நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பாக நடக்க வேண்டும் எனில், இரண்டு விதமான கடன்கள் முக்கியம். நீண்ட கால மற்றும் குறுகியகால கடன்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங் களிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்குகின்றன. பொதுவாக, நிறுவனங்கள் அவற்றின் சொந்தப் பணத்தைத் தொழிலில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும். இதுபோக தேவைப்படும் தொகையைத்தான் அவை கடனாக வாங்குகின்றன. நீண்டகாலக் கடன் என்கிறபோது, அவை 5, 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதாக இருக்கும். நிலம், கட்டடம், எந்திரங்களை வாங்க நிறுவனங்கள் நீண்டகாலக் கடனைப் பெறுகின்றன.

பொருள்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை வாங்க, நடைமுறைச் செலவுகளை மேற் கொள்ள, கடன் வசூலாகிற வரை சமாளிக்கத் தேவைப்படும் தொகை போன்றவற்றுக்கு வாங்கப்படும் கடன், குறுகியகாலக் கடன் எனப்படும்.

இந்தக் குறுகியகாலக் கடன், நடைமுறை மூலதனக் கடன் (Working Capital Loan) ஆகும். இந்த நடைமுறை மூலதனக் கடனை நிறுவனங்கள் எப்படிப் பெறுவது என்பதை கார்ப்பரேட் கிளினிக் (Corporateclinic.com) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.ராமகிருஷ்ணன் விரிவாக விளக்கிச் சொன்னார்.

“நடைமுறை மூலதனக் கடனை சிறு நிறுவனங்கள், கேஷ் கிரெடிட், ஓவர் டிராப்ட் ஆகியவற்றின் மூலமும் பெரிய நிறுவனங்கள் குறுகியகாலக் கடன் பத்திரங்கள், கமர்ஷியல் பேப்பர் வெளியீடு போன்றவற்றின் மூலமும் பெற முடியும். அதாவது, மூலப்பொருள்கள் வாங்க, நடைமுறை செலவுகளை மேற்கொள்ள கடன் வழங்குவார்கள்.

கேஷ் கிரெடிட்

இந்தக் கடனை வாங்க வங்கி களுக்கு நிறுவனங்கள் செக்யூரிட்டி என்கிற அடமானம் கொடுக்க வேண்டும். பிரைமரி செக்யூரிட்டியாக எதற்காகக் கடன் வாங்குகிறீர்களோ, அது சார்ந்த ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, உற்பத்திப் பொருள்களின் இருப்பு, நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் பொருள்கள், விற்ற பொருள்கள் மூலம் வேறு நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய பணம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கேஷ் கிரெடிட் நடைமுறை மூலதனக் கடன் கொடுப்பார்கள். விற்பனைக்குத் தயாராக இருக்கும் நிறைவு செய்யப்பட்ட பொருள்கள், விற்பனைக்கான பில்களை அடமானமாகக் கொடுத்தும் இந்தக் கடனைப் பெற முடியும்.

நம்மிடம் இருக்கும் சில பொருள்களை அடமானமாக (Collateral Pledge) கொடுத்தும் கேஷ் கிரெடிட் நடைமுறை மூலதனக் கடனை வாங்க முடியும். இந்தக் கடனைக் கொடுப்பது வங்கிகளுக்கு கேஷ் கிரெடிட்டைவிட அதிக பாதுகாப்பானதாக இருக்கும். உதாரணத்துக்கு, ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஒன்றை நிறுவனத்துக்கு வாங்க வேண்டும். இதில் 25% மார்ஜின் தொகையான 25,000 ரூபாயை நிறுவனம் கையிலிருந்து போட வேண்டும். மீதி ரூ.75,000 கடனாகக் கிடைக்கும். நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் வந்துவிடும். இதற்கான பில் வங்கியில் அடமானமாக இருக்கும். ஆனால், இந்தக் கடனை இரு தவணைகளில் கட்டிவிட வேண்டும். வாங்கும் பொருளுக்குத் தேய்மானம் அதிகமாக இருந்தால் கூடுதல் செக்யூரிட்டி கேட்பார்கள். கூடுதல் செக்யூரிட்டி என்பது நிறுவனத்துக்கு உரிமையான சொத்து பத்திரம் போன்றவை ஆகும்.

கேஷ் கிரெடிட் முறையில் கடன் வழங்கப்படுவது ஒரு குறுகியகாலக் கடன் ஆகும். நிறுவனத்தின் சி.எம்.ஏ அறிக்கை (CMA -Credit Monitoring Arrangement) ஆய்வு, டேர்ன்ஓவர் மதிப்பு, கையிருப்புப் பொருள்கள் ஆகிய வற்றின் அடிப்படையில் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, இந்தக் கடன் வழங்கப்படும். இதற்கான வட்டி சுமார் 10 சதவிகிதமாக இருக்கும்.

உதாரணத்துக்கு, ஒரு நிறுவனத்தின் விற்று முதல் ரூ.10 கோடி என்றால், கடன் வரம்பு ரூ.2 கோடி என நிர்ணயிப்பார்கள். இந்தக் கடனை வாங்க நிறுவனம் ரூ.2.5 கோடிக்கு செக்யூரிட்டி கொடுக்க வேண்டும். அப்போது தான் ரூ.2 கோடி கடனாகக் கிடைக்கும். இந்தக் கடனை ஓராண்டுக்குள் அடைக்க வேண்டும். முந்தைய மாதக் கடைசி தினத்தில் என்ன இருப்பு இருந்ததோ, அதன் அறிக்கையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் வங்கிக்கு சமர்பிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, ஜனவரி 31-ம் தேதி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் கையிருப்பு எவ்வளவு இருந்தது என்பதை பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வங்கிக்கு அறிக்கையாகக் கொடுக்க வேண்டும். ரூ.2 கோடி வரம்பு எனக் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ரூ.3 கோடிக்கு செக்யூரிட்டி கொடுத்தாலும் கூடுதல் கடன் தரமாட்டார்கள். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.2 கோடி தான் கடனாக இருக்கும்.

ஓவர் டிராப்ட்

இந்தக் கடன் பெரும்பாலும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு வழங்கப்படும். இதற்கு அடமானமாக எதையும் தரத் தேவையில்லை. சிறிய நிறுவனங்கள் இந்தக் கடனை, வாங்க வேண்டும் எனில், அடமானம் கொடுக்க வேண்டும். மேலும், கையிருப்பு அறிக்கை அவசியம் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல, ரூ. 2 கோடி கடன் நிர்ணயிக்கப் படுகிறது எனில், ரூ.2 கோடி நிறுவனத்தின் வங்கி நடப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகையைத் தேவைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் தொகைக்குத்தான் வட்டி போடப்படும். ஆண்டுக்கு 12% வட்டி என்கிற முறையில் தினசரி வட்டி கணக்கிடப்படும்.

எக்ஸ்போர்ட் கிரெடிட்

ஏற்றுமதியில் ஈடுபட்டுவரும் நிறுவனம் ஏற்றுமதி ஆர்டர் மதிப்பின் அடிப்படையில் நடைமுறை மூலதனக் கடன் வாங்க முடியும். இந்தக் கடனை வெளிநாட்டு கரன்சியான டாலர், யூரோவில் வாங்கினால் ஆண்டு வட்டி சுமார் 2 சதவிகிதமாக இருக்கும். இதுவே இந்திய ரூபாயில் வாங்கினால் 7.5% வட்டி இருக்கும்.

மூலப்பொருள்கள் வாங்கிய தற்கான ரசீதுகள், ஷிப்பிங் பில்கள், இன்வாய்ஸ்கள் ஆகிய வற்றை வங்கியிடம் அடமானம் வைப்பது மூலம் இந்தக் கடனை வாங்க முடியும். போஸ்ட் ஷிப்மென்ட் கிரெடிட் என்ற பெயரில் இந்தக் கடன் வழங்கப் படும். இறக்குமதியாளர் களிடமிருந்து வர வேண்டிய தொகைக்குக் கடன் கிடைக்கும்.

லெட்டர் ஆஃப் கிரெடிட்

ஒரு நிறுவனம் ஏற்றுமதி - இறக்குமதி செய்கிறது. இரு நாட்டில் உள்ள ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் ஒருவரை ஒருவர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். ஆனால், இருவருக்கும் இடையே வியாபார உறவு இருக்கும். அதாவது, இங்குள்ள ஏற்றுமதியாளரின் வங்கியும் வெளிநாட்டில் உள்ள இறக்குமதி யாளரின் வங்கியும் இணைந்து செயல் படும். அதாவது, ஏற்றுமதி செய்யப் பட்ட பொருளுக்கு உரிய தொகையை பெற்றுத் தரும் பொறுப்பை வெளிநாட்டு வங்கி ஏற்றுக்கொள்ளும். இதில் வர வேண்டிய தொகையின் அடிப்படையில் நடைமுறை மூலதனக் கடன் வாங்க முடியும்.

ஆக, ஒரு தொழில் நிறுவனம் இத்தனை வழிகளில் தங்கள் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பணத்தை வங்கிகளில் இருந்து வாங்க முடியும். இந்த வழிகளில் ஏதாவது ஒன்றின்மூலம் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டலாமே!

கமர்ஷியல் பேப்பர் மூலம் கடன்!

வங்கியில் வாங்கும் நடைமுறை மூலதனக் கடனுக்கு 10 - 12% வட்டி கட்ட வேண்டியிருக்கும் நிலையில் கமர்ஷியல் பேப்பர் வெளியிட்டு 7%-ல் கடன் வாங்க முடியும். இந்தக் கடன் தொகையை வங்கி கேஷ் கிரெடிட்டாகக் கொடுத்துவிடும். இங்கும் கடனுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்; அந்தத் தொகைக்கு மேல் கடன் வாங்க முடியாது. இதேபோல் குறுகியகால கடன் பத்திரங்களை வெளியிட்டும் நிறுவனங்கள் நடைமுறை மூலதனக் கடனைத் திரட்டிக்கொள்ள முடியும்.