Published:Updated:

தொடரும் பொருளாதார சிக்கல்; இன்னொரு இலங்கையாக மாறுகிறதா இந்தியா?!

மோடி இந்தியா

கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து இந்தியா உட்பட பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்பதை உலக வங்கி, ஐ.நா, ஐ.எம்.எஃப் தரவுகள் வாயிலாகத் தெரிகிறது

தொடரும் பொருளாதார சிக்கல்; இன்னொரு இலங்கையாக மாறுகிறதா இந்தியா?!

கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து இந்தியா உட்பட பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்பதை உலக வங்கி, ஐ.நா, ஐ.எம்.எஃப் தரவுகள் வாயிலாகத் தெரிகிறது

Published:Updated:
மோடி இந்தியா

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியாவின் பொருளாதாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என உலக வங்கி எச்சரிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். இலங்கையில் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து உலகையே திரும்பி பார்க்கச் செய்திருக்கிறது.

இலங்கையில் மக்களின் போராட்டம் ஓங்கியுள்ளதால். இலங்கை அரசின் கையில் ஏற்கெனவே பணம் இல்லாத காரணத்தால், மாற்று அரசு அமைந்தாலும் உடனடியாகத் தலைநிமிர வாய்ப்பு இல்லை என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏனெனில், இலங்கையிடம் வெறும் 50 மில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணியும், 50 பில்லியன் டாலர் அளவிலான கடன் சுமையும் உள்ளது. கடன் சுமையால் வீழ்ச்சி அடைந்துள்ள முதல் நாடு இலங்கையாக இருக்கும் நிலையில் பல நாடுகள் அடுத்தடுத்து வீழும் என ஐ.நா, உலக வங்கி தனது கணிப்புகள் மூலம் எச்சரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியில் தெற்காசிய நாடுகள், இலங்கை, நேப்பாளம், பாகிஸ்தான்... அடுத்தது யார்... என்பதுதான் இன்றைய நிலை?! அதில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்றும் சொல்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகெங்கிலும், கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மும்முனை நெருக்கடியுடன் போராடி வருகின்றன. கொரோனா தொற்று மற்றும் அதன் பொருளாதார வர்த்தகப் பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வரும் கடன், ரஷ்யாவின் போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

David Malpass
David Malpass

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், ``தற்போது வளரும் நாடுகள் பற்றித்தான் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. எரிசக்தி, உரம் மற்றும் உணவுக்கான திடீர் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகியவை வளரும் நாடுகளில் இருக்கும் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகத் தாக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக ஐ.நா-வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவான UNCTAD, சமீபத்திய அறிக்கையில் 107 நாடுகள் குறைந்தபட்சம் மூன்று அதிர்ச்சிகளில் ஒன்றை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. மூன்று பாதிப்புகளையும் சுமார் 69 நாடுகள் எதிர்கொண்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் ஆப்பிரிக்காவில் 25, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 25, மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் 19 உள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இதன்படி தற்போது ஐ.எம்.எஃப் இலங்கையைப் போலவே துருக்கி, எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா, அர்ஜென்டினா, எல் சால்வடார், பெரு ஆகிய நாடுகள் உடன் நிதியுதவிக்காகவும், புதிய கடனுக்காகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனால் கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன என்பதை உலக வங்கி, ஐ.நா, ஐ.எம்.எஃப் தரவுகள் வாயிலாகத் தெரிகிறது.

இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் பொருளாதார நிலையில் குழப்பமான நிலையை உருவாக்கி இருக்கிறது.

இந்தக் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism