Published:Updated:

இந்தியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த தங்கத்தின் தேவை; இதுதான் காரணம்!

தங்கம்
News
தங்கம்

2022-ம் ஆண்டில் கொரோனா மூன்றாம் அலை வராதபட்சத்தில் தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதம் வரை 730 டன் அளவுக்கான தங்கம் இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. இதில் நகைகளுக்கான தேவை சுமார் 260 டன்.

தங்கத்தின் தேவையானது இந்த ஆண்டில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் தேவை இப்போது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 139.14 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்தில் பண்டைய காலம் தொட்டே தங்கம் இன்றியமையததாக இருந்து வருகிறது. கல்யாணம், காதுகுத்து என எந்த ஒரு விழாக்களிலும் பண்டிகைகளிலும் தங்கம் அங்கம் வகிக்காமல் இருக்காது.

கொரோனா காலகட்டத்தில் உலக அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டதன் காரணமாக, மக்கள் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். இதனால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் உயர்ந்தது.

தங்கம்
தங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவந்த நம் மக்கள், தங்கள் தேவைகளுக்காக இப்போது தங்கம் வாங்கி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் பண்டிகைக் காலம் மற்றும் திருமணக் காலம் என்பதால், மக்கள் தொடர்ந்து நிறைய தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், உலக தங்க கவுன்சில் அமைப்பானது, நம் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் தேவை இந்த மூன்றாம் காலாண்டில் அதிகரித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

நம் நாட்டில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தங்கத்தின் தேவையானது 139.14 டன் ஆகும். இது சென்ற ஆண்டு மூன்றாம் காலண்டின் தங்க தேவையிலிருந்து 47% அதிகம் ஆகும். அதாவது, சென்ற காலாண்டில் வெறும் 81.18 டன் அளவுக்கு மட்டுமே தங்கத்தின் தேவை நம் நாட்டில் இருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 140.04 டன் அளவுக்கு தங்கத்தின் தேவை இருந்தது. ஏறக்குறைய அந்த அளவுக்கான தங்கத்தின் தேவை இப்போது இருக்கிறது.

Gold
Gold
Photo by vaibhav nagare on Unsplash

2022-ம் ஆண்டு கொரோனா மூன்றாம் அலை வராதபட்சத்தில் தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதம் வரை 730 டன் அளவுக்கான தங்கம் இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. இதில் நகைகளுக்கான தேவை சுமார் 260 டன் ஆகும். சுமார் 160 டன் முதலீட்டு நோக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தங்கம் விலை ஓரளவுக்கு அதிகமாக இருந்தாலும் நம் மக்கள் தொடர்ந்து வாங்கி வருவது ஆச்சரியமான விஷயம்தான்!