Published:Updated:

`அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு; மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா?' - நிபுணர் கூறுவது என்ன?

ஊரடங்கு
News
ஊரடங்கு

``டெல்டாவைவிட வேகமாகப் பரவக்கூடியது இந்த வேரியன்ட். டெல்டா வைரஸ் காட்டுத்தீ போல பரவியது. காட்டுத்தீ இருக்கும்போது பலத்த காற்று அடித்தால் எவ்வளவு தீவிரமாக இருக்குமோ அப்படி ஒரு தாக்கத்தை ஒமிக்ரான் ஏற்படுத்தி வருகிறது."

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று புதிதாக 33 நபர்களுக்கு உறுதி செய்யபட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரான் பாதிப்பால் ஊரடங்கு குறித்த பேச்சு மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஏற்கெனவே போடப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி பலரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளியிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கா என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனவே, பார்மா துறையில் இதுகுறித்து என்ன நினைக்கிறார்கள் என்று பார்மா ஆராய்ச்சி நிறுவனமான ஜிபோ ஆர்என்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜ் பிரகாஷிடம் பேசினோம்.

``டெல்டாவைவிட வேகமாகப் பரவக்கூடியது இந்த வேரியன்ட். டெல்டா வைரஸ் காட்டுத்தீ போல பரவியது. காட்டுத்தீ இருக்கும்போது பலத்த காற்று அடித்தால் எவ்வளவு தீவிரமாக இருக்குமோ அப்படி ஒரு தாக்கத்தை ஒமிக்ரான் ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், டெல்டாவுடன் ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், மருத்துவ உலகம் இதை நம்பிக்கையுடன் கூறாமல் எச்சரிக்கையுடனே தெரிவித்து வருகிறது.

காரணம், இதுவரை நாம் சாதகம் என எவற்றையெல்லாம் நினைத்தோமோ, அவை பாதகமாகவும் முடிந்திருக்கிறது. உதாரணமாக, ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மீண்டும் வருவதில்லை எனக் கருதினோம். ஆனால், வந்தது.

தடுப்பூசி செலுத்தினால் வராது எனக் கருதினோம். ஆனால், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்த அலைகள் வராது என நம்பினோம். ஆனால், வந்தது.

ராஜ் பிரகாஷ்
ராஜ் பிரகாஷ்
Raj Prakash

இப்படி நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருப்பதால் இதில் உள்ள சாதகம் என எதையும் நம்பிக்கையுடன் சொல்வதற்கு மருத்துவ உலகம் தயாராக இல்லை.

டெல்டா வேரியன்ட் சுவாசப் பாதையின் கீழே அதாவது, நுரையீரலைப் பாதித்தது. ஆனால், ஒமிக்ரான் சுவாசப்பாதையின் மேலே பாதிப்பு ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் பாதிப்பு உடனடியாகத் தெரிந்துவிடும்.

ஆனால், நுரையீரல் பாதிப்பு ஐந்து நாள்களுக்குப் பிறகுதான் தெரியவரும் என்பதால், சிக்கல் இருந்தது. தற்போது பெரும்பாலும் சுவாசப்பாதையின் மேலே பாதிப்பு ஏற்படுவதால், உடனடியாகக் கண்டறிந்து தீர்க்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு மருத்துவ அனுமதி தேவைப்படவில்லை என்பதுதான் ஆரம்பகட்டத் தகவலாக இருக்கிறது. இருந்தாலும் இதைச் சாதகமாகக் கருத முடியாது. குறைந்த நபர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பது சரிதான்.

ஆனால், இந்த வைரஸ் வேகமாகப் பரவுவதால், ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும்.

சர்வதேச அளவில் பூஸ்டர் டோஸுக்கு பல நாடுகள் அனுமதி கொடுத்துவிட்டன. அதனால் நாமும் பூஸ்டர் டோஸுக்கான அனுமதி வழங்குவது முக்கியம்.

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

பூஸ்டர் டோஸுக்கு அனுமதி வழங்கும்பட்சத்தில் இதுவரை ஒரு தவணைகூட தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

வேகமாகப் பரவும் வாய்ப்பு இருக்கும் அதே சமயத்தில், வேகமாக மறையவும் வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை, பரவல் உச்சமாக இருந்தால், குறிப்பிட்ட பகுதியில் மிகச் சில நாள்கள் மட்டுமே கடுமையான லாக்டௌன் இருந்தால் போதுமானது. மற்ற சமயங்களைப் போல, நீண்ட கால லாக்டௌன் ஒமிக்ரானுக்கு தேவைப்படாது என்றே கருதுகிறேன்'' என ராஜ் பிரகாஷ் கூறினார்.