுக்கான உதிரிபாக உற்பத்தியும் தொடங்கிவிட்டது. ஆனால், பி.எஸ்-4 வாகனங்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்தபாடில்லை.

Honda Activa
Honda Activa

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டூவீலர் நிறுவனங்களின் நிலை?

டூ-வீலர் நிறுவனங்களைப் பொறுத்தவரை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மட்டும்தான் தன் வசமிருக்கும் பி.எஸ்-4 வாகனங்களை விற்று முடித்துவிட்டதாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஹோண்டா டூவீலர்ஸ் இந்தியா நிறுவனம், 5.5 லட்சத்துக்கும் அதிகமான பி.எஸ்-6 டூவீலர்களை நம் நாட்டில் விற்பனை செய்துவிட்டது. ஆனால், ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிக டூ-வீலர்களை விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப், தன் வசமுள்ள பி.எஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்திடம் மூன்று மாதகால அவகாசம் கேட்டிருக்கிறது. ஹோண்டாவும் கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. இதனாலேயே பி.எஸ்-4 வாகனங்களில் தற்போது 20,500 ரூபாய் வரை தள்ளுபடியை ஹீரோ கொடுத்துவருகிறது. மற்றபடி, இதர டூவீலர் நிறுவனங்களிடமிருந்து இது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை.

மே வரை நீட்டிக்க வேண்டும்

இந்தச் சூழலில் வாகன டீலர்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations of India - FADA), விற்பனையாகாமல் தேங்கியிருக்கும் பி.எஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு 2020, மே 31 வரை காலக்கெடுவை நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடியிருக்கிறது. இது தொடர்பாக முதலில் கொடுக்கப்பட்ட மனு, கடந்த 2020, பிப்ரவரி 14 அன்று உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இது நடந்த ஒன்றரை மாதத்தில் கொரோனா இந்தியாவுக்குப் பரவத் தொடங்கியதில் வாகன விற்பனை 70% வரை குறைந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், 2020, மே 31, வரை பி.எஸ்-4 வாகனங்களை விற்பனை செய்யவும், முன்பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருக்கிறது இந்த அமைப்பு. வருகிற 27-ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது நடந்ததுபோல...

2017-ம் ஆண்டில், ஏறக்குறைய 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 8.24 லட்சம் பி.எஸ்-3 வாகனங்களை (டூவீலர், 3 வீலர், கமர்ஷியல் & கனரக வாகனங்கள்) ஐந்து நாள்களுக்குள்ளாக விற்பனை செய்தாக வேண்டிய நிலைக்கு இந்திய ஆட்டோமொபைல் துறை தள்ளப்பட்டது. அப்போது நடந்ததுபோல இந்த முறையும் நடந்துவிடக் கூடாது என்பதில் வாகன உற்பத்தியாளர்களும், ஆட்டோ மொபைல் டீலர்களும் ஒருசேர உறுதியாக இருந்தார்கள். எனவே, குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே பி.எஸ்-4 வாகனங்களின் விற்பனை/முன்பதிவு ஆகியவற்றை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியுடனேயே செயல்பட்டார்கள். விலையில் தள்ளுபடிகள், நீட்டிக்கப்பட்ட வாரன்டி திட்டங்கள், அதிக எக்ஸ்சேஞ்ச் போனஸ் - லாயல்டி போனஸ் தொகை எனக் கொடுத்து, புதிய வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் இழுக்கும் வகையில் வாகனத் தயாரிப்பாளர்களும் கவனமாகவே இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால், இறுதி நேரத்தில் கொரோனா வந்து எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டது.

கார்
கார்

பி.எஸ்-6 கார்கள் விற்பனை எப்படி?

பி.எஸ்-4 கார்களைவிட பி.எஸ்-6 கார்களின் விலை உயர்வு சுமார் 3-5% வரை இருக்கிறது. இது டூவீலர்களுடன் ஒப்பிட்டால், குறைவுதான் (9-13%). இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகி, கடந்த ஆண்டிலிருந்தே பி.எஸ்-6 கார்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனாலும் தன்னிடமிருந்த பி.எஸ்-4 டீசல் கார்களுக்குத் தள்ளுபடிகளுடன் 5 ஆண்டு வாரன்டியும் கொடுத்தது. ஆனால், தன்வசமுள்ள பி.எஸ்-4 கார்களை விற்பனை செய்து முடித்துவிட்டதாக, அந்த நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை; தவிர விற்பனை முன்னிலையைத் தக்கவைக்க பி.எஸ்-6 கார்களிலும் தள்ளுபடிகளைப் பார்க்க முடிந்தது.

ஆனால், மற்ற நிறுவனங்களின் நிலைப்பாடு வேறு மாதிரி இருந்தது. பொருளாதார மந்தநிலையைக் கருத்தில்கொண்டு ஹோண்டா, ஹூண்டாய், மஹிந்திரா போன்ற நிறுவனங்கள், அடுத்த தலைமுறை மாடல்களின் அறிமுகங்களைக் கொஞ்சம் தள்ளி வைத்துள்ளன. அதற்கு பதிலாக, ஏற்கெனவே விற்பனையிலிருக்கும் மாடல்களை பி.எஸ்-6 விதிகளுக்கேற்ப மேம்படுத்தி, களமிறக்கி வருகின்றன. மாருதி சுஸூகி போலவே, ஹூண்டாயும் பி.எஸ்-6 கார்களில் தள்ளுபடி வழங்கிவருகிறது. ஆனாலும், அந்த கார்களின் விற்பனை முடிந்துவிட்டதா என்பது கேள்விக்குறிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெருக்கடியான இந்த நேரத்திலும், வால்வோ (ஃபுல் ரேஞ்ச்) மற்றும் மஹிந்திரா (XUV3OO, பொலேரோ) நிறுவனங்கள் சமயோஜிதமாகச் செயல்படுகின்றன. அதாவது, தங்கள் தயாரிப்புகளின் பி.எஸ்-6 வெர்ஷன்களைக் குறுகியகாலத்துக்கு பி.எஸ்-4 மாடலின் விலையிலேயே கொடுக்க முன்வந்துள்ளன. விலை உயர்வு வாடிக்கையாளருக்குக் குறையாகத் தெரியாதபடி முன்பைவிட அதிக வசதிகளுடனும், புதிய டிசைனுடனும் தனது பி.எஸ்-6 கார்களை வழங்கியது டாடா மோட்டார்ஸ். டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹேரியர் ஆகியவை அதற்கான உதாரணம். டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் பி.எஸ்-6 மாடல்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கப் பட்ட விலை ஒரு சுமையாகத் தெரியாது.

 bike
bike

இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன?

இந்தியா முழுவதும் 2020, மார்ச் 25 தொடங்கி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

எனவே, ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை மீதமிருக்கும் பி.எஸ்-4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத சூழலே நிலவுகிறது.

2020 பிப்ரவரியில் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும் கார் விற்பனையில் சரிவையே கண்டிருக்கின்றன. மேலும், அதிகபட்ச தள்ளுபடிகள் கொடுக்கப் பட்டாலும், வாகனத்தை 2020, மார்ச் 31-க்குள் முன்பதிவு செய்ய முடியாத சூழலே நீடிக்கும். எனவே, அந்தந்த வாகன உற்பத்தியாளர்கள், மீதமிருக்கும் பி.எஸ்-4 வாகனங்களை விற்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism