Published:Updated:

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை

Published:Updated:
'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை
##~##
சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வகங்கை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது மருது பாண்டிய மன்னர்களும், வீரமங்கை வேலு நாச்சியாரும்தான். வீரத்திலும், தீரத்திலும் சிறந்து விளங்கிய நகரம்தான் என்றாலும், இதுநாள்வரை பொருளாதார பக்கபலங்கள் சிவகங்கை சீமைக்கு சாதகமாக இருந்ததில்லை. பக்கத்து ஊரான காரைக்குடியைப் போல பெரிய மாற்றங்களைச் சந்திக்க முடியாவிட்டாலும், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

ஒரு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிற ஊரின் வளர்ச்சி இவ்வளவுதானா என்கிற கேள்வி அங்கே இறங்கிய அடுத்த நொடியே வந்துவிடுகிறது. மையப் பேருந்து நிலையத்தில் காலை எட்டு மணிக்கு திரளும் மக்கள் கூட்டம் பத்து, பதினோரு மணிக்கெல்லாம் சுத்தமாக அடங்கி விடுகிறது. மீண்டும் மதியம் மூன்று மணிக்குத்தான் அடுத்த பரபரப்பை பார்க்கலாம்! அதுவும் இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குள்ளாகவே அடங்கி விடுகிறது. ஒரு கிராமப்புறத்துக்கான அத்தனை லட்சணங்களோடு அமைதியாக இருக்கிறது சிவகங்கை.

''விவசாயம்தான் பிரதான தொழில் வாய்ப்பு என்றாலும், கண்மாய் பாசனம் என்பதால் அதுவும் பெரிதாகக் கைகொடுப்பதில்லை. தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளும் பெரிதாக எட்டிப் பார்க்கவில்லை. பக்கத்திலிருக்கும் மானா மதுரையில் தொழிற்பேட்டை இருக்கிறது. ஆனால், 300 பேருக்கு மேல் அங்கு வேலைவாய்ப்பு கிடையாது என்பதுதான் நிலைமை. ''இது வானம் பார்த்த பூமி; இந்த பகுதியின் தேவைக்கேற்ற அரசின் திட்டங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்'' என்கிறார், சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான குருசாமி மயில்வாகனன்.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை

மானாமதுரை பக்கம் பாசன வசதிகள் இருப்பதால் கரும்பு சாகுபடி செய்திருக்கிறார்கள். இதற்கேற்ப படமாத்தூரில் சர்க்கரை ஆலையும் இருக்கிறது. சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிளகாய், வேர்க்கடலை மற்றும் நெல் சாகுபடிகளும் நீர் ஆதாரத்தைப் பொறுத்தே நடக்கிறது. செம்மறி ஆடு வளர்ப்பு பரவாயில்லை. வறட்சி போன்ற காரணங்களால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூலி வேலைக்குச் செல்பவர் களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை

சிவகங்கையைச் சுற்றி கிராஃபைட் கனிமம் அதிக அளவில் இருப்பதால், அதை வெட்டி எடுக்கும் திட்டங்களை அரசு தொடங்கினால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும், ஊரும் கொஞ்சம் வளர்ச்சியைப் பார்க்கும் என்கிறார்கள் இவ்வூரில் சிலர்.

''பெயர்தான் மாவட்ட தலைநகர்... மத்தபடி சொல்லிக்கிற மாதிரி ஒரு வசதியும் கிடையாது,  ஆத்திர அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு போகணும்னாலும்கூட இங்கிருந்து மதுரைக்குத்தான்  ஓடணும்'' என்று பலரும் வருத்தப்படுகிறார்கள். அரசு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், புதிய கட்டடங்களுக்கான கட்டுமான வேலைகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதுபோல பாதாளச் சாக்கடை திட்ட வேலைகளும் பல வருடங்களாக நடந்து வருவதால் நேரு வீதி, காந்தி வீதி, மானாமதுரை ரோடு போன்ற முக்கிய சாலைகள்கூட குண்டும் குழியுமாகத்தான் கிடக்கிறது.

இதுபோன்ற பல மைனஸ் காரணங்களால் வெளியூர்களிலிருந்து இங்கு வந்து வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் இங்கு தங்குவது கிடையாது என்கிறார்கள். சிவகங்கையிலிருந்து மதுரைக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்பது இன்னொரு காரணம். குறிப்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மதுரைக்கு நேரடியாகவே ஒரு பேருந்து இயக்கப்படுகிறதாம்.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - சிவகங்கை

''எல்லா வசதிகளும் இருந்தும் கலெக்டர் ஆபீஸில் வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானவங்க சிவகங்கையில் தங்குறதே கிடையாது. அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் இங்க தங்கினாத்தானே ஊரு வளரும்; பணப் புழக்கமும் பெருகும்'' என்று ஆதங்கப்படுகிறார் பனங்காடி வழியைச் சேர்ந்த விவசாயி சண்முகம்.

நகர வளர்ச்சி என்று பார்த்தால் ரியல் எஸ்டேட் தொழிலும், வட்டிக்கு விடுவதும்தான் இப்போது வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது என்கிறார்கள். நகரைச் சுற்றி எல்லா இடங்களிலும் வீட்டுமனைகள் வாங்கமுடியும் என்றாலும், மதுரை வழியிலும், மேலூர் வழியிலும்தான் முறையான லே-அவுட்களைப் பார்க்க முடிகிறது. வெளியூர்க்காரர்களையும் ஈர்க்கும் விதமாக சாலை வசதி போன்ற பக்கா ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார்கள் லே-அவுட்களில். ஆனால், சிவகங்கையில் எல்லா இடங்களிலுமே நிலத்தடி நீர் சுமார் 150 அடிக்கும் கீழேதான் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மதுரை, இளையான்குடி, மானாமதுரை, மேலூர், திருப்பத்தூர், காளையார்கோவில் போன்ற நகரங்களுக்குச் செல்லும் எல்லா வழிகளிலுமே நகர விரிவாக்கம் ஆவரேஜ்-ஆக இருக்கிறது. காமராஜர் காலனி, பொதிகை நகர், காஞ்சரங்கால் போன்ற ஏரியாக்கள் விலை நிலவரத்தில் டாப் ரேட்டில் உள்ளது. பெருமாள்பட்டி, பாரதி நகர், சக்கந்திடல், காட்டுக் குடியிருப்பு போன்ற ஏரியாக்களில் விலை ஆவரேஜ் என்று சொல்லலாம். சென்ட் கணக்கில்தான் மனைகள் கணக்கிடப்படுகின்றன.  

''ரியல் எஸ்டேட் நிலவரத்தைப் பொறுத்தவரை மற்ற ஊர்களைப் போல கிடையாது. வெளியூர்க்காரர்கள் யாரும் இங்க வந்து இடம் வாங்குவது கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. உள்ளூர்க்காரர்கள் வாங்கினால்தான் உண்டு. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அங்கு சம்பாதிப்பதை இங்கு முதலீடு செய்கின்றனர்'' என்று சொல்லலாம் என் கிறார் எஸ்.கே.என்ஜினீயரிங் சிவக்குமார்.

'சிவகங்கை சீமை மண்ண எடுத்து பொறந்த குழந்தைக்குப் பூசிவிட்டா வீரம் தன்னால வருமில்ல'' என்றார், ஒரு பெரியவர். கூடவே விவேகமான தொழில் நடவடிக்கைகள் வரும்பட்சத்தில்தான் இந்த வீரமண்ணுக்கும் நல்ல விலையிருக்கும்.

நீரை.மகேந்திரன்.
படங்கள்: பா.காளிமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism