Published:Updated:

வெளியானது சுயமாக கோடீஸ்வரானவர்கள் பட்டியல்; 3-வது இடம் பிடித்த ராதா வேம்பு; யாருக்கு முதலிடம்?

ராதா வேம்பு ( Facebook Photo: @radha.vembu )

49 வயதான ராதா வேம்பு, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) தொழில்துறை மேலாண்மையில் பட்டம் பெற்றவர். 2007-ம் ஆண்டிலிருந்து ஜோஹோ மெயிலின் திட்ட மேலாளராக ராதா வேம்பு உள்ளார்.

இந்தியாவில் உள்ள முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது ஹூருன் (Hurun). இந்த பட்டியலில் சுயமாக தொழில் தொடங்கி பில்லியனரான மூன்று பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இம்மூன்று பெண்களில் 3.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார், ராதா வேம்பு.

ராதா வேம்பு
ராதா வேம்பு
ட்விட்டர்

சென்னையை தலைமை இடமாக கொண்ட ஜோஹோ (Zoho) நிறுவனம், ஸ்ரீதர் வேம்பு என்பவரால் தொடங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும் ஒன்பது நாடுகளில் கிட்டத்தட்ட 12 அலுவலகங்களை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. 49 வயதான ராதா வேம்பு இவரின் சகோதரி மற்றும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) தொழில்துறை மேலாண்மையில் பட்டம் பெற்றவர். 2007-ம் ஆண்டிலிருந்து ஜோஹோ மெயிலின் திட்ட மேலாளராக ராதா வேம்பு உள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிறுவனத்தில் இவருக்கென பெரும்பான்மையான பங்குகள் உண்டு. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் பெரும்பாலும் சமூக ஊடங்கங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பது இல்லை.

ஃபல்குனி நாயர்
ஃபல்குனி நாயர்

சுயமாக கோடீஸ்வரர்கள் ஆன பட்டியலில் 7.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபல்குனி நாயர் முதலிடத்தில் உள்ளார். இவஎ நைகா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இரண்டாவது இடத்தை பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தார் பெற்றுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism