எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ந்து வருகிறது தூத்துக்குடி நகரம். ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் வருடந்தோறும் சாதனை படைத்துவரும் துறைமுகம், உப்பு உற்பத்தி, மீன் பிடித்தல், முத்துக் குளித்தல், ஆத்தூர் வெற்றிலை, உடன்குடி கருப்பட்டி, புதியம்புத்தூர் ரெடிமேடு ஆடை தயாரிப்பு, கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் வளர்ச்சி வேகமாக இருப்பதே இதற்குக் காரணம். தவிர, குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலை களுக்கு ஆதாரமாக தாமிரபரணி ஆறும் தூத்துக்குடிக்கு நிலையான ரியல் எஸ்டேட் அந்தஸ்த்தை அளித்திருக்கிறது.

இதற்கிடையில் 'சேது சமுத்திரத் திட்டம் வந்தால், தூத்துக்குடித் துறைமுகம் மூலமாகத் தமிழ்நாடே கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியை அடையும்’ என ஏக விளம்பரம் ஆனபோது, மாவட்டம் கடந்து, மாநிலம் கடந்து, கடல் கடந்தும்கூட வெளியிடத்துக்காரர்கள் இந்த மாவட்டத்தில் நிலம் வாங்க வரிசையில் காத்துக் கிடந்தனர். தொழில் ஆர்வத்தில் திரட்டப்பட்ட அந்தத் தொகையே இந்தப் பகுதி நிலம் விலையேற்றதுக்குக் காரணமாக அமைந்தது. இதனால் இந்தப் பகுதியில் பல நில உரிமையாளர்கள் கோடீஸ்வரர்களாக மாறினார்கள்.

ஆனால், இந்த பரபரப்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை. இப்போது பல்வேறு காரணங்களால் ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. நிறையபேர் அந்தத் தொழிலை விட்டு வேறு தொழில் செய்யப் போய்விட்டார்கள். இதுகுறித்து பொதிகை ரியல் எஸ்டேட் உரிமையாளரான டேவிட் பிரபாகரனிடம் பேசினோம்.

''தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் பிரபலமடையும் முன்பே நாங்கள் இந்தத் தொழிலில் இருக்கிறோம். ஆனால், இப்போது சேது சமுத்திரத் திட்டம் கேள்விக்குறியாகிவிட்டது. சொத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பு ஏற்றம், சொத்து வாங்குபவர்களை அதிகம் பாதித்திருக்கிறது. மேலும், பவர் ஆஃப் அட்டர்னிக்கான கட்டணமும் கண்மூடித்தனமாக ஏற்றப்பட்டிருப்பதால், ரியல் எஸ்டேட் தொழில் ரொம்பவும் டல்தான். நிலத்துக்குப் பதிலாக, இப்போது தங்கத்தை வாங்கி ஸ்டாக் வைக்கிறார்கள். எவ்வளவு காலம்தான் இந்தத் தொழிலை நம்பி இருப்பது என்று தெரியவில்லை'' என்றார்.

தனியார் சர்வேயரும் கட்டுமான கான்ட்ராக்டருமான என்.பாஸ்கரிடம் பேசினோம். ''சேது சமுத்திரத் திட்டம் மட்டுமல்ல, நிலம், வீடு பரிமாற்றத்துக்கான அங்கீகாரம் பெறுவதற்கும் நிறைய செலவு, கெடுபிடி இருப்பதால், மக்கள் திணறுகிறார்கள். அப்ரூவல் வாங்குவது கிராம பஞ்சாயத்துப் பகுதிகளில் கொஞ்சம் சுலபமாக இருக்கிறது. மாநகராட்சி பகுதியில் ஏகப்பட்ட கெடுபிடி. வெளியில் சொல்லமுடியாத நிறைய சடங்கு, சம்பிரதாயங்கள் அங்கே இருக்கிறது. தூத்துக்குடி புறநகர்ப் பகுதிகளான புதுக்கோட்டை, கூட்டாம்புளி, கூட்டுடன்காடு, புதியம்புத்தூர், செந்திலாம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் லேஅவுட்களில் ஓரளவுக்கு விற்பனை நடந்து வருகிறது. தூத்துக்குடியைச் சுற்றி தொழிற்சாலைகளும் பவர் பிளான்ட்டுகளும் நிறைய வந்துவிட்டதால், மக்கள் புறநகர்களையே அதிகம் விரும்புகிறார்கள்'' என்றார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பிரமுகரான முரளிதரனிடம் பேசினோம். ''நில மோகத்தோடு வந்தவர்களிடம் சில புரோக்கர்கள் அடுத்தப் பத்து வருஷத்துக்குப் பிறகு சொல்ல வேண்டிய விலையை இப்பவே சொல்லி விற்றுவிட்ட னர். அதுதான் நாளடைவில் இந்தத் தொழில் நலிந்துபோனதுக்கு முக்கிய காரணம். வீடு கட்ட நினைப்பவர்கள் மட்டுமே நிலம் வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளை இந்த ஆட்சியாளர்கள் முடக்க நினைப்பதால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி அதில் தொழில் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் பயப்படுகிறார்கள். பெரிய அளவில் நிலம் வாங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து போனதால்தான் இந்தத் தொழிலே குலைந்துபோனது. ஏதோ கேட்பவர்களுக்கு ஒவ்வொரு இடமாக கூட்டிக்கிட்டுப் போய்க் காண்பித்து விலைபேசி விற்கும் ஆர்ப்பரிப்பில்லாத சாதாரண நிலை இருந்து வருகிறது'' என்றார்.

சிறிய அளவில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்துவரும் பில்டர் கா.சதாவிடம் பேசினோம். ''எங்களைப் போன்றவர்கள் ஒன்று அல்லது ரெண்டு வீடுகளைக் கட்டி விற்றுக்கொண்டே இருக்கிறோம். பெரிய அளவில் அதிக எண்ணிக்கையில் வீடுகளைக் கட்டி விற்க முயற்சி செய்வது கடுமையான சுமையாகிவிடுகிறது. கடன் வாங்கிச் செய்திருக்கும் முதலீடு மீதான வட்டி தலைக்கு மேலே போய் மூழ்கடித்துவிடு கிறது. அதைத் தவிர்க்க, இதுபோன்று சிறிய அளவில் செய்துவரும் தொழில் நிரந்தரமானதாக இருக்கிறது. ஸ்டேட் பேங்க் காலனி, முத்தம்மாள் காலனி போன்ற பகுதியில் கட்டப்படும் வீடு களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.

லேஅவுட் மனை மற்றும் வீடு கட்டி விற்பனை செய்துவரும் ஜே.கே.ஆர் பில்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முருகன், ''கட்டுமான பொருட்களின் விலை கடுமையான அளவு ஏறிவிட்டதால், இப்போது எதையுமே சாதாரணமாகச் செய்ய முடியவில்லை'' என்றார்.

தெய்வச்செயல்புரம், புதியம்புத்தூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதியில் மாத தவணையில் மனைக்குப் பணம் கட்டும் திட்டங்கள் நடுத்தர வருமான பிரிவினரின் ஆதரவுடன் நடந்துவருகிறது. இவை நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களாக இருக்கின்றன.

தூத்துக்குடியைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால், வெளியூர், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அதில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தூத்துக்குடி போல்டன்புரம், தனசேகரன் காலனி போன்ற பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார்கள். அதேபோல் ஏபிசிவி சிட்டி டவர், கே.ஜி அப்பார்ட்மென்ட் போன்ற ஒன்றிரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டி விற்கப்பட்டிருக்கிறது.

விசாலமான நிலப்பரப்பு இன்னமும் ஏராளம் இருப்பதால், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு தூத்துக்குடியில் அதிகத் தேவை இல்லை. அவ்வாறு அவசியப்படும் போது கட்டுவதற்கு ஏற்ற இடங்கள் புதுக்கோட்டை பகுதியில் இருக்கிறது. மில்லர்புரம் ஹவுஸிங் போர்டு, கதிர்வேல் நகர் பகுதி தவிர, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நிலத்துக்கு வாய்ப்பில்லை. மாநகராட்சியை ஒட்டிய மாப்பிள்ளையூரணி, தாள முத்துநகர், சங்கரபேரி, மீளவிட்டான் பகுதியில் மனைகள் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில், வரும் ஆண்டுகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட சரக்கு கையாளும் தொழில் செய்பவர்களுக்கு கிட்டங்கி (குடோன்) அமைப்பதற்கு வசதியாகக் கோரம்பள்ளம் புதுக்கோட்டை, தட்டப்பாறை விலக்கு புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் புதியம்புத்தூர், தூத்துக்குடி பழையகாயல், முத்தையாபுரம் அத்திமரப்பட்டி புதுக்கோட்டை, சிறுப்பாடு சவேரியார்புரம் கூட்டாம்புளி, புதுக்கோட்டை சேர்வைகாரன்மடம் சிவத்தையாபுரம், புதுக்கோட்டை தேரிரோடு சாயர்புரம், வாகைக் குளம் கட்டாலங்குளம் சாயர்புரம், வாகைக்குளம் செக்காரக்குடி, புதுக்கோட்டை பேரூரணி செக்காரக்குடி மற்றும் தூத்துக்குடி எட்டையாபுரம் இடையே நிலங்கள் இருக்கிறது.

தூத்துக்குடியைப் பொறுத்தவரையில், மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் எல்லாம் தற்காலிகமானது தான். சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றால், தூத்துக்குடியை சுற்றிலும் ரியல் எஸ்டேட் தொழிலும் நிலத்தின் விலையும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிடும்.

படங்கள்: ஏ.சிதம்பரம்

கட்டி விற்கப்படும் வீடுகளின் விலை

தூத்துக்குடி நகர்ப் பகுதியில் ஒன்று அல்லது ஒன்றேகால் சென்ட் வரையிலான இடத்தில் 900 சதுர அடியில் வீடு கட்டி ரூ.17 லட்சம் வரையில் விற்கப்படுகிறது. தூத்துக்குடி நகருக்கு வெளியில், இரண்டரை சென்ட் நிலத்தில் 500 ச.அடி வீடு கட்டி சுமார் ரூ.17 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. அப்பார்ட்மென்ட் வீடுகளின் விலையும் இதை ஒட்டியே இருக்கிறது.

தூத்துக்குடி

(நிலம் சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)

கோரம்பள்ளம் : 3.5 4 லட்சம்

அந்தோணியார்புரம் : 1.5 2 லட்சம்

மறவன்மடம் : 1.4 2 லட்சம்

ராமநாச்சியார்புரம் : 30 40 ஆயிரம்

செந்திலாம்பண்ணை : 45 50 ஆயிரம்

தட்டப்பாறை : 40 50 ஆயிரம்

புதியம்புத்தூர் : 40 ஆயிரம் 4 லட்சம்

புதுக்கோட்டை : 30 ஆயிரம் 2 லட்சம்

கூட்டாம்புளி : 40 ஆயிரம் 1 லட்சம்

சேர்வைகாரன்மடம் : 30 60 ஆயிரம்

வாகைக்குளம் : 50 ஆயிரம் 1.2 லட்சம்

முடிவைதானேந்தல் : 50 ஆயிரம் 1 லட்சம்

கூட்டுடன்காடு : 50 70 ஆயிரம்