கருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை... மருத்துவத் துறையில் கலக்கும் ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப்
மருத்துவத் துறையில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் குறிப் பிட்டுச் சொல்லும்படி வளர்ச்சி கண்டுவரும் ஸ்டார்ட்அப்தான் மைண்ட் அண்ட் மாம். இந்த நிறுவனத் தின் நிறுவனர் பத்மினி ஜானகியை சந்தித்துப் பேசிய போது, அவர் தனது பிசினஸ் பயணத்தை எடுத்துச் சொன்னார்.
“நான் சென்னைப் பெண். வேளச்சேரிதான் சொந்த ஊர். எத்திராஜ் கல்லூரியில் படித்தேன். அதன் பிறகு, ஊடகம் மற்றும் ரேடியோவில் சில மாதங்கள் பணியாற்றினேன். டெக்னாலஜியில் ஆர்வம் வந்ததால், காக்னி சென்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு குறுகிய காலம் மட்டுமே வேலையில் இருந் தேன். அதைத் தொடர்ந்து பேபால் நிறுவனத்தில் பணி யாற்றினேன். நல்ல வளர்ச்சி இருந்ததால், அங்கு ஏழு ஆண்டுகள் பணியாற்றினேன். நல்ல பொறுப்பில் இருந்தாலும் தொழில்முனைவில் ஆர்வம் இருந்தது. பெண்கள் நலத்தில் கவனம் செலுத்தும் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்க நினைத்து, மைண்ட் அண்ட் மாம் நிறுவனத்தை நான், டாக்டர் வினாயக் மற்றும் சதீஷ் ஆகியோர் இணைந்து இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம்.
பெண்களுக்குக் கருத்தரித்தல் முதல் குழந்தை பிறப்புக்குப் பிந்தைய காலம் வரை அதிக சந்தேகங்கள் இருக்கும். அனைத்து சந்தேகங் களுக்கும் மருத்து வரை நாட முடியாது. அதனால் அவர்களுக்கு உடனடியாக சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் தொடங்கினோம். அதிக ரிஸ்க் வாய்ந்த பிரசவம் (high risk pregnancy) தொடர் பான ஆலோசனைகளை வழங்கி வந்தோம். இதில் சில ஆலோசனைகள் இலவச மாகவும், சில ஆலோசனை களை சப்ஸ்கிரைப் செய்தவர் களுக்கும் வழங்கினோம்.
தற்போது செயற்கைக் கருத்தரிப்பு குறித்து பல தவறான புரிந்துகொள்ளல்கள் இருக்கின்றன. தற்போது அதிலும் கவனம் செலுத்தி இருக்கிறோம். திருமணம் முடிந்து சில மாதங்களில் குழந்தை இல்லை என்றாலே செயற்கைக் கருத்தரிப்பு பற்றிப் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த அவசரம் தேவையில்லை. இதை ஒழுங்குபடுத்துவதுதான் எங்களுடைய பணி.

முதலில் சம்பந்தப்பட்ட தம்பதிகளை இயற்கையாகக் கருத்தரித்தலுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பார்ப்போம். டயட், உடல் நலத்தைப் பேணுதல் உள்ளிட்ட சில வழிமுறை களைப் பின்பற்றுவோம். அதன் பிறகும் கருத்தரித்தல் நடக்கவில்லை எனில், செயற்கைக் கருத்தரித்தலை நாங்கள் பரிந்துரை செய்வோம்.
இதுவரை 18 செயற்கை கருத்தரிப்பு மையங்களை எங்களுடன் இணைத்திருக்கிறோம். தம்பதிகளின் இடம் வசதிக்கேற்ப மருத்துவமனைகளை நாங்கள் இணைப்போம். எங்களிடம் இணைந்துவிடுவதால், தேவையில்லாமல் சோதனைகள், மருந்துகள் என எதையும் எடுக்கத் தேவையில்லை. அதே சமயம், மற்ற கருத்தரிப்பு மையங்களைவிட எங்களிடம் இணையும்போது ரூ.2.5 லட்சம் - ரூ.4 லட்சம் வரை செலவாகும். மேலும், மருத்துவமனையில் எந்த செலவும் செய்யத் தேவையில்லை.
இன்னும் பல மருத்துவமனைகளை இணைக்கும் நடவடிக்கையில் உள்ளோம். தமிழகம் மட்டுமல்லாமல், வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக மக்கள் இங்கு வருகிறார்கள். எங்களுக் குத் தமிழக அரசின் ‘டான்சீட்’ நிதி கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஏஞ்சல் முதலீட்டாளர்கள், மருத்துவர்கள் எனப் பலரிடம் இணைந்து சுமார் ரூ.4 கோடி வரை முதலீட்டைத் திரட்டினோம். டெக்னாலஜியை விரிவாக்குவதற்கும், பணியாளர் களை விரிவுபடுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். சுமார் 1.7 லட்சம் நபர்கள் எங்களிடம் உறுப்பினர் களாக இருக்கிறார்கள்.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. எப்போது திருமணம் செய்துகொள்வது, எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது என்பதில் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார்கள். எப்போது குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சம்பந்தப்பட்டவர்களின் சூழலைப் பொறுத்தது. ஆனால், 30 வயதை நெருங்கும் பெண்கள் கருமுட்டையை சேமித்து வைப்பது நல்லது. இதற்கான ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம். வருடங்கள் செல்லும்போது கருத்தரிப்புக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
இந்தியாவில் கணிசமான பேர் செயற்கைக் கருத் தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இதற்கு பெரிய வாய்ப்பிருக்கிறது’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் பத்மினி ஜானகி.
வளர்ந்துவரும் மருத்துவ டெக்னாலஜியில் மைண்ட் அண்ட் மாம் கவனம் பெறுகிறது.