Published:Updated:

`நுகர்வோரின் நம்பிக்கை.. உற்பத்தித்துறையில் பாதிப்பு!'- சரிவை நோக்கி செல்லும் உலகப் பொருளாதாரம்?

Economy
Economy ( business standard )

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா (காவிட்-19) வைரஸ் காரணமாக, உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துவிட்டது.

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா (காவிட்-19) வைரஸ் காரணமாக, உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்து விட்டது.

இதுவரை சுமார் 80,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சர்வதேச நோய்த் தொற்றானது, உலகத்தின் மொத்த ஜிடிபி -யையும் ஒரு ட்ரில்லியன் டாலர் வரை பாதிக்கக்கூடும் என ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் காரணமாக, பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பொருள்களின் உற்பத்தியில் மந்த நிலை நிலவிவருகிறது. மேலும், வைரஸின் அச்சுறுத்தல் காரணமாகப் பணத்தை முதலீடு செய்வதிலும் மக்களிடையே தயக்கம் நிலவுகிறது. இந்தத் தயக்கத்திற்கு முக்கியக் காரணம், அமெரிக்க பங்கின் அளவுகள் 3 சதவிகிதம் சரிந்ததே ஆகும்.

`கொரோனா' வைரஸ் அச்சம்
`கொரோனா' வைரஸ் அச்சம்
`மொத்தமாக பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கி நகர்கிறதா இந்தியா?!’- Razorpay அறிக்கை சொல்வது என்ன?

ஆனால், தற்போது வரை உலக நாடுகளின் மத்திய வங்கிகளும், அரசாங்கங்களும் கொரோனா வைரஸால் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பில்லை என்றே கூறிவருகின்றனர். மேலும், இதுபற்றி ஐ.எம்.எஃப் (imf) அமைப்பு தெரிவிக்கையில், 'கொரோனா வைரஸ் காரணமாக, 2020ல் எங்களின் நிர்ணயிக்கப்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியான 3.3 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதம் மட்டுமே குறையும்' என்றுள்ளது. ஆனால், அதே அமைப்பைச் சேர்ந்த முதன்மை பொருளாதார நிபுணர் கீதா கோபினாத், "உலகமெங்கும் பரவக்கூடிய வைரஸால் வளர்ச்சி சரிந்தே காணப்படுகிறது. இதனால் மிகவும் ஆபத்தான நிலைகூட ஏற்படலாம்" என்றார். இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் மூடிய நிலையிலேயே உள்ளன. இதனால் உற்பத்தித் துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இந்த நோய் தெற்கு கொரியா, இரான், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, இத்தாலியில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Economy | பொருளாதாரம்
Economy | பொருளாதாரம்

இது, பிற ஐரோப்பிய நாடுகளையும் பாதிக்கக்கூடும். கொரியாவிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நுகர்வோரின் நம்பிக்கை குறைந்துள்ளது கவலைக்குரியது. கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரமே மந்த நிலையில்தான் உள்ளது என்பதே பலரின் கணிப்பு. பல துறைகளில் ஏற்றுமதிக்கான பொருள்கள் தேங்கிய வண்ணம் உள்ளன. மக்கள், அந்நியப் பொருள்களை வாங்குவதற்கு சற்றே தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் எந்த அளவிற்கு நீடிக்கும் என்பதே மக்களிடத்தில் இப்போது உள்ள மிகப்பெரிய கேள்வி. வைரஸைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே உலகப் பொருளாதாரத்தை நம்மால் சரிவிலிருந்து மீட்க முடியும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு