Published:Updated:

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

நாமக்கல் ஸ்பாட் ரேட் நிலவரம் !

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

நாமக்கல் ஸ்பாட் ரேட் நிலவரம் !

Published:Updated:

தற்போது நாமக்கல் மற்றும் அவற்றின் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி சுமாராகவே உள்ளது.

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் நாமக்கல்லுக்கு முக்கிய இடமுண்டு. ஏனெனில், இங்குதான் தமிழகத்திலேயே அதிக அளவு முட்டை உற்பத்தி நடைபெறுகிறது. தவிர, லாரிக்கு பாடி கட்டும் தொழிலும், ரிக் வண்டி தொழிலும் நாமக்கல் நகரின் தனி அடையாளங்கள். மேலும், ஆஞ்சநேயர் என்றாலே நம்மில் பலருக்கு நாமக்கல் நகர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

நாமக்கல்லின் ரியல் எஸ்டேட் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள ஒரு விசிட் அடித்தோம்.

தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சேலம், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய பெரிய நகரங்களுக்கு மத்தியில் இருக்கும் நாமக்கல்லுக்கு, பெரும்பாலான தமிழர்களும், வட மாநில தொழிலாளர்களும் இங்கிருக்கும் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் வேலைக்கு வருகிறார்கள். இங்கு நீண்ட நாட்களாக இயங்கிவரும் உழவர் சந்தை, மற்ற ஊர்களின் சந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. மேலும், நாமக்கல்லைச் சுற்றி இருக்கும் கிராம விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

வேலைதேடி வந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கேயே நிலங்களையும், வீடுகளையும் வாங்கி செட்டில் ஆகிவிடு கிறார்கள். அந்த வகையில் இங்கு ரியல் எஸ்டேட்டுக்கு எப்போதுமே ஒரு தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது.

என்னதான் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக இருந்தாலும், இங்கு சராசரியாக நிலங்களை வாங்கிக்குவிக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கூடுதலாக புதிதாக ரயில் நிலையமும் இங்கு வந்துள்ளது. மேலும், நாமக்கல்லில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு, புதிதாக பெரிய அளவில் பேருந்து நிலையமும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரியல் எஸ்டேட் நிலவரம் நாமக்கல்லில் பரபரப்பாகவே உள்ளது.

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

நாமக்கல் நகரின் ரியல் எஸ்டேட் நிலவரத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார், நாமக்கல் மாவட்ட நில முகவர்கள் சங்க பொருளாளர், ஹெச்.ஜபுருல்லா.

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

“நாமக்கல் நகரில் சில அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் வந்தாலும், அவற்றுக்குப் போதிய வரவேற்பு இல்லை. தனியே மனை வாங்கி, அதில் வீடு கட்டவே பலரும் விரும்புகிறார்கள். இதற்கு வீட்டுக் கடன் சுலபமாகக் கிடைப்பதும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பு என்று பார்த்தால் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள பொன்நகரில் சில அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதியில் 2,400 சதுர அடி கொண்ட டபுள் பெட்ரூம் ஃப்ளாட்டின் விலை ரூபாய் 35 லட்சம் வரை விற்கப்படுகிறது. சிங்கிள் பெட்ரூம் விலை ரூ.25 லட்சம் வரை விற்கப்படுகிறது.

நகரின் பேருந்து நிலைய பகுதியில் மனை சதுர அடி ரூ. 6,700-7,000 வரைக்கும் விற்கப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளாக 6 சாலைகள் இருந்தாலும், சேந்தமங்கலம் சாலையில் உள்ள மனைகள் தான் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இதற்குக் காரணம் இந்தச் சாலை அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் நிலவுவதுதான்” என்றார்.
நாமக்கல் நகரில் சின்ன முதலைப்பட்டி பகுதி மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்தப் பகுதியில் தண்ணீர் மற்றும் போக்குவரத்து வசதி நன்றாக இருப்பது முன்னேற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் சேந்தமங்கலம், சேலம், திண்டமங்கலம் சாலைகளில் ஏதாவது ஒரு பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ளதாகப் பேசப்படுவதால் அந்தப் பகுதிகளில் தற்போது வழக்கத்துக்கு மாறாக வேகமாக இடமதிப்பு அதிகரித்து வருவதோடு, இடம் கைமாறுவதும் அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மனை விலை நிலவரம் (சதுர அடி விலை ரூ.)

நாமக்கல் - திருச்செங்கோடு சாலை:
நாமக்கல் மெயின் 6,700-7,000
நல்லிபாளையம்  1,400-1,500
கலெக்டர் ஆபீஸ்  1,100-1,250
வேலகவுண்டம்பட்டி 750-850
மாணிக்கம்பாளையம்  200-300

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

நாமக்கல் – மோகனூர் சாலை:

ஐயப்பன் கோவில்  4,000-5,000
கொண்டிசெட்டிப்பட்டி  4,000-4,500
அணியாபுரம்   450-500
நெய்க்காரன்பட்டி  600-700
மோகனூர்   700-800

நாமக்கல் – சேலம் சாலை:

4 தியேட்டர் பகுதி  9,000-10,000
முருகன் கோயில் பகுதி  4,800-5,000
முதலைப்பட்டி   2,500-3,000

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

நாமக்கல் – துறையூர் சாலை:

கொசவம்பட்டி   3,500-4,000
அண்ணாநகர்   750-800
பட்டறை மேடு   600-700
கூலிப்பட்டி   450-500
தூசூர்    150
எருமப்பட்டி   1,200-1,500
பரமத்தி சாலை:
காவெட்டிப்பட்டி மெயின் 9,000-10,000
வள்ளியாபுரம்   650-700
கீரம்பூர்   650-700
பரமத்தி   3,500-4,000

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை:

ரயில்வே பாலம்   1,800-2,000
வேட்டாம்பாடி   900-1,000
முத்துகாபட்டி   1,300-1,500
சேந்தமங்கலம்   2,300-2,500

நாமக்கல் வாடகை வீடு நிலவரம்:

வாடகை வீடுகளைப் பொறுத்தவரை, சேந்தமங்கலம் சாலையில்தான் நடுத்தர மக்கள் அதிக அளவில் வாடகைக்குச் செல்கின்றனர். காரணம், இந்தப் பகுதியில்தான் ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான பகுதியாகவும் இது உள்ளது.

ரியல் எஸ்டேட்...ரியல் அப்டேட்!

மனை விலை மற்றும் வாடகை தோராயமானவையே.
படங்கள்:  அ.நவின்ராஜ்