Published:Updated:

பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலகும் சுப்பிரமணியன்; விலகலுக்கு இதுதான் காரணமா?

பொருளாதார ஆலோசகர் பதவியைப் பொறுத்தவரை ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் காலத்தில் இருந்த சூழல் தற்போது இல்லை. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக ஆதரிக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்பதால், துறை சார்ந்த பொருளாதார அறிஞர்கள் இந்தப் பதவிக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பதவி முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தன் பதவிக் காலம் முடிந்த பின் மீண்டும் கல்விப் பணிக்கே செல்லப்போவதாகக் கடந்த வெள்ளி அன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார் அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய பதவிக் காலம் வருகிற டிசம்பர் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.

2021-22 ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சுப்பிரமணியனின் இந்தத் திடீர் அறிவிப்பு வந்திருப்பது டெல்லி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

K.V. Subramanian at a Press Conference
K.V. Subramanian at a Press Conference
PIB India
Vikatan

இதனால் அடுத்த பொருளாதார ஆலோசகரைக் குறுகிய காலத்தில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. தவிர, புதிதாகத் தேர்வாகும் பொருளாதார ஆலோசகர் உடனடியாகப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.

அடுத்த பொருளாதார ஆலோசகரைத் தேர்வு செய்யும் அறிவிப்பை ஏற்கெனவே மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அடுத்து வேறு ஒருவர்தான் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்பதைத் தெரிந்துகொண்டே, சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து தீடீரென விலகினார் அரவிந்த் சுப்பிரமணியம். அதைத் தொடர்ந்து அதிவேகமாகச் செயல்பட்ட மத்திய அரசாங்கம், சுப்பிரமணியன் கிருஷ்ணமூர்த்தியைத் தேர்வு செய்தது.

அரவிந்த் சுப்பிரமணியம்
அரவிந்த் சுப்பிரமணியம்
``அசோகா பல்கலைக்கழகம் அந்த தகுதியை இழந்துவிட்டது!" - ஏன் ராஜினாமா செய்தார் அரவிந்த் சுப்பிரமணியன்?

இந்நிலையில், தற்போது அரசு மீண்டும் அதேபோன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறது. புதிதாகத் தேர்வாகும் பொருளாதார ஆலோசகர் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். கோவிட்-19-க்குப் பிறகு, பொருளாதாரம் கணிசமாகக் குறைந்து, தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தத் தேவையான அனைத்து யோசனைகளையும் புதிய பொருளாதார ஆலோசகர் சொல்லியாக வேண்டும்.

தவிர, பொருளாதார ஆலோசகர் பதவியைப் பொறுத்தவரை ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் காலத்தில் இருந்த சூழல் தற்போது இல்லை. அரசின் அனைத்து நடவடிக்கை களையும் வெளிப்படையாக ஆதரிக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்பதால், துறை சார்ந்த பொருளாதார அறிஞர்கள் இந்தப் பதவிக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. சுப்பிரமணியனின் இந்த முடிவுக்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.

எப்படியும் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் புதிய முதன்மைப் பொருளாதார ஆலோசகரைத் தேர்வு செய்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு