Published:Updated:

`இந்திய பொருளாதாரத்திற்கு இன்னும் சிக்கல்தான்!' - உலக வங்கியின் எச்சரிக்கை ஏன்?

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, உலகின் 90% நாடுகள், பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் மெள்ள மெள்ள குறைந்து, இந்தியப் பொருளாதாரம் மெள்ள மெள்ள தலைதூக்கி வருகிறது. தொழில் நிறுவனங்கள் முன்பைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. மக்களின் நுகர்வு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், உலக வங்கி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6 சதவிகிதமாகக் குறைத்து மதிப்பீடு செய்து, இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என எச்சரித்திருப்பது பல்வேறு துறை சார்ந்தவர்களின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொழில் துறை
தொழில் துறை
`இந்தியப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாகவும் சீராகவும் உள்ளன!' - RBI சர்வே கூறுவது என்ன?

நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கணிப்பை உலக வங்கி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. அப்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) நடப்பு நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால், அந்த வளர்ச்சி 6 சதவிகிதமாகத்தான் இருக்கும் என தற்போது தெரிவித்துள்ளது. மேலும், வங்கதேசம், நேபாளத்தைவிடவும் இந்தியா பின்தங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி, இந்தியா வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தெற்காசியாவுக்கான தலைமைப் பொருளாதார வல்லுநர் ஹன்ஸ் டிம்மர், ``சமீபத்திய உலகப் பொருளாதார மந்தநிலையால் மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார வளர்ச்சியை 6 சதவிகிதமாக குறைத்து உலக வங்கி கணித்திருக்கிறது.

தற்போதைய நிலையில், சேவைத் துறைகள் வலுவாக உள்ளன. கட்டுமானத் துறைகள் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பு போன்ற காரணத்தால் வேகமாக வளரும் பொருளாதார நாடாகவே இந்தியா இப்போதும் திகழ்ந்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Hans Timmer
Hans Timmer
Photo:/ Worldbank.org

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, உலகின் 90% நாடுகள், பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரிக் குறைப்பு மற்றும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், தொழில் துறைகள் மந்தநிலையில் இருந்து மீளும் வகையிலும், தொழில் நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலகும் சுப்பிரமணியன்; விலகலுக்கு இதுதான் காரணமா?

இது தொடர்பான ரிசர்வ் வங்கி அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கிகளும் கடன் வட்டியைக் குறைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு