Published:Updated:

சத்தமில்லாமல் நடந்த சங்கமம்... ‘ஜிஃபோ’ நிறுவனத்தில் புதிய முதலீடு..!

ராஜ் பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
ராஜ் பிரகாஷ்

முதலீடு

சத்தமில்லாமல் நடந்த சங்கமம்... ‘ஜிஃபோ’ நிறுவனத்தில் புதிய முதலீடு..!

முதலீடு

Published:Updated:
ராஜ் பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
ராஜ் பிரகாஷ்

சென்னையைச் சேர்ந்த ஜிஃபோ ஆர்.என்.டி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சத்தம் இல்லாமல் பெரிய முதலீட்டை பெற்றிருக்கிறது. சர்வதேச பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான டி.ஏ அசோசியேட்ஸ், ஜிஃபோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான பங்குகளை டி.ஏ அசோசியேட்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகச் செய்தி வெளியானது. இது பற்றி பல கேள்விகளுடன் ஜிஃபோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ் பிரகாஷை சந்தித்தோம்.

சர்வதேச நிறுவனம் ஒன்றிலிருந்து முதலீட்டைப் பெற்றீர்களே, இது திடீர் முடிவா?

“2008-ம் ஆண்டு நாங்கள் நிறுவனத்தை தொடங்கியபோது ஏஞ்சல் முதலீட்டாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என முதலீட்டைப் பெற்று நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தோம். நிறுவனம் தொடங்கிய காலத்திலேயே பணியாளர்கள் சிலருக்கு பங்குகளைக் (ESOP) கொடுத்தோம். நிறுவனம் வளர வளர பணியாளர்களுக்குப் பங்குகளைத் தரவும் செய்தோம். இதுபோல, நிறுவனத்தின் பங்குகள் பலரிடம் இருந்தது. இந்தப் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறும் வாய்ப்பு அவர் களுக்கு இல்லாமலே இருந்தது. அவர்களுக் கான ஒரு வாய்ப்பை உருவாக்கத் திட்ட மிட்டதன் விளைவுதான், டி.ஏ அசோசியேட்ஸ் முதலீடு. மேலும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு பார்ட்னர் தேவையாகவும் இருந்தது.”

ராஜ் பிரகாஷ்
ராஜ் பிரகாஷ்

இந்த நடவடிக்கையை நீண்ட காலமாகத் திட்டமிட்டீர்களா?

“ஓராண்டுக்கு முன்பாக இதற்கான பணியைத் தொடங்கினோம். பல முதலீட்டு நிறுவனங்கள், பல டெக்னாலஜி நிறுவனங்கள், பல இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்கள் எனப் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம். பலர் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால், இறுதியாக டி.ஏ அசோசியேட்ஸ் நிறுவனத்து டன் ஒப்பந்தம் நிறைவேறியது.

இந்த இணைப்பு இரு வாரங்களுக்கு முன்பு கையெழுத்தானது. அப்போதே அனைத்துப் பணியாளர்களுக்கும் முறையாக நாங்கள் அறிவித்தோம். இந்தியாவில் 1,200 பணி யாளர்கள், சர்வதேச அளவில் 400 நபர்கள் இருக்கிறார்கள். தவிர, இந்த டீலில் எங்கள் சார்பாக மற்றும் டி.ஏ சார்பாக சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். முழுமையாக முடிந்த பிறகு, வெளியே சொன்னால் போதும் என எங்கள் தரப்பில் இருந்து கேட்டுக்கோண்டோம். அவர்கள் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டு செயல் பட்டார்கள், அவ்வளவுதான்.”

டி.ஏ-வின் முதலீட்டால், நிறுவனத்தில் என்ன மாற்றம் வரும்?

“நாம் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மாறுகிறோம். ஆனால், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அது குறித்து எந்தக் கவலையும் இல்லை. அப்பா, அம்மா, தாத்தா பாட்டி இருக்கிறார்கள். அதனால் எங்கிருந் தாலும் குழந்தைகள் இயல்பாக இருக்கும்.

புதிதாக ஒரு பார்ட்னர் வந்திருக்கிறார் என்பதைத் தவிர, வேறு பெரிய எந்த மாற்றமும் கிடையாது. முன்பு ஏஞ்சல் முதலீட்டாளர் மற்றும் மேனேஜ்மென்ட் டீம் சேர்ந்து நிறுவனத்தை நடத்தியது. தற்போது டிஏ அசோசியேட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் டீம் இணைந்து நிறுவனத்தை நடத்துகிறது. இயக்குநர் குழுவில் டிஏ சார்பாக ஒருவரோ அல்லது இருவரோ நியமனம் ஆகலாம். அதுதான் மாற்றம்.”

இந்த இணைப்பில் பணியாளர்களுக்கு என்ன கிடைத்தது?

“இந்த இணைப்பில் ஒவ்வொரு பணியாளர் களுக்கும் பயன் இருந்தது. அவர்களுக்கு உரியவை அவர்களுக்குக் கிடைத்தது என்பதால், என்ன கிடைத்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை.’’

அடுத்து என்ன ஐ.பி.ஓ-வா?

“இப்போதுதான் பிரைவேட் ஈக்விட்டி வந்திருக்கிறது. ஐ.பி.ஓ குறித்து எந்தத் திட்டமும் இல்லை. நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து 45 - 50% வளர்ச்சி கண்டு வந்திருக் கிறோம். இந்த வளர்ச்சி, நிறுவனத்தின் பிசினஸ் மாடல், கலாசாரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே டி.ஏ அசோசியேட்ஸ் வந்திருக்கிறது. இப்போது போதுமான நிதி எங்களிடம் இருக்கிறது. அதனால் நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்வதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. ஐ.பி.ஓ என்பது இலக்கல்ல.”

கோவிட் இப்போது எப்படி இருக்கிறது...?

``நாம் டெல்டா வைரஸால் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தோம். அதனால் மற்றொரு அலை வந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், எங்கெல்லாம் பெரிய பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால் அமெரிக்காவில் சிக்கல் தொடங்கிவிட்டதாகவே கருதுகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு அங்கு நெருக்கடி இருக்கக்கூடும்” என்று பேசி முடித்தார் ராஜ் பிரகாஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism