Published:Updated:

ரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்!

தேனி ஸ்பாட் ரேட் நிலவரம்

ரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்!

தேனி ஸ்பாட் ரேட் நிலவரம்

Published:Updated:

தேனி மாவட்டம், பாசக்கார தாய் மண்ணான மதுரை மாவட்டத்திலிருந்து ஜூலை 7, 1996ம் ஆண்டு, வைகை வீரன் அழகுமுத்து மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டு, பின்பு தேனி மாவட்டமாகத் திருத்தியமைக்கப்பட்டது. சில்லென்ற சுத்தமான காற்று, முழுக்க முழுக்க அழகிய வயல்வெளிகள், தோட்டங்கள் நிறைந்து காணப்படும் ஒரு பசுமையான மாவட்டம்தான் தேனி.

விவசாயம், அதைச் சார்ந்த வர்த்தகம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் காணப் படும் மாவட்டமாகவும் அமைந்திருப்பதால், ரியல் எஸ்டேட் கடந்த ஏழு ஆண்டுகளாகத்தான் வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

ரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காணப்படும் அழகிய மாவட்டம் இது. தேனி மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக மதுரை மாவட்டம், தென் கிழக்கு எல்லையாக விருதுநகர் மாவட்டம், வடக்கில் திண்டுக்கல் மாவட்டம், மேற்கில் கேரளத்தின் இடுக்கி ஜில்லா இருக்கிறது. காபி தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, பருத்தி நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழிற்சாலைகள், காற்றாலைகள் இங்கு அதிகம்.

தேனி மாவட்டத்தில் சுருளித் தீர்த்தம், கும்பக்கரை, சின்னச் சுருளி எனும் வற்றாத அருவிகளும், ராமக்கல் மெட்டு, மேகமலை  மலைப்பகுதி, குரங்கணி, போடி மெட்டு, மஞ்சளாறு அணை, வைகை அணை, சண்முகநதி அணை, சோத்துப்பாறை அணை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

ரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்!

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம், ராகு-கேது பரிகாரஸ்தலமான காளத்தீஸ்வரர் ஆலயம், வீரபாண்டி கௌமாரி ஆலயம், மாவூற்று வேலப்பர் ஆலயம், பித்ரு கடன் தீரும் சுருளி-பூதநாராயண பெருமாள் கோயில், தேவதானபட்டி - மூங்கிலணை காமாட்சி அம்மன் ஆலயம் என்று பிரசித்தி பெற்ற ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த மாவட்டமாகவும் விளங்குகிறது. இதனால் சுற்றுலாவாசிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இங்கு உணவகங்கள், தங்கும் விடுதிகள் கட்டுபவர்களுக்குத் தேனி நகரம் ஒரு சிறந்த ஜங்ஷன் பாயின்ட் என்பது மறுக்கமுடியாத உண்மை.

அதுமட்டுமின்றி, தேனி மாவட்டத்தை ஒரு மினி கோடம்பாக்கம் என கூறலாம். ஏனெனில், ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு ஏரியாக்களிலாவது ஷூட்டிங்களைகட்டும். ஏனெனில், இங்கு மற்ற இடங்களில் ஆகும் செலவைவிட, அவுட்டோர் சூட்டிங்குக்கு கம்மியான வாடகையும், அதிக லொக்கேஷன்கள் அருகிலிருப்பதும், டப்பிங் தியேட்டர்களும், சினிமா சார்ந்த தொழில் செய்பவர்களும் அதிகம் இருப்பதுவே ஒரு காரணம்.

இப்படி பலதரப்பட்ட கூறுகள் ஒருங்கே அமையப்பட்ட தேனி மாவட்டத்தின் ரியல் எஸ்டேட் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, 15 வருடங்கள் ரியல் எஸ்டேட் அனுபவமுள்ள வி.சி.வி. பில்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வெ.சர்ச்சிலுடன் பேசினோம்.

‘‘ஏப்ரல், 2012-ம் வருடத்துக்குப் பின், அரசின் கைடுலைன் மதிப்பு அதிகரித்து. இது மனை வாங்கும் நடுத்தர மக்களை மிகவும் கலங்கடித்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, வெளிநாட்டில் வாழ்பவர்கள் அதிகமாக, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் மாவட்டமாக தேனி இருந்திருக்கிறது. இப்போது பத்திரச் செலவு அதிகரித்ததால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தேனியை ஒட்டி அதிகச் சுற்றுலா ஸ்தலங்கள் இருந்தும், அதை இணைக்கச் சரியான போக்குவரத்து வசதி இல்லை. இவை ரியல் எஸ்டேட் துறை பின்தங்கக் காரணங்களாக இருக்கின்றன’’ என்றார்.

ரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்!

தேனி மாவட்டத்தின் முக்கிய முகவரான ஏ.செல்வராஜுடன் பேசினோம். “கடந்த நான்கு வருடங்களாக தேனி மாவட்டம், மிகப் பெரிய வறட்சியைச் சந்தித்துள்ளது. இது இங்குள்ள விவசாயி களைக் கலங்கடித்துவிட்டது. வருமானம் இல்லை என்பதால் பலரின் ரியல் எஸ்டேட் ஆசை நிறைவேற வில்லை. இதனால் இங்கு ரியல் எஸ்டேட் நிலவரம் பலத்த அடியைச் சந்தித்துள்ளது” என்றார்.

ரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்!

அதேபோல், தற்போது நிலம் வாங்கிய சாமானியரான ஜி.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “முன்பெல்லாம் பவர் மூலம் குறைந்த கட்டணத்தில் சொத்துகளை மாற்றும் திட்டம் இருந்தது. ஆனால், இப்போது அதிகச் செலவாகிறது. அதனால், தேவைக்கு வாங்குவது நடக்கிறது. வாங்கிக் குறுகிய காலத்தில் விற்று லாபம் பார்ப்பது என்பது இப்போது அரிதாக இருக்கிறது” என்றார்.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டதால், தேனியில் சாமானியர்களின் மனை வாங்கி வீடு கட்டவேண்டும் என்ற நிலை தகர்ந்துவிட்டது. மேலும், இங்கு அபார்ட்மென்ட்டுகள் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

ரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்!


 அதிக மக்கள் பத்திரப்பதிவுக்கு ஏற்படும் செலவுகள் குறித்தும், பவர் ஆஃப் அட்டர்னி செலவு அதிகரிப்பிலும் சிக்கித் தவிக்கின்றனர். இனி, விவசாயம் சார்ந்த நிறையத் தொழிற்சாலைகள் தேனி மாவட்டத்தில் வந்தால் மட்டுமே, தேனி மக்களின் நிலம் வாங்கும் ஆசை வேகமாக நிறைவேறும்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ம.மாரிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism