Published:Updated:

கிரிப்டோ முதலீடு: `வரி செலுத்துவதால் மட்டுமே அது சட்டபூர்வமாகிவிடாது!' - குழப்பங்களும் விளக்கமும்

Bitcoin (Representational Image) ( Photo by Executium on Unsplash )

இந்த வரி விதிப்பு அறிவிப்பானது கிரிப்டோகரன்சிகளை இந்தியாவுக்குள் மத்திய அரசாங்கம் அனுமதித்தது போன்ற தோற்றத்தைத் தந்தது. அப்படித்தான் கிரிப்டோ முதலீட்டாளர்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பட்ஜெட் முடிந்தபிறகு அளிக்கப்பட்ட விளக்கங்களால் பல கேள்விகள் எழுந்துள்ளன.

கிரிப்டோ முதலீடு: `வரி செலுத்துவதால் மட்டுமே அது சட்டபூர்வமாகிவிடாது!' - குழப்பங்களும் விளக்கமும்

இந்த வரி விதிப்பு அறிவிப்பானது கிரிப்டோகரன்சிகளை இந்தியாவுக்குள் மத்திய அரசாங்கம் அனுமதித்தது போன்ற தோற்றத்தைத் தந்தது. அப்படித்தான் கிரிப்டோ முதலீட்டாளர்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பட்ஜெட் முடிந்தபிறகு அளிக்கப்பட்ட விளக்கங்களால் பல கேள்விகள் எழுந்துள்ளன.

Published:Updated:
Bitcoin (Representational Image) ( Photo by Executium on Unsplash )
மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இருந்தாலும், கிரிப்டோ கரன்சி குறித்து வெளியிட்ட அறிவிப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடு குறித்த எதிர்காலம் என்னவென்று தெரியாத நிலையில், இந்த பட்ஜெட்டில் கிரிப்டோ கரன்சி தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வருமா, அப்படியே வந்தால் அது கிரிப்டோவை இந்தியாவில் முழுமையாக அனுமதிப்பதாக இருக்குமா, கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஈட்டும் வருமானத்துக்கு வரி விதிப்பு எப்படி இருக்கும் என கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். அந்தக் குழப்பத்துக்கு முழுமையான பதிலை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் சொல்லவில்லை என்றாலும், ஓரளவுக்கு அது குறித்து இந்த பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் ஈட்டக்கூடிய வருமானத்துக்கு 30% வருமான வரி எனத் தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

கிரிப்டோகரன்சி முதலீட்டை இந்தியாவில் தடை செய்யாமல், பல லட்சம் கோடிகளில் புரளும் இந்த சந்தையை மத்திய அரசு அனுமதித்து அதை முறைப்படுத்த வேண்டும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த வரி விதிப்பு அறிவிப்பானது கிரிப்டோகரன்சிகளை இந்தியாவுக்குள் மத்திய அரசாங்கம் அனுமதித்தது போன்ற தோற்றத்தைத் தந்தது. அப்படித்தான் கிரிப்டோ முதலீட்டாளர்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பட்ஜெட் முடிந்தபிறகு அளிக்கப்பட்ட விளக்கங்களால் பல கேள்விகள் எழுந்துள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில்தான், `பட்ஜெட்டில் 30% வரி விதிக்கப்பட்டதன் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை’ என ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் மொஹபத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் இதுகுறித்து பேசியதாவது, ``நேரடி வரிகள் வாரியத்தைப் பொறுத்தவரை, எந்த முதலீட்டுக்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்க முடியாது. ஆனால், ஒரு முதலீட்டின் மூலம் ஈட்டக்கூடிய வருமானத்துக்கு எங்களால் நிச்சயமாக வரியை விதிக்க முடியும். அதனால், வருமான வரித்துறையும், வருமான வரிச் சட்டமும், கிரிப்டோ முதலீட்டாளர்கள் செய்த பரிவர்த்தனைகள் வருமானத்தை ஈட்டுகிறா என்பதை மட்டுமே பார்க்கும். வருமானம் ஈட்டினால் அதற்கு 30% வரியை கிரிப்டோ முதலீட்டாளர்கள் கட்டித்தான் ஆகவேண்டும்.

Tax (Representational Image)
Tax (Representational Image)

வரி செலுத்துவதாலேயே அது சட்டப்படியான முதலீடு என்றாகிவிடாது. கிரிப்டோ கரன்சிக்கென தேசிய அளவில் ஒழுங்குமுறைக் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. தற்போது வருமான வரித்துறை கிரிப்டோ கரன்சி வர்க்கத்தையும் கண்காணிக்கிறது. கிரிப்டோ கரன்சி சந்தையின் ஆழத்தை அளவிட மற்றும் மதிப்பிடவே 30% வரி விதிக்கப்படுகிறது.

டிஜிட்டல் வர்த்தகத்தில் ஒரு நிறுவனம் ஏதேனும் லாபம் அல்லது உபரித் தொகையை வருமானத்தில் காட்டும்போது, ​​முதலீடு செய்ய பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதையும் அவர்கள் கூற வேண்டும், முதலீடு சரியாகவும் நியாயமாகவும் இருந்தால், உபரி வரி விதிக்கப்படும். அதுவே சட்டவிரோதமானதாக இருந்தால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று விளக்கியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு அரசு வரி விதித்திருப்பது பற்றி ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜூவிடம் சில கேள்விகளை நாம் எழுப்பியபோது, ``புதிதாக ஒரு வைரஸ் இந்தியாவில் பரவிய சமயம் அதாவது, 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில்தான் கிரிப்டோகரன்சி முதலீடும் இந்தியாவில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்பாக பல ஆண்டுகள் இந்தியாவில் இந்த முதலீடு இருந்தாலும், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் இறக்கத்தை சந்தித்தபோது, பலரும் இதை ஒரு மாற்று முதலீடாக நினைத்து ஏராளமானவர்கள் பிட்காயின் மாதிரியான கிரிப்டோகரன்சிகளில் பணம் போட ஆரம்பித்தார்கள்.

கோபால கிருஷ்ண ராஜு
கோபால கிருஷ்ண ராஜு

அதனால் 2020-ம் ஆண்டில் கொரோனாவைப் போல கிரிப்டோ கரன்சியும் மக்களிடையே மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது. கிரிப்டோகரன்சி முதலீட்டை ஒழுங்குபடுத்த அரசு பலவேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதற்கு இடையில், இந்த வரி விதிப்பையும் கையில் எடுத்திருக்கிறது. இதுநாள் வரை யார் இந்த கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறார்கள், எந்த எக்ஸ்சேஞ்களின் மூலம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை இந்தியாவில் நடக்கிறது என்பது எல்லாம் தெரியாமல் இருந்தது. ஆனால், இந்த வரி விதிப்பின் மூலம் கிரிப்டோ முதலீட்டாளர்கள் யார், யார், எந்தெந்த எக்ஸ்சேஞ்கள் மூலம் முதலீடு செய்கிறார்கள் என்கிற அனைத்து விவரங்களும் தெரியவரும்.

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல், டிஜிட்டல் சொத்துப் பரிமாற்றத்தின்போது அந்தத் தொகையில் 1% டி.டி.எஸ் பிடித்தம் செய்ய வேண்டும் என எக்ஸ்சேஞ்சுகளுக்கும் சொல்லப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களால் கிரிப்டோகரன்சி முதலீட்டைக் கணக்கில் காட்ட முடியாமல் தப்பிக்க முடியாதபடி செக் வைக்கப்பட்டிருக்கிறது. இது கிரிப்டோகரன்சி முதலீட்டை மத்திய அரசாங்கம் மறைமுகமாக ஒழுங்குபடுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.

வரி விதித்திருப்பதால் இந்த முதலீட்டை அரசு ஏற்றுக்கொண்டதாக ஆகாதா என முதலீட்டாளர்கள் கேட்கலாம். பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி முதலீட்டை மத்திய அரசு அனுமதிக்கிறது என பட்ஜெட் உரையில் எந்தவொரு வாசகத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை அதன் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதும் இதற்கு இந்தியாவில் அனுமதி இல்லை'' என்றார் தெளிவாக.

அர்ஜூன் விஜய்
அர்ஜூன் விஜய்

ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ் நிறுவனத்தின் இணை இயக்குநர் மற்றும் சி.ஓ.ஓ-வான அர்ஜூன் விஜய்யிடம் இது குறித்து பேசினோம். ``பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என்பதையோ, அனுமதி உண்டு என்பதையோ தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால், 30% வரி உண்டு என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். வரி விதித்திருப்பதால், இந்தியாவில் இந்த முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதாக முதலீட்டாளர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஆனால், இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு சொல்லியிருப்பதைப் பார்த்தால், கிரிப்டோகரன்சி முதலீட்டில் அவர்கள் நடுநிலையாக இருப்பதைப் போலத்தான் தெரிகிறது. அடுத்த பட்ஜெட்டிலோ, அதற்கு அடுத்த பட்ஜெட்டுக்குள்ளாகவோ கிரிப்டோகரன்சி முதலீடு குறித்து முழுமையான நெறிமுறைகளை மத்திய அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், இனி வரும் காலங்களில் பெட்ரோல் வாகனங்களைவிட, எலெக்ட்ரிக் வாகனங்கள் எப்படி ஆதிக்கம் செலுத்துமோ அப்படித்தான் இந்த கிரிப்டோகரன்சி முதலீடுகளும் ஆதிக்கம் செலுத்தும். அதிக வருமானம் தரும் இந்த முதலீட்டிலிருந்து எப்படி வருமானத்தை அதிகப்படுத்துவது என்பதைத்தான் அரசாங்கம் யோசிக்குமே தவிர்த்து, இந்த முதலீட்டை முற்றிலுமாகத் தடை செய்துவிடலாம் என அரசு யோசிக்காது.

பங்குச்சந்தை முதலீட்டின் கண்காணிப்பாளராக செபி அமைப்பு இருப்பது போல, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு ஆம்ஃபி இருப்பது போல, வங்கி செயல்பாட்டுக் கட்டுபாட்டாளராக ஆர்.பி.ஐ இருப்பது போல கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கும் ஒரு கட்டுப்பாட்டாளர் அமைப்பை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும். கிரிப்டோகரன்சி முதலீடு அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், முதலீட்டாளர்களின் நிதிக்குப் பாதுகாப்பை அந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி செய்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த முதலீடு ஒரு முழுமையான கோட்பாட்டுக்குள் வரும்.

பிட்காயின் (Representational Image)
பிட்காயின் (Representational Image)

தற்போது சொல்லியிருக்கும் வரி விஷயத்திலேயே நிறைய குழப்பங்கள் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கிடையே உருவாகியிருக்கிறது. ஏனெனில், கிரிப்டோகரன்சி முதலீடுகள் சென்ட்ரலைஸ்டு எக்ஸ்சேஞ்ச், பியர் டூ பியர், டி-சென்ட்ரலைஸ்டு எக்ஸ்சேஞ்ச் எனப் பலவேறு வகையில் நடக்கின்றன. அதே போல, அனைத்து கிரிப்டோகரன்சி முதலீடுகளுக்கும் 30% வரி என்பது மிகவும் அதிகமான வரி விதிப்பாகத் தெரிகிறது. முதலீடுகளுக்கு ஏற்றபடி வரி விதிப்பு இருந்தால் முதலீட்டாளர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். அரசாங்கம் இந்த முதலீட்டில் கவனம் செலுத்த தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. இனி எதிர்வரும் காலங்களில் இது சார்ந்த அடுத்தடுத்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கலாம்" என்றார் தெளிவாக.

கிரிப்டோகரன்சி முதலீடு குறித்த அரசின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism