Published:Updated:

ட்விட்டரில் வாக்கெடுப்பு; டெஸ்லாவின் 10% பங்குகள் விற்பனை; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

தற்போதைய நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் 170.5 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார் எலான் மஸ்க். அவற்றில் 10% பங்குகளை விற்பனை செய்வது சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.5 லட்சம் கோடி) மதிப்புடையதாக இருக்கும்.

உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், தனது ட்விட்டர் கணக்கில் 62.9 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். அவ்வப்போது ட்விட்டரில் அதிரடியான பதிவுகளைப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், பிட்காயினில் முதலீடு செய்வது குறித்து 2020-ல் போட்ட பதிவால் பிட்காயின் விலை தாறுமாறாக அதிகரித்தது.

இப்படி இவர் வெளியிடும் ட்விட்டுகள் ஒவ்வொன்றும், சமூக வலைதளங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ட்வீட் ஒன்றை, கடந்த நவம்பர் 7-ம் தேதி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டார். அந்தப் பதிவில், ``தன்னிடம் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் 10% விற்றுவிடலாமா" என்று கேள்வியைத் தனது ஃபாலோயர்களிடம் கேட்டு, அதற்கு `யெஸ்' அல்லது `நோ' எனப் பதில் அளிக்கக் கேட்டார்.

இதற்கு 57.9% ஃபாலோயர்கள் `யெஸ்' எனப் பதில் சொல்லியிருந்தார்கள். மீதமுள்ளவர்கள் `நோ' என பதில் அளித்திருந்தார்கள்.

`அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்கள் வைத்திருக்கும் பங்குகள் விற்கப்படும்போதுதான், அவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது. அதனால் அதற்கு முன்னதாகவே அத்தகைய பங்குகளைக் குறிவைத்து அதிகமான வரி விதிக்க வேண்டும்' என்று அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிய வரித் திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளனர்.

இதற்கிடையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இப்படியொரு ட்வீட்டினை பதிவு செய்துள்ளார். தற்போதைய நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் 170.5 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார் எலான் மஸ்க். அவற்றில் 10% பங்குகளை விற்பனை செய்வது சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.5 லட்சம் கோடி) மதிப்புடையதாக இருக்கும்.

டெஸ்டா பங்குகள்
டெஸ்டா பங்குகள்
இந்தியாவில் இந்த சவால்களை சமாளிக்குமா டெஸ்லா... எலான் மஸ்க் டவீட்டும், சில சிக்கல்களும்!

எலான் மஸ்க் இந்த ட்வீட்டை பதிவு செய்த சில மணி நேரத்தில் 60% பேர் இதற்கு பதில் அளித்தது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள டெஸ்லா பங்குகளில் 10% பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அறிவிப்பு வெளியானதும் டெஸ்லா பங்குகளின் விலை நவம்பர் 8-ம் தேதி வர்த்தகத்தில் 5% வரை அதிகரித்து வர்த்தகமானது. ஆனால், வர்த்தகம் முடியும்போது டெஸ்லா பங்கு ஒன்றின் விலை 4.92% விலை குறைந்து 1,162 டாலருக்கு வர்த்தகமானது.

Tesla CEO Elon Musk
Tesla CEO Elon Musk
AP Photo/Matt Rourke
பிட்காயின்களை டெஸ்லா ஏன் ஏற்காது? எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பின் காரணம் என்ன?

அமெரிக்க அரசு, பெரும் கோடீஸ்வரர்களுக்கு எனச் சிறப்பு வரி விதிப்புச் சட்டத்தை அமல்படுத்தினால், எலான் மஸ்க் உள்ளிட்ட 700 பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. அவர்கள், தங்களிடம் உள்ள பங்குகளை வைத்திருந்தாலும் அல்லது விற்பனை செய்தாலும் நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long term capital gain tax) செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவர்கள். இந்தத் திட்டத்துக்கு எலான் மஸ்க் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்தான் இந்த ட்விட்டர் சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு