பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ரூ.8,000 கோடி வருமானம்... அசத்தல் வளர்ச்சியில் ஜோஹோ!

ஶ்ரீதர் வேம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீதர் வேம்பு

வளர்ச்சி

பிரபல இந்திய சாஃப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன் 2021-ம் ஆண்டு வருடாந்தர வருவாயில் 1 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,100 கோடி) மைல் கல்லைக் கடந்துவிட்டது. இந்திய ஐ.டி பிசினஸ் ஆண்டுக்கு ஆண்டு 77% அடிப்படையில் வளர்ச்சி கண்டுவருவதாக ஜோஹோ நிறுவனத் தின் சி.இ.ஓ ஶ்ரீதர் வேம்பு சொல்லியிருக்கிறார். ஜோஹோவின் இந்த வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த பிசினஸில் அமெரிக்கா முதலிடத்திலும், ஐரோப்பா இரண்டாம் இடத்திலும் உள்ளது.இதற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. என்றாலும், இந்த நிறுவனத்தின் இந்திய பிசினஸ் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 4 - 5 ஆண்டுகளில் இந்தியா இரண்டாம் இடத்திலும், 10 ஆண்டு களுக்குப் பிறகு, முதலாம் இடத்திலும் இந்தியா இருக்கும் என்றும் ஶ்ரீதர் வேம்பு சொல்லி இருக்கிறார்.

ரூ.8,000 கோடி வருமானம்... அசத்தல் வளர்ச்சியில் ஜோஹோ!

ஜோஹோ நிறுவனம் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில்நுட்ப சேவை யைத் தந்துவருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் எட்டு கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர் களைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுக்க 14 இடங்களில் பாயின்ட்ஸ் ஆஃப் ப்ரசன்ஸ் (PoPs) உள்ளது. ஆனால், மேலும், துரிதமான சேவையை அளிக்க அடுத்த ஐந்தாண்டுகளில் உலகம் முழுக்க 100 இடங்களில் பாயின்ட்ஸ் ஆஃப் ப்ரசன்ஸ்ஸை நிறுவி செயல்படுத்த உள்ளது. மேலும், பிளாக்செயின் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியில் நமது இந்திய மொழிகளை உள்ளடக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ள தாகவும் ஶ்ரீதர் வேம்பு தெரிவித்திருக்கிறார்.

கோவிட்டுக்கு முன் சென்னை, தென்காசி ஆகிய இரு இடங்களில் செயல்பட்டுவந்த இந்த நிறுவனத்தின் அலுவலகம் தற்போது மதுரை, கோவை, திருச்சி எனப் பல ஊர்களிலும் செயல்பட்டு வருவதுடன், இதன் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 11,000-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!