Published:Updated:

எல்.ஐ.சி IPO; இந்த மாதக் கடைசியில் வெளிவருமா... பின்னணி என்ன?

எல்.ஐ.சி

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடும்போது சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்காக இடைத்தரகர்களை நியமித்து கண்காணித்தது.

எல்.ஐ.சி IPO; இந்த மாதக் கடைசியில் வெளிவருமா... பின்னணி என்ன?

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடும்போது சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்காக இடைத்தரகர்களை நியமித்து கண்காணித்தது.

Published:Updated:
எல்.ஐ.சி

`காத்திருந்து... காத்திருந்து காலங்கள் போனதடி' என்ற பாடல் வரிகள் எல்.ஐ.சி IPO-க்கும் பொருந்தும். ஏனெனில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீட்டின் மீதான எதிர்பார்ப்பு உருவாகி இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடந்த 2020-21 நிதி ஆண்டின் பட்ஜெட் உரையில் எல்.ஐ.சி பங்குகள் விற்பனைக்கு என்ற அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையிலும் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகின. 2022-ம் ஆண்டின் மார்ச் 10-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிடப்படும் எனச் சொல்லப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்திந்தன. இந்த நிலையில், எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடுவது சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்து, மத்திய அரசாங்கம் அதைச் சிறிது காலத்துக்கு ஒத்திவைத்தது.

தற்போது இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றப் போக்கில் காணப்படுவதால், நடப்பு மாதத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி இருக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கொண்ட அமைச்சரவைக்குழு எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான தேதிகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் அடிப்படையில், நடப்பு மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அல்லது இறுதி வாரத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகபட்சமாக மே மாதம் 12-ம் தேதிக்குள் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

IPO
IPO

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (The Department of Investment and Public Asset Management) , எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடும்போது சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்காக இடைத்தரகர்களை நியமித்து கண்காணித்தது. இதன் முடிவில், இப்போது எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வை வெளியிடலாம் என முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. அதனால் `நடப்பு மாதத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன' என்று சொல்லப்படுகிறது

இந்த ஐ.பி.ஓ-வில் எல்.ஐ.சி-யின் பங்குகளை வாங்க பல முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எல்.ஐ.சி-யில் பாலிசி வைத்திருப்பவர்களுக்கு இந்த ஐ.பி.ஒ-வில் பங்குகளை வாங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இந்த நிறுவனப் பங்கை வாங்க பலரும் தயாராகி வருகிறார்கள். நீங்கள் எல்.ஐ.சி-யின் பாலிசி வைத்திருப்பவர் எனில், நீங்கள் இந்த ஐ.பி.ஓ-வில். எல்.ஐ.சி-யின் பங்குகளை வாங்கத் தயாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism