Published:Updated:

நிறுத்தி வைக்கப்பட்ட ரிலையன்ஸ் - சவுதி அரம்கோ ஒப்பந்தம்; ரிலையன்ஸ்க்கு பாதிப்பு ஏற்படுமா?

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாக ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்ற வாரத்தில் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற ரிலையன்சின் அறிவிப்பு இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் பிரிவில் 20% முதலீடு செய்வதாக இருந்த சவுதி அரம்கோ நிறுவனத்தின் திட்டம், இரு நிறுவனங்களின் ஒப்புதலுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை கடந்த ஒரு வார காலத்தில் 5% வரை சரிந்துள்ளது.

பெட்ரோ கெமிக்கல் துறையில் ரிலையன்ஸ் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. உலக அளவில் பெட்ரோ கெமிக்கல் துறையில் முன்னணி நிறுவனமாக சவுதி அரேபியா நாட்டை தலைமையிடமாகக் கொண்ட சவுதி அரம்கோ திகழ்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் சென்ற ஆண்டு கையெழுத்திட்டபோது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்பட்டது.

Oil (Representational Image)
Oil (Representational Image)

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் அங்கமான பெட்ரோ கெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்களை தனி நிறுவனமாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியது. தற்போது பெட்ரோகெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் 49.14% பங்குகளை கொண்டிருக்கிறது. பெட்ரோ கெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்கள் தனியாக பிரிக்கப்பட்டாலும் அந்தத் துணை நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கையிருப்பில் மட்டுமே இருக்கும் என்பதால் பங்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் நிறுவனம் அறிவித்திருந்தது.

பொதுவாக இதுபோன்று நிறுவனங்களை இரண்டாகப் பிரிக்கும் பொழுது அதிக முதலீடு அந்த நிறுவனத்தை நோக்கி வரும். அது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும். இது முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் உதவும் என்பதால் இந்த அறிவிப்பிற்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்தன.

ஆனால், இந்தக் கூட்டு ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 24 மாதங்களில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாக ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்ற வாரத்தில் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற ரிலையன்சின் அறிவிப்பு இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Aramco
Aramco
₹1.5 லட்சம் கோடி அந்நிய முதலீடு... எப்படி சாமர்த்தியமாக வரியின்றி தப்பித்தது ரிலையன்ஸ்?

சவுதி அரம்கோ நிறுவனத்தின் முதலீடு நிறுத்தப்பட்டாலும், தற்போதும் இந்தியாவில் அதன் முக்கிய வியாபாரக் கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ்தான் திகழ்கிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலை காரணமாக பெட்ரோகெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து தனியாக பிரிக்கப்படும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சவுதி அரம்கோ நிறுவனம் பாதிக்கப்பட்டது காரணமாக 20% பங்குகளை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் 2030-ம் ஆண்டிற்குள் கரிம பயன்பாடு (கார்பன்) முற்றிலும் நீக்கப்பட்டு ஹைட்ரஜன் முறையில் எரிசக்தி தயாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதுவும் சவுதி அரம்கோ நிறுவனத்தின் இந்த முடிவிற்கு காரணமாக உள்ளது.

இந்த உடன்படிக்கை ரத்து ஆனது காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதிக பாதிப்பு ஏற்படாது என்று பெரும்பாலான பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு அறிவிப்பிற்கு பிறகு 1,500 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு விலை சரிவு காரணமாக ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். பங்குச் சந்தையில் பொதுவாக ஏற்ற இறக்கம் என்பது ஏற்படக்கூடியதுதான் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பல முன்னணி பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

Sebi
Sebi
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் குஷியில் அமேசான்; தயக்கத்தில் ரிலையன்ஸ்; பாவம் ஃப்யூச்சர் குழுமம்..!

பெட்ரோகெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்களை தனியாக பிரிக்கும் விண்ணப்பக் கடிதத்தை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் இருந்து ரிலையன்ஸ் தற்போது திரும்பப் பெற்றுள்ளது. இதன் காரணமாக பெட்ரோகெமிக்கல் துறை சார்ந்த நிறுவனம் தற்போது பிரிக்கப்படப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

சவுதி அரம்கோ நிறுவனமும் இந்தியாவில் புதிய முதலீட்டாளர்களைத் தேடி வருவதாக தற்போது தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்த நிறுத்திவைப்பு சிறிய அளவில் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், நீண்ட கால நோக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு