Published:Updated:

`இந்தியாவின் 1% பேர்தான், நாட்டின் 22% வருமானத்தையும் வைத்துள்ளனர்!' - அதிகரிக்கிறதா ஏற்றத்தாழ்வு?

பணம்
News
பணம்

இதற்கு முக்கியமாக காரணம் கொரோனா என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில் பரவலாக அனைத்துத் துறைகளிலுமே பொருளாதார நடவடிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளானது.

பிரான்ஸை சேர்ந்த உலக சமத்துவமின்மை ஆய்வகம் (World Inequality Lab) உலக நாடுகளின் சமத்துவமின்மைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த அறிக்கையில் இந்தியாவின் 1% பேர்தான், நாட்டின் 22% வருமானத்தையும் வைத்துள்ளதாகவும், நாட்டின் 57% வருமானம் 10% செல்வந்தர்களிடம் உள்ளதாகவும் கூறியுள்ளது. ஆனால் 50% மக்களிடம் வெறும் 13% வருமானம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சதவிகித செல்வந்தர்களின் வருமானம் சராசரியாக ரூ.3.25 கோடி. 10% செல்வந்தர்களின் வருமானம் சராசரியாக ரூ.63.5 லட்சம்.

Money (Representational Image)
Money (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், நாட்டில் 50% மக்களின் சராசரி வருமானம் ரூ.66,280. இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் சராசரி வருமானம் ரூ.7,23,930 ஆகும். மேலும் இந்திய இளைஞர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,04,200 ஆக உள்ளது.

இதனால் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு வெகுவாக அதிகரித்து, ஏழைகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறது. மேலும், மொத்த தேசிய வருமானத்தில் பெண்களின் பங்கு பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகக் குறைவாக அதாவது, 18.3 சதவிகிதமாக உள்ளது.

இதற்கு முக்கியமாக காரணம் கொரோனா என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில் பரவலாக அனைத்துத் துறைகளிலுமே பொருளாதார நடவடிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளானது, வேலை இழப்பு நெருக்கடிக்குப் பெரும்பாலானோர் உள்ளானார்கள். தொழில்கள் நடக்காததால், வருமானமும் குறைந்தது. ஊழியர்களுக்கான ஊதியமும் குறைக்கப்பட்டது.

Industry (Representational Image)
Industry (Representational Image)
AP Photo/Rafiq Maqbool

தற்போது பொருளாதாரம் ஓரளவுக்கு மீண்டுவந்திருந்தாலும், பாதிப்புகளிலிருந்து மீளவே முடியாத சூழலிலும் கணிசமான மக்கள் உள்ளனர். இதனால் நடுத்தர வர்க்கத்தில் இருந்த மக்களில் கணிசமான சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டனர். இது சமூகத்தில் வரும் காலங்களில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.