Published:Updated:

NSE சர்ச்சை: இமயமலை சாமியார் `நியமித்த' ஆனந்த் சுப்பிரமணியன்; யார் இவர்?

என்.எஸ்.இ

சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை என்.எஸ்.இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். என்.எஸ்.இ ஆலோசகர் பதவிக்கு அதிகாரியை நியமனம் செய்ய எந்த வித விளம்பரமும் செய்யாமல் வெறுமனே ஆனந்த் சுப்பிரமணியத்தை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தனர்.

NSE சர்ச்சை: இமயமலை சாமியார் `நியமித்த' ஆனந்த் சுப்பிரமணியன்; யார் இவர்?

சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை என்.எஸ்.இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். என்.எஸ்.இ ஆலோசகர் பதவிக்கு அதிகாரியை நியமனம் செய்ய எந்த வித விளம்பரமும் செய்யாமல் வெறுமனே ஆனந்த் சுப்பிரமணியத்தை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தனர்.

Published:Updated:
என்.எஸ்.இ

தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவிக் காலத்தில் என்.எஸ்.இ தொடர்பான முக்கிய தகவல்களை இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவருடன் இமெயில் மூலம் பகிர்ந்துகொண்டதாகவும், முகம் தெரியாத சாமியார் சொல்படிதான் சித்ரா முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பங்குச் சந்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டு உயர் அதிகாரிகளை நியமனம் செய்ததாகக் கூறி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி ரூ.3 கோடி அபராதம் விதித்தது. 2013-16-ம் ஆண்டுக்கு இடையே என்.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரியாகவும், எம்.டி-யாகவும் இருந்த சித்ரா பங்குச்சந்தை தொடர்பான தகவல்கள், டிவிடெண்ட், கம்பெனி ஆண்டறிக்கை விபரம் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் ரகசிய சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனந்த் சுப்பிரமணியன் வந்தது எப்படி?

சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை என்.எஸ்.இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். என்.எஸ்.இ ஆலோசகர் பதவிக்கு அதிகாரியை நியமனம் செய்ய எந்த வித விளம்பரமும் செய்யாமல் வெறுமனே ஆனந்த் சுப்பிரமணியத்தை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தனர்.

சித்ராவின் செல்வாக்கு காரணமாக வேறெந்த அதிகாரிக்கும் இல்லாத அளவுக்கு ஆனந்த்துக்கு ஆண்டுக்குச் சம்பளமாக ரூ.4 கோடி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், என்.எஸ்.இ-யில் ஆனந்த் பணியில் நியமிக்கப்பட்டபோது முன்பு செய்த பணிகள் தொடர்பாக எந்த விதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அதோடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பதவிக்கு அத்துறை தொடர்பாக எந்தவித அனுபவமும் இல்லாத ஆனந்த் நியமிக்கப்பட்டார். அவரை சித்ரா நியமிக்க முடிவு செய்தபோது தேசிய பங்குச் சந்தையில் வேறு எந்த அதிகாரியும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செபி அமைப்பு நடத்திய விசாரணையில் சித்ராவும் ஆனந்தும் இணைந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதாகத் தெரியவந்துள்ளது. சாமியாரின் பரிந்துரையின் பேரில் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஆனந்துக்கு அளவுக்கு அதிகமாகச் சம்பளம் கொடுக்கவும் சித்ரா முடிவு செய்தார். ஆனந்துக்குக் கொடுக்கப்படும் பணம் அப்படியே முகம் தெரியாத சாமியாருக்கு சென்றடைந்தது என்று செபி தெரிவித்துள்ளது.

ஆனந்துக்கு அவர் பணியில் நியமிக்கப்பட்ட துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லை என்றும், 20 ஆண்டுகளாக முகம் தெரியாத சாமியாரின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டு வந்த சித்ரா, என்.எஸ்.இ-யில் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு, அவரது ஒப்புதல் மற்றும் ஆலோசனை இல்லாமல் எதையும் செய்யவில்லை என்று செபி தெரிவித்துள்ளது.

ஆனந்த் (சர்க்கிளில் இருப்பவர்)
ஆனந்த் (சர்க்கிளில் இருப்பவர்)

சித்ராவுக்கு ஆலோசகராக மாறிய ஆனந்த்

2015-ம் ஆண்டு என்.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ராவுக்கு ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு சித்ரா எந்த முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் முழுக்க முழுக்க ஆனந்தை சார்ந்தே இருந்தார். என்.எஸ்.இ-யின் ரகசிய தகவல்களை வேறு யாருக்கும் சொல்லக் கூடாது. ஆனால், ஆலோசகராக இருந்த ஆனந்த் தேசிய பங்குச்சந்தை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் அதிகாரம் கொண்டவராக இருந்தார்.

பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு ஆனந்த் தனது பதவியைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சில நேரங்களில் அவருடன் சித்ராவும் சென்றுள்ளார். சித்ராவிடம் ஆனந்த் எப்படி தெரியும் என்று கேட்டால், ஆனந்த் மனைவி என்.எஸ்.இ-யில் பணியாற்றுவதாகவும், அவர் மூலம்தான் அறிமுகம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பதவி விலகிய சித்ரா

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் சித்ரா மர்ம சாமியாருடன் தேசிய பங்குச்சந்தை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டது குறித்து தெரிய வந்து போர்டு மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டது. அதோடு ஆனந்த் விதிகளுக்கு மாறாக பதவியில் நியமிக்கப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

உடனே ஆனந்த் பதவி விலகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து அதே ஆண்டு நவம்பர் மாதம் சித்ரா பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். இது தொடர்பாக அதே ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி நடந்த போர்டு மீட்டிங்கில் சித்ரா பதவி விலக அனுமதிக்கப்பட்டது.

சித்ரா விதிமுறைகளை மீறி தேசிய பங்குச்சந்தை தகவல்களை கண்ணுக்குத் தெரியாத மர்ம சாமியாருடன் பகிர்ந்துகொண்ட குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய போர்டு எப்படி அனுமதித்தது என்றும் செபி கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் சித்ரா ராமகிருஷ்ணா
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் சித்ரா ராமகிருஷ்ணா

சித்ரா சொல்லும் மர்ம சாமியார்தான் ஆனந்த் என்று கூறப்படுகிறது. ஆனால், செபி நடத்திய விசாரணையில் ஆனந்த் மூன்றாவது நபர் என சித்ரா தெரிவித்துள்ளார். rigyajursama@outlook.com என்ற இமெயில் ஐடி மூலம்தான் சித்ரா அடிக்கடி மர்ம சாமியாருடன் தேசிய பங்குச்சந்தை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். உண்மையில் சாமியார்தான் இமெயில்களை அனுப்பினாரா அல்லது அவர் சார்பாக அவரது இமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது.

ஆனந்த் தேசிய பங்குச்சந்தையில் மிகவும் உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்டபோதிலும், அவர் தொடர்பான தகவல்கள் இணையதளதில் கிடைக்கவில்லை. ஆனந்த் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டி வரைபடத்தில் இருந்து காணாமல்போனது போன்று ஆனந்த் பற்றிய தகவல்கள் இணையத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. திட்டமிட்டு முன்கூட்டியே ஆனந்த் தனது தகவல்களை இணையத்தில் இருந்து அழித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism