Published:Updated:

Zomato: மளிகைப் பொருள்கள் விநியோக சேவையை திடீரென நிறுத்தும் ஸொமேட்டோ; பதவி விலகிய இணை நிறுவனர்; ஏன்?

Zomato

மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் திட்டத்தை வருகிற செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து நிறுத்திக் கொள்வதாக ஸொமேட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

Zomato: மளிகைப் பொருள்கள் விநியோக சேவையை திடீரென நிறுத்தும் ஸொமேட்டோ; பதவி விலகிய இணை நிறுவனர்; ஏன்?

மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் திட்டத்தை வருகிற செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து நிறுத்திக் கொள்வதாக ஸொமேட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

Published:Updated:
Zomato
ஸ்விகி நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கிய ஸொமேட்டோ, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை அடைந்து, உலகின் மிகப் பெரிய உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக வளர்ந்தது.

நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காகவும், கொரோனா பெருந்தொற்றினால் இந்த நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவும் சமீபத்தில் பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிட்டு முதலீட்டாளர்களிடமிருந்து இந்நிறுவனம் நிதி திரட்டியது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, திரட்டிய நிதியைக் கொண்டு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது.

Zomato ஐ.பி.ஓ
Zomato ஐ.பி.ஓ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்படி இந்த நிறுவனம் உணவு டெலிவரியைத் தாண்டி மளிகைப் பொருள்களளையும் டெலிவரி செய்யத் திட்டமிட்டு க்ரோஃபர்ஸ் (Grofers) நிறுவனத்தில் ரூ.750 கோடி முதலீடு செய்யவும் திட்டமிட்டது. இந்தத் திட்டத்தை சோதனை முயற்சியாக, இந்தியாவின் சில இடங்களில் மட்டும் கடந்த ஜூலையில் ஸொமேட்டோ ஆரம்பித்தது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் திட்டத்தை வருகிற செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து நிறுத்திக் கொள்வதாக ஸொமேட்டோ அறிவித்துள்ளது.

மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யும் வர்த்தகப் பிரிவில், பல்வேறு நிறுவனங்கள் இருந்தாலும், ஸொமேட்டோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஸ்விகி சமீபத்தில் மளிகைப் பொருள்கள் விற்பனையைத் துவங்கி வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கும் நிலையில், ஸொமேட்டோ நிறுவனம் பின்வாங்கியிருப்பது கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த சோதனைத் திட்டத்தில் மளிகைப் பொருள்கள் டெலிவரி வர்த்தகத்தில் பொருள்கள் இருப்பு வைத்துக்கொள்வதில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்வதில் அதிகப்படியான பாதிப்பு, மோசமான வாடிக்கையாளர் அனுபவம் போன்றவற்றைதான் மிக முக்கிய காரணங்களாக ஸொமேட்டோ தெரிவித்துள்ளது.

ஸொமேட்டோவின் இந்த அறிவிப்பால், முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. லாபம் இல்லாத அல்லது வர்த்தகம் அதிக இல்லாத பிரிவுகளை மூடுவது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

Zomato
Zomato

`ஒரு நிறுவனம் புதிய வர்த்தகத்தில் இறங்குவது என்பது, முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் ஸொமேட்டோ நிறுவனம் வெகு சமீபத்தில்தான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு முடிவுகளையும் நிதானமாகவும், பொறுப்புடனும் எடுக்க வேண்டும். ஸொமேட்டோவின் இந்த முடிவானது, அதன் பங்கு விலையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது' என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்நிறுவனத்தில் இணை நிறுவனர் கௌரவ் குப்தா ஸொமேட்டோ நிறுவனத்திலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். புதிய அத்தியாயம் ஒன்றில் தான் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism