ஒரு பிசினஸுக்கு முதலீடு, வாடிக்கை யாளர்கள், திட்டம், லாபம் இவை யெல்லாம் எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங் செய்வதை நிறைய பேர் வீண்செலவு என்று நினைக்கிறார்கள். இது மகா பெரிய தவறு.

உங்கள் நிறுவனத்தின் முதலீட்டுத் தொகை எவ்வளவோ, அதற்கேற்றாற்போல் உங்கள் மார்க்கெட்டிங் உத்தியைத் தேர்வு செய்துகொள்ளலாம். செலவே இல்லாமல்கூட மார்க்கெட்டிங் செய்ய இயலும். அதை ‘ஜீரோ காஸ்ட் மார்க்கெட்டிங்’ என்பார்கள். அப்படியென்றால் என்ன, அதை உங்களின் பிசினஸில் எவ்வாறு புகுத்தலாம் என்பது பற்றி விவரிக்கிறார் மார்க்கெட்டிங் ஆலோசகர் சக்திவேல் பன்னீர்செல்வம்.

ஜீரோ காஸ்ட் மார்க்கெட்டிங்!

‘‘ஒரு நிறுவனத்துக்கான மார்க்கெட்டிங் என்றவுடன் பேனர்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் போன்றவைதான் என்று உங்களின் சிந்தனையைக் குறுக்கிக்கொள்ள வேண்டாம். இவற்றையெல்லாம் செய்வதற்குப் பெரியளவில் செலவாகும். ஒரு நிறுவனத்துக்கான விளம்பரத்தை இலவசமாகச் செய்ய இயலுமா என்றால், நிச்சயமாக முடியும். சிறிய அளவில் முதலீடுகளைக் கொண்டுள்ள எந்த நிறுவனமும் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உதாரணமாக, சென்னையில் உள்ள ஒரு பெரிய அழகு நிலையம் ஒன்று, மகள்களுக்கு அப்பாக்கள் சிகை அலங்காரம் செய்துவிடும் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்கான விளம்பரங்களை சமூகவலைதளங்கள் மூலமே பரப்பியது. பெரிய அளவில் எந்தச் செலவும் செய்யாமல் தங்களுடைய பிராண்டை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்த்ததுதான் செலவே இல்லாத ஜீரோ காஸ்ட் மார்க்கெட்டிங்.

ஜீரோ மார்க்கெட்டிங்குக்கான திட்டமிடல்!

பெரிய செலவு இல்லை என்பதால் நீங்கள் நிறையவே யோசித்துச் செயல்பட வேண்டும். அப்போதுதான் அதிகமான மக்களை நிச்சயமாக நீங்கள் சென்றடைய முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

வாடிக்கையாளர்களைக் கண்டறிவது

முதலில், உங்கள் பொருள் யாருக்கானது, எந்த வயதினர் பயன்படுத்தப்போகிறார்கள், எப்படியெல்லாம் அவர்களைச் சென்றடைய முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.உதாரணமாக, உங்களின் பொருள் குழந்தைக் கானது எனில், உங்களின் வாடிக்கையாளர் பெற்றோர்கள்தான். எந்த வயது வரை உள்ள குழந்தைகளை உடைய பெற்றோர்கள் உங்களின் கஸ்டமர்கள், அவர்களை எந்த வகையான சமூகவலைதளங்கள் மூலம் சென்றடைய முடியும் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும்.

A.I.D.A என்னும் ஃபார்முலா..!

A - awareness - பொருள்களைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துதல்; I - interest - உங்களின் பொருளையோ, சேவையையோ முழுவதுமாகத் தெரிந்துகொள்ள மக்களைத் தூண்டுதல்; D - desire - பொருள்களை வாங்குவதற்கான ஆசையை ஏற்படுத்துதல்; A - action - வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குதல் என உங்களின் மார்க்கெட்டிங் உத்தியை முதலில் திட்டமிட்டுக்கொள்ள இந்த A.I.D.A ஃபார்முலா நிச்சயம் உதவும்.

வாங்கும் யோசனையை (lead) விதைப்பது..!

உங்களுடைய பொருள்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளம்பரம் செய்வதைவிட, உங்கள் பொருளுக்கான தேவைகள் என்ன, என்ன மாதிரியான பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உங்களின் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வை அடுத்தடுத்து கொடுத்துக்கொண்டே இருக்க குட்டி குட்டி வீடியோக்கள் பகிர்வதன் மூலமும் நிறைய மக்களைச் சென்றடைய முடியும்.

வாடிக்கையாளர்களை அதிகரிப்பது!

உங்களின் வாடிக்கையாளர் யார் என்பதை தெளிவாகத் தெரிந்த பின்னர், அவர்களைத் தொடர்ந்து ஃப்லோ செய்து, அவர்களுக்கு ஏற்ற மாதிரியான விளம்பரங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள முடியும்.

ஜூரோ காஸ்ட் மார்க்கெட்டிங் உத்திகள்..!

சோஷியல் மீடியாக்களைப் பயன்படுத்துவது வாட்ஸ்அப், இன்ஸ்டா, ஃபேஸ்புக், ட்விட்டர் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் எல்லா சமூக வலைதளப் பக்கங்களிலும் உங்கள் பொருள் அல்லது சேவையுடன் தொடர்புடைய கருத்துகளைப் பேச ஆரம்பியுங்கள். எடுத்த எடுப்பிலேயே பொருளுக்கான விளம்பரத்தைப் பேச ஆரம்பித்துவிடக் கூடாது. அதுசார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன்பின் பொருளுக்கான விளம்பரங்களைப் பகிர வேண்டும். உங்களின் பிசினஸ் பகிர்வுகள் ஆரம்பத்தில் உங்களின் ஃபர்ஷனல் பக்கங்களில் இருந்தாலும் பிசினஸுக்கு என்று தனிப் பக்கம் ஆரம்பிப்பது நல்லது. ஒரே நாளில் அனைத்துப் பதிவுகளையும் பதிவேற்றாமல். ஒரு நாளைக்கு மக்களை ஈர்க்கும் வகையில் இரண்டு பதிவுகள் என்று திட்டமிட்டுக்கொள்ளுங்கள். உங்களின் பதிவில் இருக்கும் வார்த்தைகள், அதன் அளவு, வடிவங்கள், நிறம் என அனைத்தும் அடுத்தவர் களுக்கு எரிச்சல் உணர்வைத் தராத வண்ணமும், கவரும் வண்ணமும் இருக்க வேண்டும். உங்களின் போட்டி நிறுவனத்தின் பிசினஸ் பக்கத்துடன், உங்களின் பிசினஸ் பக்கத்தையும் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. உதாரணமாக, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட ஒரு பொருளை நீங்கள் விற்பனை செய்பவர்கள் என்றால், முதலில் அந்தப் பொருளின் தேவை என்ன, அதன் பயன்பாடுகள் என்ன, யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்ற எல்லா தகவல்களையும் பதிவிட்டபின் உங்களுடைய பிராண்ட் பற்றியும் பேச ஆரம்பித்தால் வாடிக்கை யாளர்களை எளிதாகக் கவர முடியும்.

வாய்வழி விளம்பரம்

சமூகவலைதளங்கள், தொலைக்காட்சி, போன்றவற்றில் வரும் விளம்பரங்களின் தாக்கத்தைவிட ஒரு பொருள் நன்றாக இருக்கிறது அல்லது ஒருவரின் சேவை நன்றாக இருக்கிறது என மற்றவர்கள் சொல்லும் கமென்ட்ஸ்தான் எப்போதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஆரம்பமாக அமையும். இதைப் பெற வேண்டுமானால், தரத்தில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. இதன் மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்து தொடர்ந்து தக்க வைப்பதும் ஒரு வகையான பிசினஸ் வளர்ச்சிதான்.

உதாரணமாக, நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்கும் ஈவென்ட் பிளானிங் நிறுவனம் ஒன்று, தன் வாடிக்கையாளரிடமிருந்து, குழந்தைக்கான பிறந்தநாள் ஈவென்ட் ஒன்றை ஆர்டராகப் பெற்று அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. ஆனால், ஈவென்டுக்கு சில நாள்களுக்கு முன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்த ஈவென்ட்டை நிறுத்தி விட்டு, அந்த ஈவென்ட்டை நிறுத்தியதற்கான கட்டணத்தைப் பிடித்துக்கொள்ளுமாறு கேட்டார்கள். ஆனால், அந்த நிறுவனம் தன்னுடைய கஸ்டமரிடம் முழுத் தொகையையும் திருப்பிக் கொடுத்தது. மேலும், அந்தக் குழந்தை பற்றித் தொடர்ந்து விசாரித்து வந்து, குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் கேக் வெட்டி அந்த ஈவென்ட்டை சிம்பிளாக இலவசமாகச் செய்து கொடுத்தது. இதன்மூலம் அந்த வாடிக்கை யாளரின் நற்மதிப்பைப் பெற்றதுடன் அவரின் மூலம் நிறைய ஆர்டர்களையும் அந்த நிறுவனம் பெற்றது.

ஈவென்டுகள் நடத்துவது..!

இப்போது ஆன்லைன்தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதனால் உங்களின் பிசினஸ் சார்ந்து ஆன்லைனில் சின்னச் சின்ன ஈவென்ட்டுகள், ஃப்ரீ வெப்மினார்கள் நடத்தலாம். அது பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த ஈவென்ட்டுகளைக் கட்டணம் ஆக்குவதுடன், வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும் லாபம் ஈட்டலாம்.

பரிந்துரை செய்யச் சொல்லுதல்..!

உங்களுடைய பொருள்களைப் பயன் படுத்தியவர்களிடம், அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம் உங்களின் பொருளை பரிந்துரைக்கச் சொல்லலாம். அப்படிக் கிடைக்கும் ஆர்டர்களுக்கு, பரிந்துரைத்த வர்களுக்கு ஏதேனும் பரிசு தரலாம். போன் பே ஆப் பயன்படுத்துபவர்கள் தங்களின் நெருங்கிய வட்டத்துக்கு அவர்களின் ஆப்பைப் பரிந்துரை செய்து, அவர்கள் ஆப்பை டவுன்லோடு செய்து நடைபெறும் முதல் பரிவர்த்தனைக்குப் பரிந்துரை செய்தவருக்கு சிறு தொகை வழங்கப்படுகிறது.

இந்த வழிமுறைகள் எல்லாம் பெரிய செலவு இல்லாமல் உங்கள் பிசினஸை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல துணை புரிபவை. கொஞ்சம் மாற்றி யோசித்தால், வித்தியாசமான ஆயிரம் ஐடியாக்கள் உங்களுக்குக் கிடைக்கும்’’ என்றார் சக்திவேல் பன்னீர்செல்வம்.

சிறுதொழில் நடத்துபவர்கள் முயற்சி செய்து பார்க்கலாமே!