கட்டுரைகள்
Published:Updated:

நாங்கள் கொரோனா பேட்ச் இல்லை. குலோபல் பேட்ச்! - மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Online Course
பிரீமியம் ஸ்டோரி
News
Online Course

ராஜேஷ் தூடு அடுத்து பேசியது சைபர் செக்யூரிட்டி பற்றி.

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்? என்ன படித்தால் வேலை கிடைக்கும்?’

- இந்த ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்திருக்கும் மாணவர்களும்... வேலைக்குச் சேர்ந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் வேலையை இழந்துவிட்டு நிற்கும் அவர்களது சீனியர்களும் ஒரு சேரக் கேட்கும் கேள்வி இது.

லட்சுமணன் சிதம்பரம், ஸ்ரீராம், ராஜேஷ் தூடு
லட்சுமணன் சிதம்பரம், ஸ்ரீராம், ராஜேஷ் தூடு

‘இது கவலைப்படுவதற்கான நேரமில்லை; களமிறங்குவதற்கான நேரம்’ என்கிறார்கள் மாணவர்கள் மீது அக்கறையுள்ள லட்சுமணன் சிதம்பரம், ஸ்ரீராம், ராஜேஸ் தூடு ஆகிய மூவரும். சுமார் 1.25 லட்சம் ஊழியர்களோடு, 90 நாடுகளில், சுமார் ஆயிரம் கம்பெனிகளுக்கு மென்பொருள் சேவையை வழங்கும் டெக் மஹிந்திராவின் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இவர்கள்!

மோட்டார் விகடன் ஏற்பாடு செய்திருந்த Job opportunities in IT Industry என்ற ஆன்லைன் பயிலரங்கத்தில் இவர்கள் கூறிய விவரங்கள் மாணவர்களுக்கு வைட்டமின் C (Confidence) ஆக இருந்தது.

``கடைசி செமஸ்ட்டரை காலேஜுக்கே செல்லாமல் பாஸ் செய்த ‘கொரோனா பேட்ச்’ என்ற முத்திரை எங்களுக்கு இருக்கிறதே… இது எங்கள் வேலை வாய்ப்பை பாதிக்காதா?’’ என்ற கவலை தோய்ந்த கேள்விக்கு, ``கொரோனா உங்களை மட்டும்தானா பாதித்திருக்கிறது? உலகத்தையே பாதித்திருக்கிறது. அதனால் அது பற்றிய கவலையை உதறித் தள்ளுங்கள். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் இப்போது ஆன்-லைனில்தான் பாடங்களை நடத்துகின்றன. அதில் பல உங்களுக்கும் கிடைக்கின்றன. இது மிகப் பெரிய வரம். MOOCs எனப்படும் Massive Open Online Courses பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகத்தரத்தில் கல்வி பயிலக்கூடிய வாய்ப்பை கொரோனா வழங்கியிருக்கிறது என்று இந்தச் சூழலை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு படியுங்கள். கேம்பஸ் இன்டர்வியூ நடக்கவில்லையே எனக் கவலைப்படாதீர்கள். வெர்ச்சுவல் ரெக்ருட்மென்ட் துவங்க இருக்கிறது. தயாராக இருங்கள்” என்று எடுத்த எடுப்பிலேயே நம்பிக்கை கொடுத்தார் லட்சுமணன்.

``கொரோனாவால் வேலை இழந்தவர்களெல்லாம் எங்களோடு போட்டி போடுவார்களே என்ற கவலை வேண்டாம். முன் அனுபவத்தை வைத்து மட்டுமே எந்த நிறுவனமும் ஒருவரை வேலைக்கு எடுக்காது. Jawa, Main Frame எல்லாம் முக்கியம்தான். ஆனால் பிளாக் செயின், சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய ஏரியாக்களில் வேலை வாய்ப்புகள் உருவாகும்போது... அதில் அனுபவம் உள்ளவர், அனுபவம் இல்லாதவர் என்ற வித்தியாசமில்லை. எல்லோருமே ஒன்றுதான். திறமைதான் ஜெயிக்கும்!’’ என்று உற்சாகமூட்டினார் லட்சுமணன்.

நாங்கள் கொரோனா பேட்ச் இல்லை. குலோபல் பேட்ச்! -  மகிழ்ச்சியில் மாணவர்கள்!

``சரி, டிமாண்ட் இருக்கும் இது போன்ற புதிய ஏரியாக்களில் எப்படித் தேர்ச்சி பெறுவது?’ - இந்தக் கேள்விக்கு டெக் மஹிந்திராவின் வைஸ் பிரசிடெண்ட் ஸ்ரீராம் பதில் அளித்தார். ‘‘Cloud Computing, Data Analytics, Artificial Intelligence போன்ற ஏரியாக்களில் ப்ரெஷ்ஷர்ஸுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி விவரமாக எடுத்துச் சொன்ன இவர், மைக்ரோ சாப்ட், கூகுள் போன்றவற்றில் என்னென்ன சர்ட்டிபிகேட் கோர்ஸ் எல்லாம் இருக்கின்றன என்பதையும் பட்டியலிட்டார். (மோட்டார் விகடன் முகநூலில் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்தப் பயிலரங்கத்தின் வீடியோ பதிவில் இதன் முழு விவரங்களும் இருக்கின்றன)

பயிலரங்கத்தில் இறுதியாகப் பேசிய ராஜேஷ் தூடு, உலக அளவில் ‘பிளாக் செயின்’ துறையின் அத்தாரிட்டி. ‘`இப்போது இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், வேகமாக இந்தத் துறை வளர்ச்சியடைந்துவருகிறது. இப்போது இருப்பதைவிட நானூறு மடங்கு இதில் வேலை வாய்ப்புகள் பெருக இருக்கின்றன. மிகவும் அரிதான துறை என்பதால் சம்பளமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்’’ என மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டினார். ‘‘இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இன்ஷூரன்ஸ், பேங்க்கிங் என்று ஏதாவது ஒரு துறை பற்றி உங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்றால், உங்களுக்கு Coding எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அது இல்லாமலேயே உங்களால் இந்தத் துறையில் பிரகாசிக்க முடியும்” என்று சொன்னபோது பலரும் ‘அப்படியா’ என்று சாட் பாக்ஸில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

ராஜேஷ் தூடு அடுத்து பேசியது சைபர் செக்யூரிட்டி பற்றி... உலகில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான சைபர் அட்டாக்ஸ் நடந்திருக்கின்றன. இதே ஒரு வார காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற சைபர் அட்டாக்ஸின் எண்ணிக்கை 23 லட்சம். எப்படியெல்லாம் சைபர் அட்டாக்ஸ் நடத்தப்படலாம்? எங்கெங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து சொல்வதற்கு Ethical Hackers தேவை என்பதை அவர் விளக்கியதோடு, இதற்கு என்ன மாதிரியான படிப்பும் பயிற்சியும் வேண்டும் என்பதையும் சொன்னார் (விவரங்கள் வீடியோவில்).

பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் கூறியதைப்போல - கொரோனா, ஐ.டி துறையில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெருக்கியிருக்கிறது என்பது இந்தப் பயிலரங்கம் நிறைவு பெற்றபோது மாணவர்களுக்குப் புரிந்தது!

ஆட்டோமொபைல், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான இதுபோன்ற பயிலரங்கங்களில் கலந்துகொள்ள விருப்பமா? motor@vikatan.com என்ற முகவரிக்கு YES என்று subject-ல் குறிப்பிட்டு மெயில் அனுப்புங்கள்.

நாங்கள் கொரோனா பேட்ச் இல்லை. குலோபல் பேட்ச்! -  மகிழ்ச்சியில் மாணவர்கள்!

இந்தப் பயிலரங்கத்தை மோட்டார் விகடன் முகநூலில் பார்க்க...