Published:Updated:

₹720 கோடி பண மோசடி; கார்வி நிறுவனத்தின் சேர்மன் பார்த்தசாரதி கைது; என்ன நடந்தது?

கார்வி
கார்வி

பார்த்தசாரதி ஐதராபாத்தில் உள்ள இண்டஸ்இந்த் வங்கியில் 127 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றிருந்தார். மேலும் கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உட்பட பல வங்கிகளில் 720 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பங்குச்சந்தை தரகு நிறுவனமான கார்வி-ன் சேர்மன் பார்த்தசாரதி ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பார்த்தசாரதி வங்கிகளில் 720 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்ததன் காரணமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக பார்த்தசாரதி ஐதராபாத்தில் உள்ள இண்டஸ்இந்த் வங்கியில் 127 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றிருந்தார். மேலும் கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உட்பட பல வங்கிகளில் 720 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo: Pixabay
கார்வியின் பங்கு வர்த்தக மோசடி... வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியது என்ன?

இந்தக் கடன் தொகையானது 2013 -ம் ஆண்டிலிருந்து பல தவணைகளில் பெறப்பட்டு இருந்தது. அவர் பெற்ற கடன் தொகைக்கு அடமானமாக பங்கு பத்திரங்களை வங்கி தரப்பில் ஒப்படைத்துள்ளார். ஆனால் அந்தப் பங்குகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பங்குகள் என்பதும் கார்வி நிறுவனத்திற்கு வாங்கவும் விற்கவும் கொடுக்கப்பட்ட பவர் பத்திரங்களைக் கொண்டு மோசடி செய்து வாடிக்கையாளரின் பங்குகளை அடமானம் வைத்து பார்த்தசாரதி கடன் பெற்றது வங்கி தரப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வங்கித் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி கார்வி நிறுவனத்தை பிளாக்லிஸ்ட் செய்து 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதனால் அந்த நிறுவனம் பி.எஸ்.சி மற்றும் என்எஸ்சி எக்சேஞ்சுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது மோசடி புகாரை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக அவரை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி கொள்ள அவருக்கு பெயில் வழங்குவதற்கு அவருடைய வழக்கறிஞர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு இல்லாமல் போகவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது அவர் ஹைதராபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கார்வி
கார்வி
புதிய ஹால்மார்க் விதிமுறைகள்: சென்னையில் நகைக் கடைகளை மூடி போராட்டம்; என்ன காரணம்?

பங்குச் சந்தையில் ஈடுபடும்போது பங்கு பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். புரோக்கர்களிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து முதலீடு செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பித்தலாட்டங்கள் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு